அரசியலில் நுழைய தயார் நடிகர் தாடி பாலாஜி அதிரடி அறிவிப்பு!!

அரசியலில் நுழைய தயார் நடிகர் தாடி பாலாஜி அதிரடி அறிவிப்பு!!

சென்னை 22 மே 2023 சென்னை அயனாவரம் சயானி பேருந்து நிறுத்தம் அருகே பரோ உபகார அறக்கட்டளையின் சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

அறக்கட்டளையின் நிறுவனர் வசந்த்குமார் செயலாளர் கார்த்திக் மற்றும் V4 ஈவன்ட்ஸ் நிறுவனர் வந்தித் ஆகியோர் முன்னிலையில் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் சின்னத்திரை புகழ் தாடி பாலாஜி கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மோர் மற்றும் தர்பூசணி வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் இந்நிகழ்வு பரோ உபகாரா அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டது.

மேலும் அறக்கட்டளை சார்பாக பசு மாடுகளுக்கு உணவு, சாலையோர மக்களுக்கு தேவையான பொருட்கள், கல்விக்கு உதவி என பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகின்றனர்.