ஆதார் திரை விமர்சனம் ரேட்டிங் :- 4 / 5.

நடிகர் நடிகைகள் :-  கருணாஸ், அருண்பாண்டியன், ரித்விகா, இனியா, உமா ரியாஸ் கான், திலீபன், பாகுபலி பிரபாகர்,
மற்றும் பலர்.

எழுத்து: இயக்கம் :- ராம்நாத் பழனிகுமார்.

ஒளிப்பதிவு :- மகேஷ் முத்துசுவாமி.

படத்தொகுப்பு :- R.ராமர்.

இசை :- ஸ்ரீகாந்த் தேவா.

தயாரிப்பு :- வெண்ணிலா கிரியேஷன்ஸ்.

ரேட்டிங் :- 4 / 5.

 

நடிகர் கருணாஸ் நடிப்பில் அம்பாசமுத்திரம் அம்பானி’ மற்றும் திண்டுக்கல் சாரதி இரண்டு திரைப்படத்தை இயக்கியதின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் தமிழ் திரைப்பட உலகில் முத்திரை பதித்தார்.

அடுத்ததாக நடிகர் ஜீவா நடிப்பில் திருநாள் திரைப்படத்தை இயக்கினார் இயக்குனர் ராம்நாத் பழனிகுமார்.

நடிகர் கருணாஸ் நடிப்பில் செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாகும்  ‘ஆதார்’ எனற அருமையான நல்ல திரைப்படத்தை இயக்கியுள்ளார்
இயக்குனர் ராம்நாத் பழனிகுமார்.

சென்னைக்கு பிழைப்புத்தேடி வந்த கதையின் நாயகன் கருணாஸ் மற்றும் தனது  நிறை மாதம் கர்ப்பிணியாக இருக்கும் மனைவி ரித்விகாவுடன் கட்டிடம் கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள்.

திடீரென்று கதையின் நாயகன் கருணாஸின் மனைவி ரித்விகாவுக்கு பிரசவவலி அதிகமானதால் அரசு குழந்தை பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்.

அங்கு பிரசவ வார்டு என்பதால் ரித்விகாவுக்கு வேண்டிய உதவிகள் செய்வதற்காக ஒரு பெண் என்பதால் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் இனியா.

இந்நிலையில் தான் வேலை செய்யும் கட்டத்திற்கு சென்று மேஸ்திரி இடம் வேலை பார்த்த சம்பளத்தை வாங்கிக் கொண்டு வருவதாக கூறிவிட்டு செல்கிறார் கதையின் நாயகன் கருணாஸ்.

தன் மனைவி ரித்விகா அனுமதிக்கப்பட்டிருந்த பிரசவ வார்டில் கதையின் நாயகன் கருணாஸ் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வந்து பார்க்கும்போது தன் மனைவி ரித்திகாவை காணவில்லை.

தனக்கு பிறந்த குழந்தை மட்டும் அந்த வார்டில் இருக்கிறது.

தனது மனைவி ரித்விகா பாதுகாப்பாக இருந்த இனியாவையும் காணவில்லை.

தனது மனைவி ரித்விகா துணையாக இருந்த இனியா மருத்துவமனையின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் காவல்துறையினர் பிணமாக மீட்டெடுக்கிறார்கள்.

இதனை அடுத்து தனக்கு பிறந்த குழந்தையை தூக்கிக் கொண்டு காவல் நிலையம் தன் மனைவி ரித்விகா காணவில்லை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுக்கிறார் கதையின் நாயகன் கருணாஸ்.

அப்போது புகாரை பதிவு செய்யும் ஏட்டு உனது மனைவி போட்டோ ஏதாவது இருக்கிறதா? என கேட்க ரித்விகாவின் ஆதார் அட்டையை கொடுக்க அதை தனது கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

காணாமல் போன ரித்விகாவை காவல் துறையினர் கண்டு பிடித்தார்களா? கண்டு பிடிக்கவில்லையா? காணாமல் போன ரித்விகாவும் கதை நாயகன் கருணாஸ் இருவரும் ஒனறு சேர்ந்தார்களா? சேரவில்லையா? என்பதுதான் ஆதார் திரைப்படத்தில் மீதிக்கதை.

இந்த ஆதார் திரைப்படத்தில் கதையின் நாயகனாக கருணாஸ் நடித்திருக்கிறார்.

கருணாஸ் பச்சமுத்து கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்.

பச்சமுத்தாக வாழ்ந்துள்ள கதையின் நாயகன் கருணாஸ் கைக்கழந்தையோடு தனது மனைவி ரித்விகாவை கண்டு பிடித்து தருமாறு காவல்துறை அதிகாரிகளிடம் கெஞ்சுவதும் அழுவதும் அவருடைய நடிப்பு மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் தன் மனைவி ரித்விகாவை நினைத்து ஏங்குவது அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராட முடியாமல் தனது இயலாமையை நினைத்து கண்ணீர் சிந்துவதும் என அனைத்து காட்சிகளுக்கு தகுந்தவாறு தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் கதையின் நாயகன் கருணாஸ்.

இந்த ஆதார் திரைப்படத்தில் ரித்விகா கதையை நாயகியாக நடித்திருக்கிறார்.

கதையின் நாயகி ரித்விகா குறைவான காட்சிகள் வந்தாலும் மனதில் பதிகிறார்.

முதல் நிலை காவலராக நடித்துள்ள அருண் பாண்டியன் மிகவும் நியாயமாகவும் பொறுமையாகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

காவல்துறையில் நேர்மையான அருண் பாண்டியனை போல் நல்ல காவலராக கண்டிப்பாக வாழ முடியாது என தற்கொலை செய்து கொள்வது காவல் துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு இந்த நிலை தான் வருமோ என நினைக்கத் தோன்றுகிறது.

காவல்துறை உயர் அதிகாரியாக நடித்துள்ள உமா ரியாஸ் காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ள திமிரோடு மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்.

காவல்துறை உயர் அதிகாரியாக நடித்துள்ள உமா ரியாஸ் புகைப்பிடிக்கும் காட்சியை தவிர்த்து இருக்கலாம்.

என ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட அவரவர் கதாபாத்திரங்களை போட்டி போட்டு கொண்டு நடித்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

கருணாஸ் நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்து வந்தவர்கள் இனி குணச்சித்திர நடிகராக கருணாஸை திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் பாராட்டுவார்கள்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை மிகவும் அருமையாக கொடுத்திருக்கிறார்.

தேன் மிட்டாய் மாங்காய் துண்டு நீதான் கண்ணம்மா பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம்.

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் ஒலிப்பதிவு அருமை.

இரவு நேரம் காட்சிகள் அதிகமாக இருப்பதால் லைட்டிங் இல்லாமல் மிகவும் அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

ஆர் ராமரின் படத்தொகுப்பு திரைப்படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

காணாமல் போன கதை நாயகன் கருணாஸின் மனைவி ரித்விகாவை கண்டு பிடிப்பார்களா என்ற எதிர்பார்ப்புடன் இருக்கையின் நுனியில் அமர்ந்து திரைப்படம் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் ராம்நாத் பழனிகுமார்.

திரைப்படம் பார்க்கும் போது ஒரு காட்சி முடிந்ததும் அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என யூகிக்க முடியாத வாறு திரைக்கதை அமைப்பு மிகவும் அருமையாக இயக்கி இருக்கிறார்கள் இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார்.

இந்த ஆதார் திரைப்படத்தில் ஆட்சியும் அதிகாரமும் பணமும் இருந்தால் நீதி நேர்மையை கூட பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம் என்ற இன்றைய காலகட்டத்தை அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராம்நாத் பழனிகுமார்.

காவல் நிலையத்தில் உள்ள  பெண் காவலர் குழந்தைக்கு பால் கொடுக்கும் காட்சி மிக் அருமை.

காவல்துறையில் உள்ள காவலர்களுக்கு நெஞ்சில் ஈரம் இருக்கிறது என்று கூறியுள்ளது இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் பாராட்டுக்கள்.

மொத்தத்தில் “ஆதார்” திரைப்படம் ஒரு சாமானியன் வாழ்க்கையில் அதிகார வர்க்கத்தின் ஆளுமையை காட்டுகிறது.