மார்க் ஆண்டனி திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.5./ 5.

நடிகர் & நடிகைகள் :- விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரெடின் கிங்ஸ்லி, சுனில், செல்வராகவன், நிழல்கள் ரவி, ஒய் ஜி மகேந்திரன், அபிநயா, ரித்து வர்மா, சென்ட்ராயன், விஷ்ணு பிரியா காந்தி, டத்தோ ஸ்ரீ ஜி ஞானராஜா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஆதிக் ரவிச்சந்திரன்.

ஒளிப்பதிவு :- அபிநந்தன் ராமானுஜம்.

படத்தொகுப்பு :- விஜய் வேலுக்குட்டி.

இசையமைப்பாளர் :- ஜி.வி. பிரகாஷ் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- மினி ஸ்டுடியோ.

தயாரிப்பாளர் :- எஸ்.வினோத் குமார்.

ரேட்டிங் :- 3.5./ 5.

பல வருட போராட்டத்திற்கு பின் 1975 விஞ்ஞானி செல்வராகவன் டைம் டிராவல் செய்யும் தொலைபேசி ஒன்றை கண்டுபிடிக்கிறார்.

இந்த டைம் டிராவல் தொலைபேசியின் மூலம் கடந்த காலத்தில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு பேச முடியும்.

ஒரு நாள் விஞ்ஞானி செல்வராகவன் கிளப்புக்கு சென்று வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டு இறந்து விடுகிறார்.

தன்னுடைய தந்தை விஷால் தான் தாய்யை கொன்றான் என்றும், அவன் மிகவும் மோசமானவன் என்றும் எஸ்.ஜே.சூர்யாவை தந்தையாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

20 வருடங்களுக்கு பின் 1995ல் இந்த டைம் டிராவல் தொலைபேசி மெக்கானிக்காக இருக்கும் கதாநாயகன் விஷாலிடம் கையில் கிடைக்கிறது.

இதை டைம் டிராவல் தொலைபேசி வைத்து தனது தந்தை விஷால் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

இந்நிலையில் கதாநாயகன் விஷால் டைம் டிராவல் தொலைபேசி வைத்து தனது தாய்யை மரணத்திலிருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

இந்த முயற்சியில் தன் தந்தை மிகவும் நல்லவர் என்று கதாநாயகன் விஷாலுக்கு தெரிய வருகிறது.

மேலும் தன் தந்தை விஷாலை கொன்றது எஸ்.ஜே.சூர்யாதான் என தெரிந்து கொள்கிறார் கதாநாயகன் விஷால்.

இதனால் தன் தந்தை விஷாலை காப்பாற்றி நிகழ் காலத்திற்கு கொண்டு வர கதாநாயகன் விஷால் முயற்சி செய்கிறார்.

இறுதியில் கதாநாயகன் விஷால் தன் தந்தை விஷாலை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தாரா? கொண்டு வரவில்லையா? டைம் டிராவல் தொலைபேசியால் வேற என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டது? என்பதுதான் இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் விஷால் ( மார்க் ) மகன் கதாபாத்திரத்திலும் ( ஆண்டனி ) தந்தை கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக பயணித்திருக்கிறார்.

கதாநாயகன் விஷால் நடிப்பு, ஆக்ஷன் காமெடி என அனைத்திலும் அற்புதமாக ஸ்கோர் செய்து இருக்கிறார்.

குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் மொட்ட தலையுடன் வரும் தோற்றமும், நடிப்பும் ரசிக்க வைக்கிறது.

இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில் வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடித்திருக்கிறார்.

வில்லன் எஸ்.ஜே.சூரியா மகன் கதாபாத்திரத்திலும் தந்தை கதாபாத்திரத்தில் மிக அற்புதமாக அருமையாக நடித்திருக்கிறார்.

வில்லன் எஸ்.ஜே.சூர்யாவிற்கு டைட்டில் கார்டில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா என்று பெயர் போட்டு இருந்தார்கள் உண்மையிலே தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கன் வில்லன் எஸ் ஜே சூர்யா மட்டும்தான்.

அதற்கு தான் முழுமையாக தகுதியானவன் என்பதை தன்னுடைய நடிப்பின் மூலமாக நிரூபித்து இருக்கிறார் வில்லன் எஸ்.ஜே.சூர்யா.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தன் தந்தைக்கு டைம் டிராவல் தொலைபேசி மூலம் பேசும் போது திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிலேயே கைத்தட்டல் வாங்குகிறார்.

கதாநாயகன் விஷால், வில்லன் எஸ்.ஜே.சூர்யா இருவரும் தந்தை, மகன் என இருவேறு கதாபாத்திரங்களில் நடிப்பில் அசத்தி பல காட்சிகளில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்கள்.

விஞ்ஞானியாக நடித்திருக்கும் செல்வராகவனுக்கு இன்னும் கொஞ்சம் அதிக அளவில் நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்.

இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில் சுனில் மிக அருமையாக நடிப்பிலும் ஆக்ஷனிலும் அசத்தியிருக்கிறார்.

இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா அபிநயா இருவரும் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் மகன் விஷாலுக்கு ஜோடியாக ரீது வர்மாவுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்.

கதாநாயகன் தந்தை விஷாலுக்கு ஜோடியாக அபிநயா நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

ரித்து வர்மா அபிநயா இருவரும் திரைப்படத்தில் அதிக அளவில் வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ரெடின் கிங்ஸ்லி, ஓய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, சென்ட்ராயன், விஷ்ணு பிரியா காந்தி, டத்தோ ஸ்ரீ ஜி ஞானராஜா அனைவருக்கும் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர்  ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் பின்னணி இசை சூப்பர்.

ஆக்ஷன் காட்சிகளில் பழைய திரைப்படத்தில் உள்ள பாடல்களை பின்னணியாக வைத்திருப்பது மிக மிக சிறப்பு.

மொத்த திரைப்படமும் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரை சுற்றித்தான் திரைப்படத்தின் முழுக்கதையும் நகர்கிறது.

டைம் டிராவலை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இந்த மாதிரி கதைகளில் திரைக்கதையை கையாள்வது மிக மிக கடினமான விஷயம் அதை தெளிவாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விறுவிறுப்பாகவும் அருமையான திரைக்கதையால் திரைப்படத்தை அனைத்து காட்சிகளிலும் போராடிக்காமல் இயக்கி இருப்பது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய கலகலப்பான திரைப்படம்.