பனாரஸ் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3./5.

நடிகர் நடிகைகள் :- ஜையீத் கான், சோனல் மோன்டோரியோ, சுஜய் சாஸ்திரி , அச்யுத் குமார், பரக்கத் அலி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஜெயதீர்த்தா.

ஒளிப்பதிவு :- அத்வைதா குருமூர்த்தி.

படத்தொகுப்பு :- கே. எம். பிரகாஷ்.

இசை :- பி. அஜனீஷ் லோக்நாத்.

தயாரிப்பு நிறுவனம்:- என் கே புரொடக்ஷன்ஸ்.

ரேட்டிங் :– 3 ./ 5.

இந்த பனாரஸ் திரைப்படம் கன்னடத் திரைப்பட உலகில் தயாராகி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி உள்ளது.

மாநாடு திரைப்படத்தில் ஒரு நாட்டின் முதல்வரை கொலை செய்வதற்காக டைம் லுப் பயன்படுத்தி திரைப்படம் வந்தது.

அதே போல் இந்த பனாரஸ் திரைப்படமும் காதலும் அறிவியலும் கலந்து டைம் லுப் பயன்படுத்தி திரைப்படம் வந்திருக்கிறது.

பலவிதமான காதல் கதைகள் வந்திருக்கிறது அந்த வகையில் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லராகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெயதீர்த்தா.

கதாநாயகன் ஜையீத் கான் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த குறும்புக்கார இளைஞன்.

சிறு வயதிலேயே தனது தாயை இழந்து தந்தையின் பாசமிகு அரவணைப்பில் வளர்ந்து வருகிறான்.

கதாநாயகன் ஜையீத்கான் கல்லூரியில் படித்து வருகிறார்.

தனது தாய் தந்தை இழந்து தன் மாமாவிடம் அடைக்கலமாக இருக்கும் தனி கதாநாயகி சோனல் மோன்டோரியோ ஒரு நல்ல பாடகியாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.

நண்பர்களுடன் ஒரு சவாலுக்காக, அவர் தனியை டைம் டிராவில் இருப்பது போல் சிக்க வைக்கிறார்.

இவர் கதாநாயகி சோனல் மோன்டோரியோ முன்பு திடீரென வந்து நான் தான் உன் கணவர் எதிர்காலத்தில் இருந்து வருகிறேன்.

நமக்கு ஒரு மகள் இருக்கிறாள் இதை யாரிடமும் சொல்லாதே என்று நம்பும்படியாக பொய் சொல்கிறார்.

கதாநாயகன் ஜையீத்கான், கதாநாயகி சோனல் மோன்டோரியோ பெட்ரூமில் நெருக்கமாக இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை எடுத்து அதை தனது நண்பர்களுக்கு அனுப்புகிறான்.

இந்த புகைப்படம் வைரலானதால் கதாநாயகி சோனல் மோன்டோரியோ அந்த புகைப்படத்தால் ஏற்பட்ட அவமானத்தில் காணாமல் போகிறார்.

இவரிடம் மன்னிப்பு கேட்பதற்காக கதாநாயகன் ஜையீத்கான் அலைந்து திரிந்து தேடி வருகிறார்.

கதாநாயகி சோனல் மோன்டோரியோ கதாநாயகன் ஜையீத்கான் மன்னிப்பு கேட்டாரா? கேட்கவில்லையா? அதனை சோனல் மோன்டோரியோ ஏற்றுக் கொண்டாரா? ஏற்றுக்கொள்ளவில்லையா? என்பதுதான் இந்த பனாரஸ் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பனாரஸ் திரைப்படத்தில் மூலம் கதாநாயகனாக ஜையீத் கான் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

அறிமுக கதாநாயகனான ஜையீத் கான் தனது கதாபாத்திரத்தை மிக இயல்பாக நடித்திருக்கிறார்.

காதல், எமோஷனல் காட்சிகளில் புதுமுக நடிகர் என்று தெரியாத அளவிற்கு நடிப்பை கொடுத்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.

இந்த பனாரஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக சோனல் மோன்டோரியோ நடித்துள்ளார்.

கதாநாயகியான சோனல் மோன்டோரியோ ஆதரவற்ற நேரத்தில் அவர் மீது நமக்கு அனுதாபத்தை ஏற்படுகிறது.

தனது கதாபாத்திரத்தை முழுமையாக கொடுத்து ரசிக்கும்படி நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக வடிவமைத்து அருமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் ஜெயதீர்த்தா.

இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு காசியில் நாமும் பயணிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கே. எம். பிரகாஷ் படத்தொகுப்பு திரைப்படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

இயக்குனர் ஜெயதீர்த்தா காதலையும் அறிவியலையும் கலந்து ஒரு சையின்ஸ் லவ் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்.

காதலுக்காக இவர் பயன்படுத்தியுள்ள டைம் லூப் காட்சிகள் ரசிக்க வைத்துள்ளது.

மொத்தத்தில் ‘பனாரஸ்’ திரைப்படத்தை காதல் ஓவியமாக கொண்டாடலாம்.