‘இறுதிமுயற்சி: திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ரஞ்சித், மெகாலி மீனாட்சி, நிலேஷ், மௌனிகா, விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- வெங்கட் ஜனா.
ஒளிப்பதிவாளர் :- சூர்யகாந்தி.
படத்தொகுப்பாளர் :- வடிவேல் விமல்ராஜ்.
இசையமைப்பாளர் :- சுனில் லாசர்.
தயாரிப்பு நிறுவனம் :- வரம் சினிமாஸ்.
தயாரிப்பாளர் :- வெங்கடேசன் பழனிச்சாமி.
ரேட்டிங் :- 3.5/5.
கதாநாயகன் ரஞ்சித் மகள் மௌனிகா, மகன் நிலேஷ் மற்றும் மனைவி கதாநாயகி மெகாலி மீனாட்சி உடன் வாழ்ந்து வரும் கதாநாயகன் ரஞ்சித் தன் நடத்தி வந்த டெக்ஸ்டைல்ஸ் தொழிலில் மிகப்பெரிய அளவில் நஷ்டம், ஏற்பட்டு தன்னுடைய மகன் நிலேஷின் இதய அறுவை சிகிச்சை செலவுக்காக என இரண்டு பிரச்சனைக்குள் சிக்கிய கதாநாயகன் ரஞ்சித் 80 லட்ச ரூபாய் விட்டல் ராவிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கி, பலமுறை வட்டி பணத்தை செலுத்தியும் அசலுக்கு மேல் பணம் அதிக அளவில் கேட்பதால் திருப்பிக் தர முடியாத நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்.
கந்து வட்டி கொடுமையால் தனது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு கதாநாயகன் ரஞ்சித் வருகிறார்.
அந்த நிலையில், காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் சைக்கோ கொலையாளி ஒருவன் கதாநாயகன் ரஞ்சித் வீட்டுக்குள் சென்று பதுங்கி கொள்கிறான்.
இந்த நிலையில் கதாநாயகன் ரஞ்சித் கந்து வட்டி மாபியா கும்பலிடம் வாங்கிய கடன் பணத்தை திருப்பி செலுத்தினாரா? பணத்தை திருப்பி செலுத்தவில்லையா?
கதாநாயகன் ரஞ்சித் வீட்டுக்குள் ஒளிந்திருக்கும் சைக்கோ கொலைகாரனை காவல்துறையினர் கைது செய்தார்களா? கைது செய்யவில்லையா?
கடன் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தாததால் கந்து வட்டி மாபியா கும்பல் கதாநாயகன் ரஞ்சித் மற்றும் மனைவி கதாநாயகி மெகாலி மீனாட்சி, மகன் மற்றும் மகளுடன் தினந்தோறும் அவமானப்படுத்துவதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் கதாநாயகன் ரஞசித் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டாரா? தற்கொலை செய்து கொள்ளவில்லையா? என்பதுதான் இறுதி முயற்சி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த இறுதிமுயற்சி திரைப்படத்தில் கதையின் நாயகனாக ரஞ்சித் நடித்திருக்கிறார்.
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த கதையில் ரவிச்சந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஞ்சித் கதாபாத்திரத்தை உணர்ந்து கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ரஞ்சித், கடன் பிரச்சனையால் நிம்மதி இழந்து தவிக்கும் குடும்ப தலைவன் ரவிச்சந்திரன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
இந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் ரஞ்சித் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் அந்த ரவிச்சந்திரன் கதாபாத்திரம் உணர்ச்சி பூர்வமாக இருந்திருக்காது என்பதுதான் உண்மை.
இந்த இறுதிமுயற்சி திரைப்படத்தில் கதையின் நாயகியாக மெகாலி மீனாட்சி, நடித்துள்ளார்.
கதாநாயகன் ரஞ்சித்தின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகி மெகாலி மீனாட்சி, கணவனின் மனக் கஷ்டங்களில் பங்கெடுக்கிற கடமையை மிகவும் கனக்கச்சிதமாக செய்திருக்கிறார்.
கதாநாயகன் ரஞ்சித் கதாநாயகி மெகாலி மீனாட்சி, தம்பதியரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மௌனிகா, மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நீலேஷ் இருவரும் ரசிகர்கள் மனதில் பதிகிறார்கள்.
காவல்துறை குற்றவியல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதிரவன் பாலு, உடல் மொழி அனைத்தும் உண்மையான காவல்துறையினர் விசாரிப்பது போல் உள்ளது.
கருணை உள்ளமே இல்லாத கந்துவட்டி தாதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விட்டல் ராவ், அவருடைய தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுபேட்டை சுரேஷ், என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சூர்யகாந்தி, ஒளிப்பதிவு மூலம் எளிமையான கதையை மிகவும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சுனில் லாசரின் இசையில் பாடல்கள் கதைக்களம் மற்றும் கதை மாந்தர்களின் வலிகளை பிரதிபலிக்கும் வகையில்
பின்னணி இசை சோகத்திற்கு சோகம் சேர்த்திருக்கிறார்.
கடன் தொல்லையால் அவமானம் தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வது போன்ற உண்மை சம்பவங்களை மையமாக வைத்து, வட்டிக்கு கடன் வாங்கும் சாதாரண சிறு தொழில் செய்பவர் முதல் கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் மிகப்பெரிய தொழிலதிபர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனை, கடன் வாங்குபவர்களை வட்டி என்ற பெயரில் எப்படி எல்லாம் சுரண்டப்படுகிறார்கள், என்பதை மையமாகக் கொண்டு, சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் இந்த இறுதிமுயற்சி திரைப்படத்தை அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் ஜனா.
மொத்தத்தில், இந்த ‘இறுதிமுயற்சி’ கந்துவட்டி மாஃபியாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பணம்.











