விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன் திரைப்படம் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் படக்குழுவினர்!!
சென்னை 26 ஆகஸ்ட் 2022 விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன் திரைப்படம் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் படக்குழுவினர்!!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மாமனிதன்’ திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்த கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘மாமனிதன்’.
இந்த மாமனிதன் திரைப்படத்தை ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளனர்.
முதல்முறையாக இந்த திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
குடும்ப உறவுகளை பற்றி பேசிய இந்தத் திரைப்படம் நல்ல விதமான விமர்சனங்களை பெற்றுள்ளது.
கடந்த ஜூன் மாதம் திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ஒரு மாதம் கழித்து அஹா தமிழ் ஓடிடித் தளத்திலும் வெளியானது.
இந்த திரைப்படம் 3 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியை இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.