தளபதி 68 அறிவிப்பை கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் வெங்கட் பிரபு.!!

தளபதி 68 அறிவிப்பை கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் வெங்கட் பிரபு.!!

சென்னை 22 மே 2023 தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று “தளபதி 68” திரைப்படத்தின் அப்டேட் வெளியானது,

இந்த “தளபதி 68” திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு தளபதி விஜய் திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார்,

இந்த “தளபதி 68” திரைப்படத்தை பெரும் பொருட்ச்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தனது 25வது திரைப்படமாக தயாரிக்கிறது.

இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் நேற்று இயக்குனர் வெங்கட் பிரபு பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அதில் தளபதி 68 குறித்து பல அறிவிப்புகளை கூறினார்.

அதன்பிறகு தளபதி 68 திரைப்படத்தின் அறிவிப்பை கேக் வெட்டி ரசிகர்களுடன் கொண்டாடினார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.