‘மருதம்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- விதார்த், ரக்ஷனா, அருள்தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ், சரவண சுப்பையா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :-  வி. கஜேந்திரன்.

ஒளிப்பதிவாளர் :- அருள் கே. சோமசுந்தரம்

படத்தொகுப்பாளர் :- பி. சந்துரு

இசையமைப்பாளர் :- என்.ஆர். ரகுநந்தன்.

தயாரிப்பு நிறுவனம் :- அருவர் பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர் :-  சி. வெங்கடேசன்.

ரேட்டிங் :- 3.5./5.

தனக்கு சொந்தமான நிலத்தில் இயற்கை முறைப்படி விவசாயம் செய்து செய்து வரும் கதாநாயகன் வித்தார்த் மனைவி கதாநாயகி ரக்ஷனா, மற்றும் மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் வித்தார்த், எப்படியாவது தன்னுடைய மகனை தனியார் பள்ளியில் ஆங்கிலம் வழி கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தனக்கு இருக்கும் சொந்தமான  நிலத்தை மூன்று லட்சத்திற்கு அருள்தாஸிடம் அடமானம் வைத்து முன்று லட்சம் பணத்தை பெறுகிறார்.

இந்த நிலையில் கதாநாயகன் வித்தார்த்தின் சொந்த நிலத்தை வேறு ஒருவர் வாங்கி விட்டதாக நீங்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகைக்காக வங்கி உங்க நிலத்தை விட்டதாகவும் இந்த நிலத்தை ஏலத்தில் வாங்கியதாக கூறி அந்த நிலத்தை வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுகிறார்.

தான் கடன் வாங்காமல் தனது நிலத்தை வேறு ஒருவருக்கு எப்படி நீங்கள் எப்படி ஏலத்தில் விட முடியும் என வங்கியில் சென்று விசாரிக்கையில் கதாநாயகன் வித்தார்த்தின் இறந்த தந்தை வங்கியில் கடன் வாங்கியதாகவும் அந்த கடனை அடைக்காததால் உங்கள் நிலத்தை ஏலத்தில் விடப்பட்டதாகவும் வண்டியில் உள்ள அதிகாரிகள்  கூறுகிறார்கள்.

தனது நிலத்தை ஏலத்தில் விட்ட வங்கியின் மீது சந்தேகம் ஏற்பட இதில் ஏதோ சதி இருப்பதை உணரும் கதாநாயகன் வித்தார்த் தனக்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றுவதற்காக கூட்டு வழக்கு என போராடுகிறார்.

தனது சொந்தமான நிலத்தை மீட்டாரா? சொந்தமான நிலத்தை மீட்கவில்லையா? தனியார் பள்ளியில் ஆங்கிலம் வழி கல்வியில் தனது மகனை சேர்த்தாரா? சேர்க்கவில்லையா? என்பதுதான் இந்த ‘மருதம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘மருதம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக விதார்த் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் விதார்த், வழக்கும் போல் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச்சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

தனக்கு சொந்தமான நிலத்தை இழந்து வருந்துவதும், தன் சொந்த நிலத்தை மீட்க சட்ட ரீதியாக போராட்டம் என நிலத்தை இழந்து துடிக்கும் மக்களை  பிரதிபலிக்கும் வகையில் உணர்ந்து நடித்திருக்கிறார்.

பல காட்சிகளில் வசனம் இல்லை என்றாலும், தனது முக பாவனைகள் மூலமாகவே தன் நடிப்பை மிகநேர்த்தியாக வெளிப்படுத்தி  திரைப்படத்தை ஒற்றை ஆளாக தனது தோளில் சுமந்திருக்கிறார்.

இந்த மருதம் திரைப்படத்தில் கதாநாயகியாக ரக்ஷனா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ரக்‌ஷனா, தோற்றத்தில் அழகாகவும்,  வசன உச்சரிப்பு, உடல் மொழி அனைத்திலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கும் கதாநாயகி ரக்‌ஷனா பல காட்சிகளை நடிப்பின் மூலம் மிகவும் சர்வசாதாரணமாக கையாண்டிருக்கிறார்.

சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்தாஸ் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாறன்
வங்கி மேலாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரவண சுப்பையா, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் ஆகிய அனைவரும் பொருத்தமான தேர்வாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் அருள் கே.சோமசுந்தரம், ஒளிப்பதிவு மூலம் கிராமத்தின் இயல்பான அழகை, மிகவும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசையில் பாடல்களில் மண்ணின் மனம் வீசும் நிலையில் பின்னணி இசையில் கதையில் உள்ள வலியை மிக அருமையாக தெரிகிறது. 

கிராமத்தில் உள்ள
விவசாயிகளுக்கான அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் சலுகைகளை தங்களது சுயநலத்துக்காக தவறாக பயன்படுத்தும் பேங்க் அதிகாரிகள் கொண்ட மோசடி கும்பல், அவற்றின் மூலம் அதே விவசாயிகளை எப்படி சுரண்டுகிறார்கள், என்பதை மிக  அருமையாக இயக்கியிருக்கிறார்  இயக்குநர் வி.கஜேந்திரன்,

மொத்தத்தில், ‘மருதம்’ விவசாயிகள் மட்டும் அல்ல, அனைத்து தரப்பினரும்  பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம்.

error: Content is protected !!