‘அந்த நாள்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ஆர்யன் ஷியாம், ஆத்யா பிரசாத், லீமா பாபு, ராஜ்குமார், கிஷோர் ராஜ்குமார், இமான்அண்ணாச்சி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விவி கதிரேசன்.

ஒளிப்பதிவாளர் :- சதீஷ் கதிர்வேல்.

படத்தொகுப்பாளர் :- ஜே.எஃப் காஸ்ட்ரோ.

இசையமைப்பாளர் :- என்.எஸ்.ராபர்ட் சற்குணம்.

தயாரிப்பு நிறுவனம் :- கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட்.

தயாரிப்பாளர் :- ஆர்யன் ஷியாம்

ரேட்டிங் :- 3./5

பிரபல திரைப்பட இயக்குநரான கதாநாயகன் ஆர்யன் ஷாம், தன்னுடைய புதிய திரைப்படத்தின் கதை உருவாக்கும் பணிக்காக இரண்டு பெண் உதவி இயக்குநர்கள் மற்றும் உதவியாளர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஞ்சமி பங்களாவிற்க்கு செல்கிறார்கள்.

அந்த பஞ்சமி பங்களாவில் இரவு நேரத்தில் மர்மான சில சம்பவங்கள் நடக்க, அச்சத்தில் அங்கிருந்து அனைவரும் தப்பிப்பதற்காக முயற்சிக்கிறார்கள்.

ஆனால், அவர்களால் அந்த இடத்தை விட்டு தப்பிக்க முடியாமல் போவதோடு, அவர்கள் அனைவரையும் முகமூடி மனிதர் ஒருவர் கொடூர ஆயுதத்துடன் விரட்டுகிறார்.

அந்த முகமூடி அணிந்த நபர் யார்? அந்த பஞ்சமி பங்களாவில் நடக்கும் மர்மங்களின் பின்னணி என்ன?, அந்த வீட்டில் உள்ள முகமுடி மனிதனிடமிருந்து சிக்கிக்கொண்ட கதாநாயகன் ஆர்யன் ஷாம் மற்றும் இரண்டு பெண் உதவி இயக்குனர்கள் மற்றும் உதவியாளர்கள் தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘அந்த நாள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த அந்த நாள் திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக ஆரியன் ஷாம் நடித்திருக்கிறார்.

ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு விதமான குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கும் நாயகன் அறிமுக கதாநாயகன் ஆர்யன் ஷாம், தனது முதல் திரைப்படத்திலேயே எந்தவிதமான நடிப்பின் தடுமாற்றம் இல்லாமல் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் முக்கியமான இடத்தை கண்டிப்பாக பிடிப்பார்.

மற்ற கதாபாத்திரங்கள் நடித்திருக்கும் ஆத்யா பிரசாத், ஆர்யன் ஷாமின் உதவியாளர்களாக நடித்திருக்கும் லிமா பாபு, கிஷோர் ராஜ்குமார், ராஜ்குமார், இமான் அண்ணாச்சி திரைக்கதை ஓட்டத்திற்கு சரியான முறையில் பயன்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சதிஷ் கதிர்வேல், ஒளிப்பதிவு மூலம் இரவு நேர காட்சிகளை பயம் என்றால் என்ன என்பதை மிகவும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர்  என்.எஸ். ராபர்ட் சற்குணத்தின் இசையில் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்.

நரபலியை மையமாக வைத்துக்கொண்டு அறிமுக கதாநாயகன் ஆர்யன் ஷாம் மற்றும் இயக்குநர் வீவீ கதிரேசன் எழுதியிருக்கும் கதை மற்றும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், இயக்குநர் வீவீ கதிரேசன் அதை காட்சிப்படுத்திய விதம் மற்றும் கதை சொல்லிய விதம் மிகவும் அருமையாக ரசிகர்களிடம் கூடுதல் கவனம் ஈர்த்து இருக்கிறது.

மொத்தத்தில், ‘அந்த நாள்’ திரைப்படம் ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

error: Content is protected !!