ஐங்கரன் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.5 / 5

நடிகர் நடிகைகள் :- ஜி வி பிரகாஷ் குமார், மகிமா நம்பியார், ஆடுகளம் நரேன், காளி வெங்கட், அருள்தாஸ், ஹரிஷ் பெராடி, அழகம் பெருமாள், ஸ்ரவண சுப்பையா, அபிஷேக், சித்தார்த்த சங்கர், மாரிமுத்து, மற்றும் பலர்.

இயக்கம் :- ரவி அரசு.

ஒளிப்பதிவு :- சரவணன் அபிமன்யு.

படத்தொகுப்பு :- ராஜா முகமது.

இசை :- ஜி.வி.பிரகாஷ்குமார்.

தயாரிப்பு :- காமன் மேன்.

ரேட்டிங் :- 3.5 / 5

2015ஆம் வருடம் வெளிவந்த ‘ஈட்டி’ என்ற விளையாட்டை மையப்படுத்திய விறு விறுப்பான ஆக்ஷன் திரைப்படத்தை தனது முதல் திரைப்படமாகக் கொடுத்து யார் இவர் எனக் கேட்க வைத்தவர் இயக்குனர் ரவி அரசு.

நடிகர் அதர்வா முரளி நடிப்பில் வெளியான “ஈட்டி” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

அந்த ஈட்டி திரைப்படத்தில் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்கள் அவருக்கு மிக பெரிய வெற்றியைத்தேடி தந்தது.

அவருடைய முதல் திரைப்படத்திலேயே வெற்றி இயக்குனர் என பெயரெடுத்த ரவிஅரசு இயக்கத்தில் இரண்டாவது திரைப்படம் ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் “ஐங்கரன்”.

அது போலவே அவருடைய இரண்டாவது திரைப் படத்திலும் வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களுடன் கொடுத்து இந்த திரைப்படத்தையும் பரபரப்பாக பேச வைத்துவிட்டார்.

நாமக்கல்லில் தனது போலீஸ் ஏட்டுவான தந்தை மற்றும் தாயுடன் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார்.

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர் கதாநாயகன் ஜிவி பிரகாஷ்குமார்.

மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்து முடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமாருக்கு புதுப்புது கண்டுபிடிப்புகளைச் செய்வது வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி பல விதமான தயாரிப்புகளை கண்டுபிடித்து அவற்றிற்கு உரிமம் பெற நடையாய் நடக்கிறார் கதாநாயகன் ஜிவி பிரகாஷ்குமார்.

ஆனால் கதாநாயகன் ஜிவி பிரகாஷ்குமார் செய்த எந்த பொருளுக்கும் எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

வடமாநில கொள்ளையர்கள் தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களைக் கொள்ளையடிக்கிறார்கள்.

அவர்கள் கொள்ளையடித்த நகை மூட்டை நாமக்கலில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிடுகிறது.

அதை எடுப்பதற்காக ஒரு குழந்தையை கடத்தி அந்த ஆழ்துளை கிணற்றில் போடுகிறார்கள்

இதனிடையே அவர்களது ஊரில் ஆழ்துளை குழாயில் விழுந்த ஒரு குழந்தையின் உயிரை தன்னுடைய கண்டுபிடிப்பால் காப்பாற்றுகிறார்.

அதோடு, வட இந்தியக் கும்பல் ஒன்று செய்யும் வைரக் கொள்ளையை தனது சாதுர்யத்தால் எப்படி கண்டுபிடிக்கிறார்.

ஆழ்துளை குழாயில் விழுந்த ஒரு குழந்தையின் உயிரை தன்னுடைய கண்டுபிடிப்பால் காப்பாற்றுகிறாரா? இல்லையா? என்பதுதான் இந்த ஜங்கரன்
திரைப்படத்தின் மீதி கதை.

இந்த ஐயங்கரன் திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

சில திரைப்படங்களாக தனக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தொடர்ச்சியாக வெற்றியைப் பெற்று வருகிறார் கதாநாயகன் ஜிவி பிரகாஷ்குமார்.

பேச்சுலர், செல்பி’ திரைப்படங்களைத் தொடர்ந்து இந்தத் திரைப்படமும் அவருக்கு வெற்றித் திரைப்படமாக அமைந்துள்ளது.

வெற்றி வரிசையில் ஐயங்கரன் திரைப்படமும் சேர்ந்துள்ளது.

ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்து இளைஞன், மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முடித்தவர், விதவிதமான கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரர் என எளிதில் நமது மனதில் இடம் பிடித்துவிடுகிறார்

கதாநாயகன் ஜி வி பிரகாஷ் குமார். பார்க்க சாதாரணமாகத் தெரிந்தாலும் ஆக்ஷனிலும் அசத்துகிறார்.

தனக்கான திரைப்படங்கள் எவை, கதை மற்றும் கதாபாத்திரங்கள் எவை என்பதை கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.

இந்த ஐங்கரன்
திரைப்படத்தில் கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமாரின் ஜோடியாக கதாநாயகி மகிமா நம்பியார்
ஓரிரு காட்சிகள் மட்டுமே வந்து போகிறார்.

கதாநாயகி என்று ஒருவர் திரைப்படத்தில் இருக்க வேண்டும் என நடிக்க வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

ஜிவி பிரகாஷ் குமாரின் நண்பனாக பழைய இரும்பு கடை வைத்திருக்கும் காளி வெங்கட் நடிப்பு அருமை.

திரைப்படத்தின் முக்கிய வில்லனாக வட நாட்டு கொள்ளையனாக சித்தார்த். தோற்றத்திலும், பார்வையிலுமே வில்லத்தனத்தை மிக அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

முயன்றால் இன்றைய இளம் வில்லன்கள் தமிழ் திரைப்பட உலகில் பஞ்சத்தைப் போக்கலாம்.

கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமாரின் தந்தையாக ஆடுகளம் நரேன், லஞ்சம் வாங்கும் ஆய்வாளராக ஹரிஷ் பெராடி அவரவர் கதாபாத்திரங்களில் அவரவரகள் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கும் ஜிவி பிரகாஷ் குமார், பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு. இரண்டு மூன்று சண்டைக் காட்சிகள்தான் என்றாலும் அனைத்துமே சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

ராஜா முகம்மதின் படத்தொகுப்பு திரைப் படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

திரைப்படம் ஆரம்பம் முதல் கடைசி வரை பரபரப்பாக போவது தெரியவில்லை.

மொத்தத்தில் ஐங்கரன் திரைப்படம் வெற்றி பெறுபவன்.