’அப்பா குட்டி’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி, லிதன்யா, ஜென்சன் திவாகர், முருகானந்தம், அருவி மதன், பகவதி பெருமாள், வேட்டை முத்துக்குமார், விஜயன், ஹரிப்ரியா இசை, ஹரிதா, ஹரிப்ரியா, முன்னார் ரமேஷ், லிஸ்ஸி ஆண்டனி , ஸ்ரீஜா ரவி, பிரவீனா, சித்ரா லட்சுமணன், குமார் நடராஜன், சுவாமிநாதன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- மு. மாறன்.
ஒளிப்பதிவாளர் :- ராஜீவ் ராஜேந்திரன்.
படத்தொகுப்பாளர் :- விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளர் :- விஜய் ஆண்டனி.
தயாரிப்பு நிறுவனம் :- விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்.
தயாரிப்பாளர் :- பாத்திமா விஜய் ஆண்டனி.
மக்கள் தொடர்பு :- ரேகா.
வெளியீட்டு தேதி :- 20 நவம்பர் 2026.
ரேட்டிங் :- 3.5./5.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு கையில் குழந்தையோடு பேருந்தில் ஏறும் கதாநாயகன் விஜய் ஆண்டனி பல ரவுடிகள் தாக்குகிறார்கள்.
கதாநாயகன் விஜய் ஆண்டனி ரவுடிகள் அனைவரையும் அடித்து நொறுக்கிவிட்டு பேருந்து ஏறி ஊட்டியில் செல்கிறார்.
கதாநாயகன் விஜய் ஆண்டனி தன்னுடைய மனைவியை இழந்த நிலையில் தந்தையாக மட்டுமின்றி தாயாகவும் இருந்து மகள் லிதன்யாவை வளர்த்து வருகிறார்
ஊட்டியில் இறங்கும் கதாநாயகன் விஜய் ஆண்டனி அங்கு கிடைக்கும் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு ஊட்டியில் நடக்கும் திரைப்பட படப்பிடிப்புகளில் லொகேஷன் மேலாளர் வேலை பார்த்துக் கொண்டு குழந்தை மகள் லிதன்யா வளர்த்து பள்ளியில் படிக்க வைக்கிறார்.
கதாநாயகன் விஜய் ஆண்டனி தன்னுடைய மனைவியை இழந்த நிலையில் தந்தையாக மட்டுமின்றி தாயாகவும் இருந்து மகள் லிதன்யாவை வளர்த்து வருகிறார்
கதாநாயகன் விஜய் ஆண்டனி மகள் லிதன்யா படிக்கும் பள்ளியின் ஆசிரியராக பணி புரிந்து கதாநாயகி பிரித்தி அஸ்ராணி கதாநாயகன் விஜய் ஆண்டனியை ஒருதலையாக காதலிப்பதோடு, அவரது மகள் லிதன்யா மீதும் அதிக அக்கறை காட்டுகிறார்.
கதாநாயகன் விஜய் ஆண்டனி பிறந்தநாள் அன்று மகள் லிதன்யாவின் விருப்பப்படி அவளது அம்மாவின் புகைப்படத்தை பெரிய அளவில் வரைந்து கதாநாயகி பிரீத்தி அஸ்ராணி கொடுக்கிறார்.
கதாநாயகி பிரீத்தி அஸ்ராணி கதாநாயகன் விஜய் ஆண்டனியை திருமணம் செய்துகொண்டு மகள் லிதன்யா தாயாக இருக்க விரும்பும் நிலையில் கதாநாயகன் விஜய் ஆண்டனியிடம் கூற அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, கதாநாயகன் விஜய் ஆண்டனி இறந்ததாக சொல்லும் அவரது மனைவியை கதாநாமகி பிரித்தி அஸ்ராணி ஊட்டியில் கணவர், மற்றும் குழந்தையுடன் பார்த்ததை கதாநாயகன் விஜய் ஆண்டனியிடம் தெரிவிப்பதோடு, மகள் லிதன்யாவிடம் பொய் சொன்னதற்காக வருத்தப்படுகிறார்.
இந்த நிலையில், கதாநாயகன் விஜய் ஆண்டனியின் மகள் லிதன்யாக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மரபணு இரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் மகள் லிதன்யா நிலை மிக மோசமாக இருப்பதாகவும், அவருக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை) செய்தால் மட்டுமே மகள் லிதன்யாவை காப்பாற்ற முடியும், என்று சொல்கிறார்கள்.
இதனால் கதாநாயகன் விஜய் ஆண்டனியும், அவரது மனைவியும் இணைந்து மீண்டும் ஒரு குழந்தை பெற்றெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட, அப்போது தான் தெரிகிறது கதாநாயகன் விஜய் ஆண்டனிக்கு திருமணமே நடக்கவில்லை எனவும் அதோடு, அந்த பெண் குழந்தை ஆதரவற்ற அனாதை குழந்தை என்ற உண்மையும் தெரிய வருகிறது. .
மகள் லிதன்யாவை காப்பாற்ற வேண்டும் என்றால், அவரது உண்மையான தாய் தந்தை நினைத்தால் மட்டுமே முடியும் என்ற நிலையில், அவர்களை தேடி செல்லும் கதாநாயகன் விஜய் ஆண்டனி, அவர்கள் மூலம் தன் வளர்ப்பு மகளை காப்பாற்றினாரா ?, காப்பாற்றவில்லையா, என்பதுதான் இந்த ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘அப்பா குட்டி’ திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி தன் மகள் மீது அவர் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டும் காட்சிகள், நமக்கு இப்படிப்பட்ட ஒரு தந்தை இல்லையே என்று தோன்றுகிறது.
இந்த அப்பக்குட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக பிரித்தி அஸ்ராணி நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பிரித்தி அஸ்ராணி பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகன் விஜய் ஆண்டனியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி லிதன்யா, எதார்த்தமான நடிப்பாலும், குறும்புத்தனமான பேச்சாலும் கவனம் ஈர்க்கிறார்.
குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் சிறுமி லிதன்யா நடிப்பு சுமார் இரண்டு நிமிட காட்சி ஒன்று மட்டுமே ஒட்டு மொத்த திரைப்படத்தையும் தூக்கிப்பிடித்து இருக்கிறது.
ஜென்சன் திவாகர், முருகானந்தம், அருவி மதன், பகவதி பெருமாள், முத்துக்குமார், விஜயன், ஹரிப்ரியா இசை, ஹரிதா, ஹரிப்ரியா, முன்னார் ரமேஷ், லிஸ்ஸி ஆண்டனி , ஸ்ரீஜா ரவி, பிரவீனா, சித்ரா லட்சுமணன், குமார் நடராஜன், சுவாமிநாதன், ஹரிதா முத்தரசன், உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை அனைத்தும் அழகாக காட்டுவதை விட, கதாபாத்திரங்களின் உணர்வுகளை அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையுலும் பின்னணி இசையும் அளவாக பயணித்து காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.
மருத்துவத் துறையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு அப்பா – மகள் இடையிலான பாசப் போரட்டத்தை உணர்வுப்பூர்வமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் மு.மாறன்,
மொத்தத்தில் இந்த ‘அப்பாக்குட்டி, மனதை வருடும் மண்ணின் மணம்… நினைவில் என்றும் இனிக்கும் அப்பாக்குட்டி!












