’தடை அதை உடை’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- அங்காடி தெரு மகேஷ், குணா பாபு, K.M. பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது, நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், M.K.ராதாகிருஷ்ணன், வேல்முருகன், காத்து கருப்பு கலை, பாக்கியம் கௌதமி, சுபாஶ்ரீ, சூரியப்ரதாபன் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அறிவழகன் முருகேசன்.
ஒளிப்பதிவாளர் :- தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன்.
படத்தொகுப்பாளர் :- டாய்சி.
இசையமைப்பாளர் :- சாய் சுந்தர்.
தயாரிப்பு நிறுவனம் :- காந்திமதி பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- அறிவழகன் முருகேசன்.
ரேட்டிங் :- 2.5./5.
திரைப்பட உலகில் இயக்குனராகம் வேண்டுமென துடிக்கும் மூன்று இளைஞர்களின் பயணத்தை கதைக்கருவாக எடுத்து கொண்டு, பல ஆண்டுகளுக்கு முன்பு கிழ் சாதிகளை கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து தனது அடுத்த தலைமுறையை மீட்டெடுக்க தனி மனிதராக ஒருவர் நடத்திய புரட்சியையும், தற்போதைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் மூலம் நடக்கும் சமூக சீர்கேடு பற்றியும் வித்தியாசமான உண்மை சம்பவத்தை மூன்று இளைஞர்கள் மற்றும் ஊர் மக்களும் சேர்ந்து குறும்படமாக எடுத்து இதன் மூலம் தங்கள் மூவருக்கும் திரைப்படத்துறையில் திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
இந்த மூன்று இளைஞர்கள் எடுத்த குறும்படத்தை ஒரு தயாரிப்பாளரிடம், போட்டு காண்பிக்க அந்த குறும்படம் தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் போய்விடுவதால், தங்களது கனவு சுக்கு நூறாக நொறுங்கி விட்டதாக நினைக்கிறார்கள்.
கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து தனது அடுத்த தலைமுறையை மீட்டெடுக்க போராடும் நபர், அதில் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா? இன்று மூன்று இளைஞர்கள் திரைப்படத் துறையில் இயக்குனர்களாக வெற்றி பெற்றார்களா! வெற்றி பெறவில்லையா? என்பதுதான் இந்த ‘தடை அதை உடை’ திரைப்படத்தின் மீதிக்கதை.
அங்காடி தெரு மகேஷ், திருக்குறள் குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது என முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களில் அனைவரும் நடித்திருந்தாலும், இது திரைப்படத்தில் அதிக அளவில் புதுமுகங்களாகவே நடித்திருக்கிறார்கள்.
இந்த தடை அதை உடை திரைப்படத்தில் நடித்திருக்கும் நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன், காத்து கருப்பு கலை, பாக்கியம் கெளதமி, சுபாஸ்ரீ, சூரியப்ரதாபன் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அனைவரும் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் தங்கப்பாண்டியன் சோட்டா மணிகண்டன் இருவரின் ஒளிப்பதிவு மூலம் பழைய காலக்கட்டத்தையும், தற்போதைய காலக்கட்டத்தையும் மிகவும் அருமையாக திரைப்படம் ஆக்கி இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாய் சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப சிறப்பாக உள்ளது.
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கதையை ஒன்றை சொல்வதற்காக மிகவும் வித்தியாசமான திரைக்கதையை கையாண்டிருப்பது சரியான முறையில் சொல்லாமல், கதையை பல்வேறு திசைகளில் நகர்த்தி சென்று, கதாபாத்திரங்களை சரியான முறையில் கையாளாமல், திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை குழப்பமான மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
மொத்தத்தில், ‘தடை அதை உடை’ திரைப்படம் பார்க்கும் நமக்கு குழப்பமாக உள்ளது.











