மிரள் திரை விமர்சனம் ரேட்டிங்:-3.5 /5

நடிகர் நடிகைகள் :- பரத், வாணி போஜன், KS ரவிகுமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி, அர்ஜெய், ஜீவா சுப்ரமணியன், மாஸ்டர் அன்கித், பாக்யா,மாஸ்டர் சாந்தனு, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :-  M.சக்திவேல்.

ஒளிப்பதிவு :- சுரேஷ் பாலா.

படத்தொகுப்பு :- கலைவாணன்.R

இசை :- பிரசாத்.S.N.

தயாரிப்பு :- ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி.

தயாரிப்பாளர் :- டி. டில்லி பாபு.

ரேட்டிங் :- 3.5./ 5.

தமிழ் திரைப்பட உலகில் குறிப்பிடப்படும் தயாரிப்பாளர்களில் ஒருவரான G.டில்லிபாபு அவர்கள் தனது ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து வித்தியாசமான கதை உள்ள த்ரில்லர் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

அந்த வகையில் பாபி சிம்ஹா நடித்த உறுமீன் திரைப்படத்தை தயாரித்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் அடுத்ததாக வெளிவந்த மரகத நாணயம் திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது.

குறிப்பாக முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க நடிகை அமலாபால் கதாநாயகினாக நடிப்பில் வெளிவந்த ராட்சசன் திரைப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி G.டில்லிபாபு தயாரித்து இருந்தார்.

சுவாரசியமான த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றதோடு பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த வரிசையில் தயாரிப்பாளர் G.டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் அடுத்த படைப்பாக தயாராகியுள்ள ‘மிரள்’ திரைப்படம்.

மிக மிரட்டலான ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக இயக்குனர் M.சக்திவேல் இயக்கத்தில் கதாநாயகனாக பரத் மற்றும் கதாநாயகியாக வாணி போஜன் நடிப்பில் தயாரித்துள்ளார்.

கதாநாயகன் பரத், மனைவி கதாநாயகி வாணி போஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தனது ஒரே மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகி வாணி போஜன் திகில் கனவால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தால் இருக்கிறார்.

அதே சமயம் கதாநாயகன் பரத் ஒரு மிகப்பெரிய  விபத்தில் இருந்து உயிர் தப்பிக்கிறார்.

கதாநாயகி வாணி போஜனின் தாய் ஜோசியரிடம் ஒருவரிடம் இருவர் ஜாதகத்தினை காண்பித்து ஜோதிடர் இருவருக்கும் நேரம் சரியில்லை எனக்கூறி குலதெய்வத்தை வழிப்பட செய்ய சொல்கிறார் ஜோதிடர்.

கதாநாயகி வாணி போஜன் ஊரில் இருக்கும் குல தெய்வ கோவிலில், கடா வெட்டி சாமி கும்பிட மனைவி கதாநாயகி வாணி போஜன் மற்றும் மகனுடன் செல்கிறார் கதாநாயகன் பரத்.

திடீர் வேலை காரணமாக கதாநாயகி வாணி போஜன் ஊரில் இருந்து கதாநாயகன் பரத் தனது ஊருக்கு அவசர அவசரமாக கிளம்புகிறார்.

செல்லும் வழியில் முகமூடி அணிந்த மர்ம மனிதன் ஒருவன் கொலை செய்வதற்கு முயற்சிக்கிறான்.

கதாநாயகன் பரத்தை அடித்து போட்டுவிட்டு மனைவி கதாநாயகி வாணி போஜன் மற்றும் மகனை காரில் கடத்தி செல்கிறான் அந்த முகமூடி அணிந்த மர்ம மனிதன்.

இறுதியில் அந்த முகமூடி அணிந்த மர்ம மனிதன் யார்? கதாநாயகன் பரத் குடும்பத்தை பயமுறுத்த காரணம் என்ன? மனைவி கதாநாயகி வாணி போஜன் மற்றும் மகனை கதாநாயகன் பரத் காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா? என்பதுதான் இந்த மிரள் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மிரள் திரைப்படத்தில் கதாநாயகனாக பரத் நடித்துள்ளார்.

கதாநாயகன் பரத், மிகவும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மனைவி மற்றும் மகன் மீது பாசம், பரிதவிப்பு, கோபம் என கிடைக்கும் இடங்கள் அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்து இருக்கிறார் கதாநாயகன் பரத்.

கதாநாயகியாக மிரள் திரைப்படத்தில் வாணி போஜன் நடித்திருக்கிறார்.

கதாநாயகி வாணி போஜன் எதார்த்தமாக நடித்து கவனிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகி வாணி போஜன் குறிப்பாக கிளைமாக்சில் அழும் காட்சியில் நெகிழ வைத்துவிட்டார்.

கதாநாயகி வாணி போஜன் தந்தையாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ராஜ்குமார் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது.

திரைப்படத்தில் இரவு நேர காட்சிகளில் லைட்டிங் அருமை.

கலைவாணன்.R படத்தொகுப்பு திரைப்படத்தின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு  அமைந்துள்ளது.

S.N.பிரசாத்தின் இசை மற்றும் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்து இருக்கிறது.

சின்ன கதையை எடுத்துக்கொண்டு மிகப் பெரிய திரைக்கதையால் நல்ல ஒரு திகில் மற்றும் ஹாரர் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.சக்திவேல்.

திரைப்படத்தின் இடைவெளிக்கு முன் மெதுவாக நகரும் திரைக்கதை போக போக இடைவேளைக்குப் பின் மிகப்பெரிய வேகம் எடுக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் வரும் திருப்பம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

வழக்கமான வரும் த்ரில்லர் மற்றும் ஹாரர் திரைப்படங்கள் போல் இல்லாமல் இருப்பது மிகவும் சிறப்பு.

திகில் திரைப்படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொடுத்து இயக்குனர் எம் சக்திவேல் இயக்கியிருக்கிறார்.

இந்த மிரள் திரைப்படத்தின் கதையை ஒரு சில வரியில் கண்டிப்பாக சொல்லி விடலாம்.

ஆனால், அந்தக் கதைக்கான திரைக்கதையை புதுவிதமான யுக்தியை கையாண்டிருக்கிறார் இயக்குனர் எம் சக்திவேல்.

மொத்தத்தில் ‘மிரள்’ திரைப்படம் மிரள வைத்திருக்கிறார்கள்.