திரைப்பட துறையைத் தாண்டி ரேஸிங்… ரேஸிங்கைத் தாண்டி பிராண்டிங்! ரிலையன்ஸுடன் நடிகர் அஜித்குமார் அணியின் புதிய பயணம்!”
திரைப்பட துறையைத் தாண்டி ரேஸிங்… ரேஸிங்கைத் தாண்டி பிராண்டிங்! ரிலையன்ஸுடன் நடிகர் அஜித்குமார் அணியின் புதிய பயணம்!
சென்னை 02 நவம்பர் 2026 நடிகர் அஜித்குமாரின் திரைப்பயணத்தைத் தாண்டி, மோட்டார் பந்தய உலகிலும் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி வரும் அஜித்குமார் ரேஸிங் அணி, தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் நுகர்வோர் தயாரிப்புப் பிரிவான Reliance Consumer Products Limited (RCPL) நிறுவனத்துடன் புதிய பிராண்ட் கூட்டணியில் இணைந்துள்ளது.
ரிலையன்ஸின் ‘Independence’ பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பிஸ்கட் தயாரிப்புகளில், ‘Independence Power Up’ தயாரிப்பின் விளம்பரக் கூட்டணிக்காக அஜித்குமார் ரேஸிங் அணியுடன் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இந்த விளம்பரத்தில் நடிகர் அஜித்குமாரின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளதால், அவரது ரசிகர்கள் மத்தியில் இந்தப் புதிய கூட்டணி கவனம் பெற்றுள்ளது.
‘Independence’ பிராண்டின் கீழ் மொத்தம் 9 வகையான பிஸ்கட் தயாரிப்புகள், 28 புதிய SKU வகைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. :
Independence Power Up
Independence Butter Bliss
Independence Milky Power
Independence Marie Prime
Independence Coco Vanilla & Chocolate
Independence CremYum Orange
Independence CremYum Choco
Independence Coco Bourbon
Independence Glucose Boost
இவற்றில் ‘Power Up’ பிஸ்கட், பால், குளுக்கோஸ் மற்றும் புரதச் சத்துகளின் கலவையுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிஸ்கட் வகைகள் ₹5 விலையிலான சிறிய பேக்குகள், ₹10 விலையிலான பகிர்ந்து உண்ணும் பேக்குகள் மற்றும் ₹40 முதல் ₹125 வரையிலான பெரிய குடும்பப் பேக்குகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நவம்பர் 2 முதல் தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்குக் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடைகள், நவீன சில்லறை விற்பனை நிலையங்கள், இணையவழி வர்த்தகம் மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் உள்ளிட்ட பல்வேறு விற்பனை வழிகளிலும் இவை கிடைக்கவுள்ளன.
திரைப்படங்களில் மட்டுமின்றி, சர்வதேச மோட்டார் பந்தயப் போட்டிகளிலும் கவனம் ஈர்த்து வரும் அஜித்குமார், தனது ரேஸிங் அணியின் மூலம் ஒரு முன்னணி நுகர்வோர் பிராண்டுடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் பந்தயத்தின் வேகம், செயல்திறன் மற்றும் உற்சாகத்தை ‘Power Up’ தயாரிப்பின் விளம்பர அடையாளத்துடன் இணைப்பதே இந்தக் கூட்டணியின் நோக்கமாகக் கூறப்படுகிறது.
திரையுலக நட்சத்திரங்கள் விளம்பரங்களில் தோன்றுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணியின் பெயரில் உருவாகியுள்ள இந்தப் பிராண்ட் கூட்டணி தனித்துவமான கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்தப் புதிய முயற்சி தமிழ்நாட்டில் ‘Independence’ பிராண்டின் சந்தை விரிவாக்கத்திற்கு எந்த அளவுக்கு உதவும் என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்!












