’ஓம்’ (OM) திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீ லீலா, நாசருதீன் ஷா, இந்திரன்ஸ், ரேணு தேசாய், சஞ்சய் ஸ்வரூப், லல்லு பிரசாத், கேபிஒய் தீனா, பி. ஜெயஸ்ரீ, பானுப்பிரியா, ஜொன்னலகட்டா, செந்த்ராயன், தண்டியப்பன், பிரசன்னா ராம்குமார், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராஜ்குமார் பெரியசாமி.
ஒளிப்பதிவாளர் :- கே. எழில் அரசு.
படத்தொகுப்பாளர் :- ஆர். கலைவாணன்.
இசையமைப்பாளர் :- சாய் அப்யங்கர்.
தயாரிப்பு நிறுவனம் :- வுண்டர்பார் ஃபிலிம்ஸ், ஆர்டேக் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர்கள் – தனுஷ், ஷ்ரத்தா அகர்வால், அஸ்மத் ஜக்மக்.
மக்கள் தொடர்பு :- சதீஷ் (AIM)
வெளியீட்டு தேதி :- 20 நவம்பர் 2026.
ரேட்டிங் :- 3./5.
சில திரைப்படங்கள் துப்பாக்கிச் சத்தங்களால் நம்மை இருக்கும் அளவுக்கு சில திரைப்படங்கள் மர்மங்களால் நம்மைக் கட்டிப் போடும் அளவிற்கு. ஆனால், ஒரு மனிதன் தனது உண்மையான அடையாளத்தை மறைத்துக் கொண்டு எதிரியின் உலகத்திற்குள் நுழையும் ஆபத்தான பயணத்தை நமக்குள் பதற்றத்துடன் உணர வைப்பவை வெகு சில. அந்த வகையில், செம்மரக் கடத்தல், உளவுத்துறை நடவடிக்கை, காவல்துறைப் பின்னணி, அதிகாரத்தின் மறுபக்கம் எனப் பல பரிமாணங்களை இணைத்து உருவாகியிருக்கும் அதிரடி உளவுத் திரில்லர்தான் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஓம்’ (OM: Operation Mole).
செம்மரக் கடத்தல் கும்பலின் செயல்பாடுகளை கண்டறிவதற்காக, காவல்துறை சார்பில் ரகசிய அடையாளத்துடன் அந்தக் கும்பலுக்குள் கதாநாயகன் தனுஷ் ஊடுருவுகிறார்
ஏற்றிருக்கும் கதாபாத்திரம். வெளிப்பார்வைக்கு சாதாரணக் கூலித் தொழிலாளியாகத் தோன்றும் அவர், உள்ளுக்குள் ஒரு ரகசியப் பணியைச் சுமந்து செல்கிறார்.
காட்டுக்குள் நடைபெறும் கடத்தல் நடவடிக்கைகள், அதன் பின்னணியில் இருக்கும் அதிகாரப் போட்டிகள், பணத்திற்காக மனிதர்களைச் சுரண்டும் கும்பல்கள் எனப் பல அடுக்குகளைக் கொண்ட உலகம் மெல்ல மெல்ல வெளிப்படுகிறது.
இந்தக் கடத்தல் சாம்ராஜ்யத்தின் முக்கியப் புள்ளியாக கார்த்திகேயன் (மம்மூட்டி) இருக்கிறார்.
அவரது நம்பிக்கையைப் பெறுவதும், கடத்தல் வலையமைப்பின் ரகசியங்களை வெளிக்கொணர்வதும் உளவாளியின் முக்கியமான சவாலாக மாறுகின்றன.
மறுபுறம், காவல்துறை அதிகாரியான நித்யா ரெட்டி (சாய் பல்லவி) இந்த நடவடிக்கையில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
ஒருபுறம் ரகசிய அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம்; மறுபுறம் ஒவ்வொரு நொடியும் வெளிப்படும் ஆபத்துகள், இந்தச் சூழலில் உண்மை யாருடைய பக்கம் நிற்கிறது? கடத்தல் சாம்ராஜ்யத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையான சக்தி யார்? உளவாளியின் ரகசியப் பயணம் வெற்றியடைந்ததா? வெற்றியடையவில்லையா?, என்பதுதான் இந்த ஒம் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஒம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் தனுஷின் ஒரு பக்கம் காட்டுக்குள் சாதாரணத் தொழிலாளியாக வாழ வேண்டிய சூழல் மறுபக்கம் ரகசியப் பணியை வெற்றிகரமாக முடிக்க வேண்டிய பொறுப்பு.
இந்த இரண்டுக்கும் இடையிலான மனநிலையைத் தனது உடல்மொழி, பார்வை, வசன உச்சரிப்பு ஆகியவற்றின் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக அறிமுகக் காட்சி, அதிரடிச் சண்டைகள், ஆபத்தான சூழல்களில் வெளிப்படும் நிதானம் ஆகியவை கவனிக்க வைக்கின்றன.
வழக்கமான கதாநாயகப் பிம்பத்தைத் தாண்டி, கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.
மம்மூட்டி கார்த்திகேயன் என்ற கதாபாத்திரத்தில் மம்மூட்டியின் திரை ஆளுமை தனித்துவமாக வெளிப்படுகிறது.
அனுபவம், அதிகாரம், மர்மம் ஆகியவற்றை உள்ளடக்கிய கதாபாத்திரத்திற்கு அவரது நடிப்பு கம்பீரம் சேர்க்கிறது.
நித்யா ரெட்டி என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் பல்லவி தனக்கே உரிய இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
அதிகாரத்தின் கம்பீரத்தையும், தனிப்பட்ட உணர்வுகளையும் சமநிலைப்படுத்தும் அவரது நடிப்பு திரைப்படத்திற்கு வலுசேர்க்கிறது.
ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீலீலா தனது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியிருக்கிறார்.
அவரது திரைப்பிரசன்னம் கதையின் உணர்வுப்பூர்வமான அம்சத்திற்கு துணையாக அமைகிறது.
நாசருதீன் ஷா, இந்திரன்ஸ், ரேணு தேசாய், சஞ்சய் ஸ்வரூப், லல்லு பிரசாத், கேபிஒய் தீனா, பி. ஜெயஸ்ரீ, பானுப்பிரியா, ஜொன்னலகட்டா, செந்த்ராயன், தண்டியப்பன், பிரசன்னா ராம்குமார் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் வழியாக கதைக்கு வலுசேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே. எழில் அரசு ஒளிப்பதிவு மூலம் காடுகளின் அடர்த்தி, இயற்கைச் சூழல், இரவு நேர நடவடிக்கைகள், கடத்தல் உலகத்தின் இருண்ட பின்னணி என ஒவ்வொரு காட்சியையும் காட்சியமைப்பின் வழியாக உயிர்ப்பித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் அதிரடி மற்றும் மர்மப் பின்னணிக்கு ஏற்ற இசையை வழங்கியிருக்கிறார். குறிப்பாகப் பின்னணி இசை பல காட்சிகளுக்கு வேகத்தையும் அழுத்தத்தையும் சேர்க்கிறது.
செம்மரக் கடத்தலை வெறும் அதிரடிக் காட்சிகளின் பின்னணியாக மட்டும் பயன்படுத்தாமல், அதன் பின்னால் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை, அதிகாரத்தின் தலையீடு, சட்டவிரோத வணிகத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றையும் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
மொத்தத்தில், காட்டின் இருளுக்குள் ஒரு ரகசிய வேட்டை… தேசத்தின் நிழல் யுத்தத்தைத் திரையில் செதுக்கிய ‘ஓம்’!












