சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘அமரன்’ திரைப்படத்தை பார்த்து விட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்அமரன் திரைப்படத்தை பார்த்து விட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார் !

சென்னை 02 நவம்பர் 2024 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது நண்பர் உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் திபாவளி அன்று வெளியான ‘அமரன்’ திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.நேற்று தனது நண்பர் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ‘அமரன்’ திரைப்படத்தைத் தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.அத்துடன், ‘அமரன்’ திரைப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட ‘அமரன்’ திரைப்படக்குழுவினரை போயஸ் கார்டனில் உள்ள வீட்டிற்கு நேரில் அழைத்து  தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.