நிலை மறந்தவன் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.5 / 5.

நடிகர் நடிகைகள் :- பகத் பாசில், நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன், செம்பன் வினோத், விநாயகன், மற்றும் பலர்.

இயக்கம் :- அன்வர் ரஷீத்.

ஒளிப்பதிவு :- அமல் நீரத்.

படத்தொகுப்பு :- பிரவீன் பிரபாகர் – ரத்தின் ராதா கிருஷ்ணன்.

இசை :- ஜேக்சன் விஜயன், வினாயகன், சுஷின் ஷியாம்.

தயாரிப்பு :- தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ்.

ரேட்டிங் :- 3.5 / 5.

இந்திய திரைப்பட உலகில் இப்படி ஒரு சமூக அக்கறையுள்ள திரைப்படமா என ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வியக்க வைக்கும் ஒரு திரைப்படம் தான் இந்த ‘நிலை மறந்தவன்’.

.மலையாள திரைப்பட உலகில் ‘டிரான்ஸ்’ என்ற பெயரில் வெளி வந்து சக்க போடு போட்ட அந்த திரைப்படத்தை தமிழ் திரைப்பட உலகிற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு நிலை மறந்தவன் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.

மதமாற்றம் என ஏமாந்து கொண்டு இருக்கும் மக்களுக்காக இந்த திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அன்வர் ரஷீத்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பகத் பாசிலின் தந்தை வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்.

கன்னியாகுமரியில் ‘மோட்டிவேஷனல் ஸ்பீச்’ வகுப்புகள், அதாவது ‘ஊக்கமளிக்கும் பேச்சு’ பயிற்சிகளை வழங்குபவர் கதாநாயகன் பகத் பாசில்.

இதனால் வேலையில்லாமல் சுய முன்னேற்ற வகுப்புகளுக்கு சென்று தனது பேச்சுத்திறமையால் ஒரு அடையாளத்தைப் பெறுகிறார்.

தனது ஒரே தம்பியுடன் வாழ்ந்து வரும் கதாநாயகன் பகத் பாசில் மன நோயால் பாதிக்கப்பட்ட இருக்கும் தனது தம்பி தற்கொலை செய்து கொண்டதால் அதையெல்லாம் மறக்க மும்பை செல்கிறார் கதாநாயகன் பகத் பாசில்.

மும்பையில் வேலை தேடும் முயற்சியில் இறங்குகிறார்.

இதன்மூலம் அவருக்கு ஒரு கிறிஸ்துவ அமைப்பில் மதபோதகம் செய்ய வாய்ப்புக் கிடைக்கிறது.

கிறிஸ்துவ மதத்தில் போலியான பாதிரியார்களை உருவாக்கி தான் சார்ந்த அந்த கிறிஸ்துவ மதத்தின் மக்களிடம் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் செம்பன் வினோத் ஜோஸ் இவர்கள் இருவரிடமும் சிக்கிக் கொள்கிறார் கதாநாயகன் பகத் பாசில்.

இந்து மதத்தைச் சேர்ந்த கதாநாயகன் பகத் பாசிலை கிறிஸ்துவ பாதிரியாராக போலியாக மாற்றி மதப் பிரசங்கம் செய்து அந்த மக்களிடம் பணம் பறிக்கும் வேலையைக் கொடுக்கிறார்கள்.

கிறிஸ்துவ மத பிரசங்கம் நடக்கும் மேடையில் அவன் உணர்ச்சிவசமாக பேசுவதைக் கண்டு, பொய்களை நம்பும் கிறிஸ்தவ மக்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள்.

இதனால் அவரின் மதமாற்றம் செய்யும் மத போதகக் கூட்டம் கோடிகளில் புறள்கிரது.

ஒரு கட்டத்தில் மனம் மாறும் கதாநாயகன் பகத் பாசில், எப்படி அந்தக் கூட்டத்தினை பொது மக்களுக்கு காட்டிக்கொடுக்கிறார்? எதனால் இவர் மனம் திரும்புகிறார்?

Read Also  ஏமோஜி இனையத் தொடர் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.75 / 5

இதனால் எப்படி பாதிப்புக்குள் ஆகிறார்கள்? என்பதே மீதிகதை.

ஒரு கட்டத்தில் தான் செய்வது பாவம் என உணர்கிறார் பகத் பாசில்.

அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த நிலை மறந்தவன் திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த நிலை மறந்தவன் திரைப்படத்தில் பகத் பாசில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

‘அற்புதக் கூட்டம்’ நடத்தும் போலி பாதிரியாராக அற்புதமாக உருமாற்றியிருக்கிறார் கதையின் நாயகன் பகத் பாசில்.

தனது தம்பியை காப்பாற்ற முயற்சிக்கும் காட்சிகளில் அவருடைய நடிப்பு மிக மிக அருமையாக இருக்கிறது.

கதையின் நாயகன் பகத் பாசிலின் எதார்த்த நடிப்பால் நம்மை வசப்படுத்துகிறார்.

போலி பாதிரியாராக நடித்திருக்கும் பகத் பாசில் பாதிரியாராக செய்யும் தவறுகளை அவரின் நடிப்பின் மூலம் எதார்த்தமாக வெளிபடுத்தியிருக்கிறார்.

நஸ்ரியாவின் அழகான நடிப்பு அனைவரின் கைத் தட்டல்களையும் பெறுகிறது.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும், அவருடன் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பன் வினோத்தும் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

மலையாள திரைப்பட உலகின் நடிகர் விநாயகன் நெஞ்சில் நிறைந்த கதாபாத்திரத்தில் வந்து கண்கலங்க வைத்து விட்டார்.

ஜாக்ஸன் விஜயனின் இசை அமல் நீராட் ஒளிப்பதிவு இரண்டும் திரைப்படத்தை தாங்கிப்பிடிக்கின்றன.

எப்படி எல்லாம் கதைகள் எழுத முடியுமா இந்த கதையை வின்செண்ட் வடக்கன் கதை துணிச்சலுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் தமிழ் திரைப்பட உலகில் அடிக்கடி வந்து இருந்தால் மக்கள் அனைவரும் மதன் மாற்றுவதற்கு அடிமையாக இருக்க மாட்டார்கள்.

இப்படியெல்லாம் கூட ஒரு கதையை உருவாக்கி, பரபரப்பான திரைக்கதை அமைத்து, மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் ஒரு கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டத்தைப் பற்றி திரைப்படமெடுக்க முடியுமா என ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குனர் அன்வர் ரஷீத்

காலம் கடந்து தமிழுக்கு வந்திருந்தாலும் காலத்தால் நிலைக்கும் திரைப்படம் நிலை மறந்தவன்.

மொத்தத்தில் நிலை மறந்தவன் திரைப்படம் போலியான மதமாற்றத்தை வெட்ட வெளிச்சமாக சொல்லும் திரைப்படம்.