’ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ஆரி அர்ஜுனன், தீப்ஷிகா, சுப்ரமணிய சிவா, பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர், பேபி ஸ்ரீ வர்ஷினி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- L R சுந்தரபாண்டி.
ஒளிப்பதிவாளர் :- J லக்ஷ்மன்.
படத்தொகுப்பாளர் :- ராம் சுதர்ஷன்.
இசையமைப்பாளர் :- தரண் குமார்.
தயாரிப்பு நிறுவனம் :- மனோ கிரியேஷன்.
தயாரிப்பாளர் :- A. ராஜா
மக்கள் தொடர்பு :- A ராஜா.
ரேட்டிங் :- 3.5./5.
மும்பையில் பணியாற்றி வரும் கதாநாயகன் ஆரி அர்ஜுனன், சென்னைக்கு மாற்றலாகி வருகிறார்.
சென்னை புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நான்காவது மாடியில் யாரும் வசிக்காத நிலையில் நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் கதாநாயகன் ஆரி அர்ஜுனன், தங்குகிறார்.
இப்படிப்பட்ட சூழலில் தன்னுடைய பணியுடன், இனைத்து தன்னை காப்பாற்றும்படி தொலைபேசியில் உதவி கேட்கும் தன்னுடைய முன்னாள் காதலியை காப்பாற்றுவதற்காக தேடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.
இந்த நிலையில் அந்த குடியிருக்கும் வீட்டில் அவருடைய முன்னாள் காதலியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடையும் நிலையில் இரவு நேரங்களில் தினந்தோறும் தொடர்ச்சியாக அமானுஷ்யம் தொடர்பான கனவுகள் மூலம் கதாநாயகன் ஆரி அர்ஜுனன், பாதிக்கப்படுகிறார்.
தினந்தோறும் வரும் அமானுஷ்யம் தொடர்பான கனவுகள் என்றாலும், தற்போது நிஜத்தில் நடப்பது போல் சம்பவங்கள் மூலம் தன்னை சுற்றி ஏதோ ஒன்று நடப்பதை கதாநாயகன் ஆரி அர்ஜுனன், அறிந்துக் கொள்ளும் நிலையில் தான் காணும் அமானுஷ்ய கனவுகளுக்கான தீர்வை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கும் போது, பல திடுக்கிடும் பல உண்மைகளை அறிந்துக் கொள்கிறார்.
கதாநாயகன் ஆரி அர்ஜுனன், அறிந்து கொள்ளும் அந்த உண்மைகள் என்ன ?,
காணாமல் போன தன்னுடைய முன்னாள் காதலியை கதாநாயகன் ஆரி அர்ஜுனன், தேடி கண்டுபிடித்தாரா?, கண்டு பிடிக்கவில்லையா?,
கதாநாயகன் ஆரி அர்ஜுனன், தினந்தோறும் கனவில் காணும் அமானுஷ்ய கனவுகளுக்கும் கதாநாயகன் ஆரி அர்ஜுனனுக்கும், தொடர்பு இருக்கிறதா?, என்பதுதான் இந்த ‘ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஆரி அர்ஜுனன், நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஆரி அர்ஜுனன், நடிப்பில் காட்டும் தீவிரம் என திரைப்படம் முழுவதும் பல்வேறு உணர்வுகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் .
கணினி துறையில் பணியாற்றும் இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் ஆரி அர்ஜுனன், கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை கொடுத்து திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இந்த ‘ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக பவித்ரா மற்றும் தீப்ஷிகா இருவரும் நடித்திருக்கிறார்கள்..
கதாநாயகியாக பவித்ரா மற்றும் தீப்ஷிகா இருவரும் அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் பணியை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் சுப்பிரமணிய சிவா, முதல் பாதியில் முக பாவனைகளால் இது சிறப்பான நடிப்பை கொடுத்தது மட்டுமல்லாமல், இரண்டாம் பாதியில் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர், கதாநாயகன் ஆரி அர்ஜுனன், மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பேபி ஸ்ரீ வர்ஷினி, மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட கதை புத்தகத்தை வெகு சிறப்பாக பயணப்பட்டு இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெ. லக்ஷ்மண், ஒளிப்பதிவு மூலம் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள நான்காவது தளத்தை காட்டி திரைப்படப் பார்க்கும் ரசிகர்களை பயமுறுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை திகில் காட்சிகளில் பயத்தையும் படபடப்பையும் அதிகரிக்க செய்யும் வகையில் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
திகில் கதைக்களம் என்றாலும், அதை வெறும் திகில் காட்சிகளின் பின்னணியோடு மட்டுமே சொல்லாமல், காதல், மற்றும் கணவன் – மனைவி உறவு, குழந்தை செண்டிமெண்ட், சமூக பிரச்சனை, கிரைம் திரில்லர் போன்ற பல்வேறு அம்சங்களை பலவித அடுக்குகளாக கொண்டு திரைக்கதையும், திருப்பங்கள் நிறைந்த காட்சிகளும் திரைப்படத்தை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் எல்.ஆர். சுந்தரபாண்டி.
மொத்தத்தில், ‘ஃபோர்த் ஃப்ளோர்’’ திரைப்படம் திகில், கிரைம் திரில்லர், விரும்பும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.











