நடிகர் கேப்டன் விஜயகாந்தின் ஆஸ்தான பிரபல வசனகர்த்தா வேலுமணி காலமானார்.
 நடிகர் கேப்டன் விஜயகாந்தின் ஆஸ்தான பிரபல வசனகர்த்தா வேலுமணி காலமானார்.
நடிகர் கேப்டன் விஜயகாந்தின் ஆஸ்தான பிரபல வசனகர்த்தா வேலுமணி காலமானார்.
சென்னை 07 டிசம்பர் 2023 நடிகர் விஜயகாந்த் பற்றி அவதூறு செய்திகளை கேள்விப்பட்டு நடிகர் விஜயகாந்தின் ஆஸ்தான வசனகர்த்தா வேலுமணி என்பது குறிப்பிடத்தக்கது.
வசனகர்த்தா வேலுமணி இன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.
தற்போது அவருடைய வயது 55.
நடிகர் விஜயகாந்த் நடித்த தேவன், எங்கள் ஆசான், விருதகிரி போன்ற சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் வேலுமணி.
அவருக்கு வயது 55 ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
அவருடைய சொந்த ஊர் கடலூர்
வேலுமணி 30 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் திரைப்பட உலகிற்க்குள் நுழைந்தவர் வேலுமணி.
இவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றி யதோடு அவரின் மூன்றாம் உலகம் புத்தகம் உருவாவதற்கும் உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு இயக்குனர் வசந்த்யிடம் பூவெல்லாம் கேட்டுபார், ரிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
இதனைதொடந்து நடிகர் விஜயகாந்த் நடித்த தேவன் திரைப்படத்துக்கு வசனம் எழுதினார்.
இவரின் நறுக் சுருக் ஜனராஞ்சகமான வசனங்கள் நடிகர் விஜயகாந்திற்கு கவரவே தொடர்ந்து எங்கள் ஆசான், விருதகிரி போன்ற திரைப்படங்களுக்கும் வேலு மணியை வசனம் எழுத வைத்தார் நடிகர் விஜயகாந்த்.
திரைத்துறை மட்டுமல்லாமல் நடிகர் விஜயகாந்த் அரசியல் சம்பந்தமாகவும். அரசியல் மேடைகளில் பேசுவது குறித்தும் வேலு மணியிடம் கலந்து ஆலோசிப்பது வழக்கமாக வைத்து இருந்தார் என்பது வேலுமணியை அறிந்தவர் களுக்கு நன்கு தெரியும்.
இப்படி நடிகர் விஜயகாந்த்தின் அன்பை பெற்றவர் அவர் உடல் நலிவடைந்து ஒய்வில் இருந்த போதும் ஒரு சில முறை சந்தித்து வந்துள்ளார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக சந்திக்க கூட முடியவில்லை என்கிற ஏக்கதோடு இருந்து வருந்துள்ளார்.
இந்த தருணத்தில் நேற்று மாலை நடிகர் விஜயகாந்த் பற்றிய அவதூறு செய்திகள் பரவி வரும் வேளையில் கடலூரில் தனது நண்பரின் தையல் கடையில் இருந்துள்ளார்.
பின்பு இந்த செய்தி கேட்டு மனமுடைந்து வீட்டுக்கு போனவர் இரவு சோர்வாக காணப்பட்டுள்ளார்.
பின்பு காலையில் அவர் உடல் நிலை சீர் இல்லாமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் நீத்து உள்ளார்.
உடன் பிறந்த சகோதரியும் சகோதரணும் உள்ளனர்.











