கடாவர் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.25 / 5.
நடிகர் நடிகைகள் :- அமலாபால், அருண்ஆதி, அதுல்யா ரவி ஹரிஸ் உத்தமன், ரித்விகா, முனிஷ்காந்த், ராட்சசன் வினோத் சாகர், வேலுபிரபாகர், நிழல்கள் ரவி மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அனுப்.S.பணிக்கர்.
ஒளிப்பதிவு :- அரவிந்த்சிங்.
படத்தொகுப்பு :- ஷான்லோகேஷ்.
இசை :- ரஞ்சின்ராஜ்.
தயாரிப்பு :- அமலாபால் புரோடக்ஷன்ஸ்.
ரேட்டிங் :- 3.25 / 5.
தமிழ் திரைப்பட உலகில் எவ்வளவு திரைப்படங்கள் வந்திருக்கிறது.
அப்படி திரில்லர் திரைப்படமாக வந்திருக்கும் கடாவர் திரைப்படம்.
ஆடை திரைப்படத்திற்கு பிறகு நடிகை அமலா பாலின் கடாவர் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
டிஸ்னி பிளஷ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகி உள்ள கடாவர் திரைப்படம்.
கதாநாயகி அமலாபால்
தடய அறிவியல் துறை நிபுணராக வருகிறார்.
நகரில் தொடர்ந்து நடக்கும் கொலைகளை பற்றி காவல்துறை அதிகாரியான ஹரீஸ் உத்தமன் கொலைகளை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.
இவருக்கு உறுதுணையாக தடய அறிவியல் துறை நிபுணர் கதாநாயகி அமலாபால் தடயங்களை சேகரிக்கும்போது திடுக்கிடும் பல தகவல்கள் கிடைக்கிறது.
இறுதியில் கொலைகளை செய்வது யார்? கொலைக்கான காரணம் என்ன? கதாநாயகி அமலாபால் எப்படி கண்டுபிடித்தார்? என்பதுதான் இந்த கடாவர் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த கடாவர் திரைப்படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருக்கிறார்
கதாநாயகி அமலாபால் முதன் முதலில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆண்கள் தலைமுடியை போல கட்டிங் கண்ணாடி நெற்றியில் விபூதி என்று மாறிப் போயிருக்கிறார்.
அந்தப் பிண அறையில் இறந்த பிணங்களோடு டிபன் சாப்பிடும் அந்த வித்தியாசமான தோற்றத்தில் கதாநாயகி அமலாபால் அறிமுகமாகிறார்.
கதாபாத்திரத்திற்காக தனது அழகான தனது நீண்ட தலைமுடியை வெட்டிக்கொண்டது எந்த ஒரு கதாநாயகிகளும் செய்ய மாட்டார்கள்.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனி கதாநாயகியாக தன்னால் திரைப்படத்தை தன்து தோளில் சுமக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் கதாநாயகி அமலாபால்.
காவல்துறை அதிகாரியாக
ஹரீஸ் உத்தமன் அவருடைய கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.
காவல்துறை துணை ஆய்வாளராக வரும்
முனீஸ்காந்த் கதையோடு கலகலப்பும் செய்கிறார்.
நிழல்கள் ரவி சிறிது நேரம் வந்தாலும் பெரிதாக நடிக்க வாய்ப்பு எதுவும் இல்லை ஆனால் அவருடைய நடிப்பு நிறைவு.
இயக்குனர் வேலு பிரபாகர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதுல்யா ரவி குழந்தை முகத்தோடு வந்து கொடூரமான முறையில் மரணமாவது பரிதாபம்.
ரித்விகா வழக்கம் போல் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார்.
வினோத் சாகரின் கதாபாத்திரம் திரைப்படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
இந்த திரைப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு .
உடற்கூறு ஆய்வு செய்யும் தினவரை எப்படி இருக்குமோ அப்படியே கண் முன் காண்பித்திருக்கிறார்.
ரஞ்சின் ராஜின் பின்னணி இசை படத்திற்கு பலம்.
கடாவர் என்றால் என்ன எதற்கு திரைப்படத்திற்கு கடாவர் என்று பெயர் வைத்தார் இயக்குனர் அனூப் எஸ்.பணிக்கர்.
மருத்துவ கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக தானமாகக் கொடுக்கப்படும் அனாதை பிணங்கள்தான் கடாவர் என்று சொல்லப்படுகிறது.
திரில்லர் கலந்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் மலையாள இயக்குனர் அனூப் எஸ்.பணிக்கர்.
மொத்தத்தில் ‘கடாவர்’ திரைப்படம் திரில்லர் விருந்து.











