தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் விபரங்கள்.!!

சென்னை 14 பிப்ரவரி 2023 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் விபரங்கள்.!!

தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதி அரசர் கே.வெங்கட்ராமன்
(உயர்நீதிமன்ற நீதிபதி) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023–2026ஆம் ஆண்டுக்கான நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதி எண் 16ன் படி வரும் 26.3.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஓய்வுபெற்ற நீதி அரசர் அவர்களின் தலைமையில் நடத்தலாம் என்று கடந்த 21.1.2023 அன்று நடைபெற்ற மேற்படி சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவராலும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து தேர்தல் அதிகாரியாக என்னிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரியாக சம்மதம் தெரிவித்து கீழ்கண்டவாறு தேர்தல் அட்டவணையை நிர்ணயம் செய்துள்ளேன்.

மேலும் தேர்தல் நடக்கும் இடம் தற்போது தேர்வு செய்து கொண்டிருக்கிறோம்.

இடம் முடிவு செய்த பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வாக்களிக்க தகுதி உள்ள உறுப்பினர்களுக்கு சங்க சட்டவிதிகளின் படி தெரிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தல் அட்டவணை.

(1) 23.2.2023 காலை 11.00 மணி முதல் 26.2.2023 திங்கள்கிழமை மாலை 5.00 மணிவரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்ப படிவங்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும்.

விண்ணப்ப படிவம் (ரூபாய் 100 செலுத்தி சங்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

(2) 26.2.2023 மாலை 5.00 மணிக்கு மேல் விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது.

(3) 27.2.2023 காலை 11.00 மணி முதல் 02.3.2023 மாலை 4.00 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சங்க அலுவலகத்தில் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்த்துவிட வேண்டும்.

( விண்ணப்ப படிவங்களை தபால் அல்லது courier ல் அனுப்பும் உறுப்பினர்கள் 02.3.2023 மாலை 4.00 மணிக்குள் சங்க அலுவலகத்திற்கு வந்து சேர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

(4) பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் சங்க அலுவலகத்தில் மூடி முத்திரையிட்ட பெட்டியில் 02 -3.2023 மாலை 5.00 மணிக்கு சீல் வைக்கப்படும். பின்னர் 6.00 மணிக்கு விண்ணப்ப படிவங்கள் பரிசீலனை நடைபெறும்.

(5) 03.03.2023 காலை 10.00 மணி முதல் 05.03.2023 மாலை 04.00 மணிவரை வேட்புமனு விண்ணப்பங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

மாலை 04.00 மணிக்கு மேல் விண்ணப்பங்களை திரும்பப் பெற இயலாது.

(6) 05.03 – 2023 அன்று மாலை 06.00 மணிக்கு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

06.03.2023 திங்கள்கிழமை அன்று இறுதி வேட்பாளர் பட்டியல். தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது Courier மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணிவரை நடைபெறும்.

பின்னர் மாலை 05.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விவரம் பின்வருமாறு:-

1. தலைவர் 1 நபர்
2. துணைத்தலைவர்கள் 2 நபர்கள்
3. செயலாளர்கள் 2 நபர்கள்
4, பொருளாளர் 1 நபர்
5. இணைச்செயலாளர் 1 நபர்
6. செயற்குழு உறுப்பினர்கள் 26 நபர்கள்

1. தலைவர் பதவிக்கு ரூபாய் 100.000.00

2. மற்ற நிர்வாகிகள் பதவிக்கு ரூபாய் 50.000.00

3. செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ரூபாய் 10.000.00

Justice K.VENKATRAMAN(Retd)
Election officer
Tamil film producer council