‘தேசிய தலைவர்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ஜே எம் பஷீர் , பாரதிராஜா, ராதாரவி,, எம்.எஸ். பாஸ்கர், வாகை சந்திரசேகர், ஆர்வி உதயகுமார், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஆர்.அரவிந்தராஜ் DFT
ஒளிப்பதிவாளர் :- அகிலன்.
படத்தொகுப்பாளர் :- கே.ஜெ.வெங்கட்ரமணன்.
இசையமைப்பாளர் :- இளையராஜா.
தயாரிப்பு நிறுவனம் :- எஸ்எஸ்ஆர் சத்யா
தயாரிப்பாளர் :- எஸ்எஸ்ஆர் சத்யா.
ரேட்டிங் 2./5.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர் என்கிற திரைப்படமாக உருவாகியுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளான 30 தேதி அன்று திரைப்படம் வெளியாகியுள்ளது.
சுதந்திரம் வாங்குவதற்கு முன் உள்ள காலக்கட்டத்தில் கதை ஆரம்பம் ஆகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் சுற்றியுள்ள தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் வாழ்வாதாரத்துக்காகவும் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு வரும் முத்துரமாலிங்க தேவர், ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், ஆங்கிலேயே ஆட்சியில் நிறுவப்பட்ட கை ரேகை சட்டத்தை எதிர்த்து முத்துரமாலிங்க தேவர், போராடி வருகிறார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவருடைய வழியில் பயனிப்பவர், கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பார்வேர்ட் பிளாக் என்ற கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் முத்துராமலிங்க தேவர், தென் மாவட்டங்களில் உள்ள சுற்று வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் பலம் வாய்ந்த தலைவராக உருவெடுக்கிறார்.
தென் மாவட்டங்களில் மிகப்பெரிய பலம் வாய்ந்த தலைவராக உருவெடுத்த முத்துராமலிங்க தேவரின் வளர்ச்சியால் கண்டு அச்சமடையும் காங்கிரஸ் கட்சியின் தலைமை அவரை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்த்து வைப்பதற்காக முயற்சியை மேற்கொள்கிறார்கள்.
அந்த முயற்சி முடியாமல் போக, அவர் மீது சாதி வெறி பிடித்தவர் என்ற அடையாளத்தை குத்த காங்கிரஸ் கட்சியின் மேலிடம் முயற்சிக்கிறது.
இதற்கிடையில், சாதி மோதல்களை தடுப்பதற்கான அரசின் அமைதி பேச்சுவார்த்தையின் போது, தலித் சமூகத்தின் தலைவராக இயங்கி வரும் இமானுவேல் சேகரன், முத்துராமலிங்க தேவரை எதிர்த்து பேசுகிறார்.
இதற்கிடையே, இமானுவேல் சேகரன், மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்யப்படுகிறார்.
தலித் சமூகத்தின் தலைவராக இயங்கி வரும் இமானுவேல் சேகரன் கொலை வழக்கில் முத்துராமலிங்க தேவரை முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்.
முத்துராமலிங்க தேவரை சிறையில் இருந்து விடுதலை செய்தார்களா?, விடுதலை செய்யவில்லையா?,
தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்காக சட்ட போராட்டத்தில் ஈடுபடும் முத்துராமலிங்க தேவர், அதில் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா ?, என்பதுதான் இந்த தேசியத் தலைவர் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த தேசியத் தலைவர் திரைப்படத்தின் கதாநாயகனாக ஜெ.எம்.பஷீர், நடித்திருக்கிறார்.
முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெ.எம்.பஷீர், தோற்றம், நடிப்பு, உடல் மொழி, வசன உச்சரிப்பு என ஒவ்வொரு அசைவு என அனைத்திலும் முத்துராமலிங்க தேவராகவே வாழ்ந்திருக்கிறார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மூலம் தான் அனைத்து தலைவர்களையும் வீரபாண்டிய கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழன், அரிச்சந்திரா, ராஜராஜ சோழன், கர்ணன், பார்த்திருக்கிறோம் அதைப்போல், ஜெ.எம்.பஷீர் மூலம் முத்துராமலிங்க தேவரை இந்தத் திரைப்படத்தில் பார்க்க முடிகிறது.
ஜவர்கலால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர் ஆகியோரது கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் உருவ ஒற்றுமையில் கச்சிதமாக பொருந்தி உள்ளார்கள்.
இயக்குநர் பாரதிராஜா, ராதா ரவி, வாகை சந்திரசேகர் எம் எஸ் பாஸ்கர், ஆகியோர் குறைவான காட்சிகள் வந்தாலும், அவர்களது அனுபவமான நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அடையாளத்தை தந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் அகிலன், ஒளிப்பதிவு மூலம் சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு காலக்கட்டத்தில் தென் மாவட்டங்களில் பயணித்த அனுபவத்தை கொடுக்கிறார்.
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, தன் இசையில் பாடல்கள் பின்னணி இசை மூலம் இறுதிக் காட்சியில் பார்வையாளர்களை கண்கலங்க வைத்து விடுகிறார்.
தேசிய தலைவர் என்று கொண்டாடும் முத்துராமலிங்க தேவர் பற்றிய திரைப்படத்தை இதுவரை தமிழ் திரைப்பட உலகில் எந்த ஒரு நடிகரோ, இயக்குநரோ எடுக்காத நிலையில், அதை மிக துணிச்சலாக எடுத்து அசத்தியிருக்கும் நடிகர் ஜெ.எம்.பஷீர், இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.
மொத்தத்தில், ‘தேசிய தலைவர்’ திரைப்படமாக இல்லாமல் டாக்குமெண்ட்ரி போல் உள்ளது.











