’கார்மேனி செல்வம்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- ப.சமுத்திரக்கனி, லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, கரண் சக்கரவர்த்தி, கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா,
படவா கோபி, கார்த்திக் குமார், கோதண்டம், மதுமிதாl, அர்ஜுனன், ஹரிதா பரகோட், ஜெயந்தி, பேபி கே லயா, சங்கர நாராயண், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராம் சக்ரி.

ஒளிப்பதிவாளர் :- யுவராஜ் தக்ஷ‌ன்.

படத்தொகுப்பாளர் :- ஜெகன் ஆர்.வி.

இசையமைப்பாளர் :- மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி.

தயாரிப்பு நிறுவனம் :- பாத்வே புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- அருண் ரங்கராஜுலு.

மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.

ரேட்டிங் :- 3./5

இன்றைய  காலகட்டத்தில் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தேவைக்கு ஏற்ப ஆசையே அடைய கடன் வாங்கி அதில் இருக்கும்  சிக்கலும் பிரச்சினைகளும்  இருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்களை பற்றி  சொல்லப்படும் திரைப்படம்தான் இந்த “கார்மேனி செல்வம்”.

தொழிலதிபர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் மிகவும் நேர்மையாகவும் அன்பாகவும் கார்  ஓட்டுனர் பணியை செய்து வரும் கதாநாயகன் சமுத்திரக்கனி தன் மனைவி, கதாநாயகி லக்ஷ்மி பிரியா, மகன் கரண் சக்கரவர்த்தி, வசதிக்குறைவான கடற்கரைக் குப்பத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

கதாநாயகன் சமுத்திரக்கனி தன் மனைவி, கதாநாயகி  லக்ஷ்மி பிரியா, இருவருக்கும் இரண்டு கனவுகள் இருக்கிறது.

இருவரின் கனவுகள் என்னவென்றால் ஒன்று தங்களுக்கென்று சொந்த வீடு கட்டி சொந்தக்காரர்கள் முன்னால் கெத்தாக வாழ்ந்து காட்ட வேண்டும் மற்றொரு கனவு என்னவென்றால் சொந்தமாக கார் வாங்கி ஓட்டுவது என
இந்த இரண்டுக்குமான சேமிப்புகள் தவிர திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு ஆக மொத்தம் மூன்று உண்டியல்களில் காசு சேர்க்கிறார்கள். 

கதாநாயகன் சமுத்திரக்கனியின் முதலாளி கௌதம் வாசுதேவ் மேனனும் சரி, அவர் மனைவி அபிநயாவும் சரி கதாநாயகன் சமுத்திரகனி மீது அத்தனைப் பாசம் வைத்திருக்கிறார்கள்.

அந்தப் பாசத்துக்கு அடிமைப்பட்டு அவர் வேறு எந்த வேலையைப் பற்றியும் யோசிக்காமல் அவ்வப்போது அவர் மனைவி கதாநாயகி லட்சுமி பிரியாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் ஒரு மாத காலம் ஓய்வுக்காக கௌதம் வாசுதேவ் மேனனும் அவர் மனைவி அபிநயா மற்றும் குழந்தையுடன் வெளிநாடு செல்கிறார்கள்.

கௌதம் வாசுதேவ் மேனனும் அவர் மனைவி அபிநயாவும் அவர்களை இருவரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு கௌதம் வாசுதேவ் மேனனின் காரை அவருடைய வீட்டில் விடுவதற்கு முன்பு (சில கடன்களை அடைக்க…) அந்தக் காரை வாடகைக்காராக  மாற்றி கதாநாயகன் சமுத்திரக்கனி  பயன்படுத்த முடிவு செய்கிறார்

கௌதம் வாசுதேவ் மேனன் கார் ஓட்டுநராக வேலை செய்யும் கதாநாயகன் சமுத்திரக்கனி, அளவான குடும்பம், வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை, என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருந்தாலும், சொந்த வீடு மற்றும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் கடனாளியாகி விடுகிறார்.

அவசரத்திற்கு கடன் வாங்க  ஆரம்பிக்கும் கதாநாயகன் சமுத்திரக்கனி, அதையே தனது ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளும் போது, கதாநாயகன் சமுத்திரக்கனியை  மிகப்பெரிய அளவில் சிக்கல் சூழ்ந்து கொள்கிறது.

அந்த மிகப்பெரிய அளவில் உள்ள சிக்கலில் இருந்து கதாநாயகன் சமுத்திரக்கனி, மீண்டாரா?  மீளவில்லையா? என்பதுதான், இந்த ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தை கதையின் நாயகனாக சமுத்திரக்கனி  நடித்திருக்கிறார்.

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை எதார்த்தமாக  நடிப்பை கொடுத்து திரைப்பட ரசிகர்களிடம் பாராட்டுப் பெறும்செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் சமுத்திரக்கனி, எளிய மனிதரின் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், மன போராட்டம், இயலாமை என அனைத்து உணர்ச்சிகளையும் மிக நேர்த்தியான நடிப்பை  கொடுத்திருக்கிறார்.

இந்த ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தை கதையின் நாயகியாக லக்‌ஷ்மி பிரியா சந்திரமெளலி நடித்துள்ளார்.

கதாநாயகன் சமுத்திரக்கனியின்  மனைவியாக நடித்திருக்கும் லக்‌ஷ்மி பிரியா  சந்திரமெளலி நடுத்தர வர்க்க குடும்ப பெண்களின் ஆசைகள், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் ஆகியவற்றை தனது கண்கள் மூலமாக வெளிக்காட்டியிருக்கும் கதையின் நாயகி லக்‌ஷ்மி பிரியா  சந்திரமெளலி, ஆசையை விட அமைதியான வாழ்க்கையே போதும், என்ற தன் மனநிலைக்கு கணவரை மாற்ற முயற்சிக்கும் இடங்களில் எதார்த்தமாக நடித்து திரைப்படத்திற்கு  மிகப்பெரிய அளவில்  சிறப்பு சேர்த்திருக்கிறார்.

கதாநாயகன் சமுத்திரக்கனியின் முதலாளி  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநயா, சமுத்திரக்கனியின் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்கரவர்த்தி ஆகியோரும் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்‌ஷன் ஒளிப்பதிவு மூலம் வாழ்க்கையையும், ரசிக்க மறந்த வாழ்க்கையும் மிக  அழகாகவும் அருமையாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

மியூசிக்லவுட் ஸ்டுடியோஸ் & டெக்னாலஜியின் (Musicloud Studio & Technology) இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

நமது கைகளில் இருப்பதை வைத்து கொண்டு வாழ வேண்டுமே தவிர,  மற்றவர்களிடம் இருப்பதை நாமும் வாங்கி வாழ வேண்டும், என்ற ஆசையில் சிக்கி அவஸ்த்தைப்படக் கூடாது, என்பதை சிந்திக்க வைக்கும்படி கூறியிருக்கும் திரைப்படம், குடும்பத்திற்காக  தேவையானதை தேடுகிறோம் என்ற பெயரில் அந்த குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதை தவறவிடக்கூடாது, என்று வெளிநாட்டில் வேலை செய்கிறவர்களுக்கும் அறிவுரை  கூறியிருக்கிறார் இயக்குனர் ராம் சக்ரி.

மொத்தத்தில், ‘கார்மேனி செல்வம்’ வெளிநாட்டில் வேலை செய்கிறவர்களுக்கும் சமர்ப்பணம்.

error: Content is protected !!