பாபா பிளாக் ஷீப் திரைவிமர்சனம் ரேட்டிங்

நடிகர் & நடிகைகள் :- விருமாண்டி’ அபிராமி, ஆர்ஜே விக்னேஷ்காந்த், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், அம்மு அபிராமி, சேட்டை ஷெரீஃப், வினோதினி, போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து மதுரை முத்து, சுரேஷ் சக்ரவர்த்தி, சுப்பு பஞ்சு, அருணாசலம், ராம் நிஷாந்த், அதிர்ச்சி அருண், ஓ.ஏ.கே சுந்தர், வினோதினி, சார்லஸ் வினோத், கேபிஒய் பழனி, குட்டி வினோ, ஹர்ஷத் கான், விவேக், பிரகதீஸ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராஜ்மோகன் ஆறுமுகம்.

ஒளிப்பதிவு :- சுதர்சன் சீனிவாசன்.

படத்தொகுப்பு :- விஜய் வேலுகுட்டி.

இசை :- சந்தோஷ் தயாநிதி.

தயாரிப்பு நிறுவனம் :- ரோமியோ பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- ராகுல்.

ரேட்டிங் :- 3.25./ 5.

சேலத்தில் உள்ள ஒரு பெரிய பள்ளிக்கு நடுவே சுவர் எழுப்பி அதை இரண்டாக ஒன்று பாய்ஸ் ஹை ஸ்கூலாகவும் இன்னொன்று கோ எஜுகேஷன் ஸ்கூலாகவும் பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியின் மகன்கள் நடத்தி வருகின்றனர்.

இவரது மறைவுக்குப் பிறகு அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக இணைந்து விட, அந்த இரண்டு பள்ளிகளை ஒன்றாக இணைத்து விடுகிறார்கள்.

இந்த இரண்டு பள்ளியை இனைத்த உடன் 11-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு பள்ளி மாணவர்களும் ஒரே வகுப்பறையில் படிப்பதால் கடைசி பெஞ்சில் உட்கார இரண்டு பள்ளி மாணவர்களும் இடையே மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்படுகிறது.

இந்த மோதல் போட்டியாக மாறி கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கொள்கிறார்கள்.

ஒரு போட்டியில் இரு குழுவினருக்கு இடையே சண்டை ஏற்படுகிறது.

அப்போது நண்பர்களில் ஒருவர் தற்கொலை செய்ய போவதாக கடிதம் ஒன்று அம்மு அபிராமி கையில் கிடைக்கிறது.

இறுதியில் இரண்டு குழுவாக பிரிந்து இருக்கும்  மாணவர்களின் சண்டை என்ன ஆனது? தற்கொலைகான கடிதம் எழுதியது யார்? தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கடிதம் எழுதியவரை நண்பர்கள் கண்டு பிடித்தார்களா? பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த பாபா பிளாக் ஷீப் திரைப்படத்தின் மீதிக்கதை.

ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாந்த், அயாஸ்,  அதிர்ச்சி அருண், ஷெரிப், ராம் நிசாந்த் உள்ளிட்ட பலர் பள்ளி மாணவர்களாக நடித்து இருக்கிறார்கள்.

கதாபாத்திரத்தை உணர்ந்து அனைவரும் பள்ளி மாணவர்களாகவே சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமான அளவில் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவியாக  வரும் அம்மு அபிராமி கொடுத்த வேலையை மிக சிறப்பாக நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

பிடி மாஸ்டராக வரும் போஸ்வெங்கட் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார்.

படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது.

பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ராஜ் மோகன் ஆறுமுகம்.

மொத்தத்தில் பாபா பிளாக் ஷிப் திரைப்படம் மாணவர்களுக்கு கருத்து சொல்லி இருப்பது சிறப்பு.

error: Content is protected !!