விசித்திரன் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.75 / 5

நடிகர் நடிகைகள் :- ஆர்.கே. சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி, இளவரசு, மாரிமுத்து, சுதா சந்திரன், பிரியதர்ஷினி, ஜார்ஜ்,
பகவதி பெருமாள், ஜே பி,
மற்றும் பலர்.

இயக்கம் :- எம்.பத்மகுமார் .

ஒளிப்பதிவு :- வெற்றி மாஹேந்திரன்.

படத்தொகுப்பு :- சதீஷ் சூர்யா.

இசை :- ஜி வி பிரகாஷ் குமார்.

தயாரிப்பு :- பி ஸ்டுடியோஸ்

ரேட்டிங் :- 3.75 / 5

 

இது கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ஜோசப் என்னும் திரைப்படமாக இயக்கி இருக்கிறார்கள்.

மலையாளத் திரைப்பட உலகில் 2018ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பையும் மிகப்பெரிய வெற்றியையும் தந்த இநத ‘ஜோசப்’ திரைப்படத்தை தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த ‘விசித்திரன்’.

மலையாளத்தில் இநத ‘ஜோசப்’ திரைப்படத்தை இயக்கிய பத்மகுமார்தான் தமிழ் மொழி மாற்றத்தையும் இயக்கியுள்ளார்.

மலையாள திரையுலகில் எடுக்கப்படும திரைப்படங்களின் கதை திரைக்கதை கொஞ்சம் மெதுவாகத்தான் நகரும்

அது மலையாள திரையுலகில் உள்ள ரசிகர்களுக்கு பழகிப் போன ஒன்று.

ஆனால், தமிழ் திரையுலகில் உள்ள ரசிகர்கள் இன்னும் இந்த மாதிரியான திரைப்படங்களுக்கு அதிகம் பார்த்து பழகவில்லை.

கதாநாயகன் ஆர்.கே சுரேஷ் போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

பெரிய அதிகாரிகள் கூட கண்டுபிடிக்க முடியாத கொலைக் குற்றங்களை மிகவும் சர்வ சாதாரணமாக கண்டுபிடிக்க கூடியவர் கதாநாயகன் ஆர்.கே சுரேஷ்.

எந்த ஒரு வழக்கையும் தீர விசாரிப்பதில் வல்லவர்.

விபத்தில் இறந்து போன மகள் மற்றும் மனைவி இருவரும் விபத்தில் இருந்துவிட தன்னுடைய வாழ்க்கையை தனிமையில் வாழ்கிறார் கதாநாயகன் ஆர்.கே.சுரேஷ்.

இவர் தற்போது புகைப்பழக்கத்திற்கும் மதுபோதைக்கு அடிமையாக இருந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவரை விட்டுப் பிரிந்து சென்ற மனைவி பூர்ணா, சாலை விபத்தில் சிக்கி இறந்து போகிறார்.

இது விபத்தல்ல கொலை என்று கதாநாயகன் ஆர்கே சுரேஷுக்கு தெரியவருகிறது.

மனைவி மரணத்திற்கான பின்னணியை கதாநாயகன் ஆர்.கே சுரேஷ் தேட ஆரம்பிக்கிறார்.

தனது போலீஸ் நண்பர்கள் மாரிமுத்து, இளவரசு ஆகியோரது உதவியுடன் கண்டுபிடிக்க முயல்கிறார்.

அது ஒரு மெடிக்கல் மாபியா என்பதை அறிந்திருந்தும் தன் உயிரை துச்சமென மதித்து களமிறங்குகிறார்.

இறுதியில் மனைவி பூர்ணாவை கொலை செய்தது யார்? கொலை செய்ததற்கான பின்னணி என்ன? என்பதை கதாநாயகன் ஆர்கே சுரேஷ் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் இநத விசித்திரன் திரைப்படத்தின் மீதிக்கதை

இந்த விசித்திரன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக ஆர்.கே சுரேஷ் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக ஆர்.கே சுரேஷ், மிகவும்
கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்.

Read Also  மீண்டும் ஒரு மரியாதை திரை விமர்சனம். ரேட்டிங் - 2./5

இந்த திரைப்படம் அவரது 13 வருட அனுப நடிப்பிற்கு தீனி போட்டு உள்ளது.

சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார் கதையின் நாயகன் ஆர்.கே.சுரேஷ்.

கதையின் நாயகன் ஆர்.கே சுரேஷ் தன்னை தனித்துவதமான கதாநாயகனாக முன்னிறுத்திக் கொள்ளும் முயற்சியாக இந்த படத்தை மொழி மாற்றம் செய்து நடித்திருக்கிறார்.

நடுத்தர வயது கதாபாத்திரத்தில் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

13 வருட திரைப்படத்துறை அனுபவத்தை நடிப்பில் காண்பித்திருக்கிறார்.

ஆர்.கே சுரேஷ் அவர்களுக்கு தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது.

இழந்த மகள், பிரிந்த மனைவி என ஒருவரது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சோகம் இருக்கும். அவ்வளவு சோகத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

இவருடைய மனைவியாக நடித்திருக்கும் கதையின் நாயகி பூர்ணா, கணவன் மீது பாசம் வைத்திருக்கும் மனைவியாக நடித்திருக்கிறார்.

சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் மற்றொரு நாயகி மதுஷாலினி.

இருவருக்கும் கொஞ்சமான காட்சிகள்தான் என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள்.

மற்ற கதாபாத்திரங்களான இளவரசு, மாரிமுத்து, ஜார்ஜ், பகவதி பெருமாள் ஆகியோரின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு பாடல்கள் அவசியமில்லை இருந்தாலும் ஒரு சில பாடல்கள் உள்ளன.

பின்னணி இசையில் பரபரப்பை கூட்டியிருக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.

ஒளிப்பதிவாளர் வெற்றி வேல் மாஹேந்திரனின் வால்பாறையை வளைத்து வளைத்துப் படமாக்கியிருக்கிறார்.

எடிட்டர் சதீஷ் சூர்யா காட்சிகளின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம்.

ஒரு மருத்துவமனையை மட்டும் ‘மெடிக்கல் மாபியா மையம்’ என்று குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள்.

இதற்கு முன்பு இம்மாதிரியான திரைப்படங்கள் சில வந்திருக்கின்றன.

அவை அனைத்தும் ஆக்ஷன் கதைக்களத்தில் அமைந்த திரைப்படங்கள்.

உணர்வுபூர்வமான ஒரு திரைப்படம்.

இப்படி ஒரு கதை களத்தை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குனர் எம்.பத்மகுமாரை
பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘விசித்திரன்’ திரைப்படம் வித்தியாசமான தியாகி.