’குட் பேட் அக்லி’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் – அஜித் குமார், (63வது படம்) திரிஷா கிருஷ்ணன், பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், ஜாக்கி ஷெராஃப், சாயாஜி ஷிண்டே, டின்னி ஆனந்த், சுனில், உஷா உதுப், ராகுல் தேவ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதீப் ஜபரா, ஷைன் டாம் சாக்கோ, ரகு ராம், பி. எஸ். அவினாஷ், கார்த்திகேய தேவ்
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் – ஆதிக் ரவிசந்திரன்.

ஒளிப்பதிவாளர் – அபிநந்தன் ராமானுஜ்.

படத்தொகுப்பாளர் – விஜய் வேலுக்குட்டி.

இசையமைப்பாளர் – ஜி.வி. பிரகாஷ்குமார்

தயாரிப்பு நிறுவனம் – மைத்ரி மூவீ மேக்கர்ஸ.

தயாரிப்பாளர்கள் – நவீன் யெர்னேனி, Y. ரவி ஷங்கர்.

ரேட்டிங் – 2.5./5.

மும்பையில் மிகப்பெரிய டானாக ரெட் டிராகன் என்று அழைக்கப்படும் கதாநாயகன் அஜித் குமார் தனது மனைவி கதாநாயகி திரிஷா மகனுக்காக ( ‘பேட்’ ) ரெட் டிராகனாக இருக்கும் டான் சுபாவத்தை கைவிட்டுவிட்டு ( ’குட் ’ ) -ஆக  மாறி செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு காவல்துறையில் சரணடைந்து 18 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

18 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் தனது மனைவி கதாநாயகி திரிஷா மற்றும் மகனை சந்திக்க செல்லும் கதாநாயகன் அஜித்குமார் மிகப்பெரிய அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

அங்கு சென்ற கதாநாயகன் அஜித்குமார் போதை பொருள் உபயோகித்த மகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மிகப் பெரிய பிரச்சனை ஒன்றில் சிக்கிக் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனது மகனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என மீண்டும் ( ’பேட் ’ ) ரெட் டிராகன் அவதாரம் மட்டும் இன்றி ( ’அக்லி’ ) அவதாரமும் இருக்கிறார்.

சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் தனது மகனை சிறை தண்டனையில் இருந்து கதாநாயகன் அஜித்குமார் காப்பாற்றினாரா ?, காப்பாற்ற வில்லையா?, கதாநாயகன் அஜித் குமாரின் மகனை போதை பொருள் உபயோகித்த சிக்கலில் சிக்க வைத்தது யார்? எதற்காக சிக்க வைத்தார்கள் என்பதுதான் இந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித்குமார் நடித்திருக்கிறார்.

ஏகே கதாபாத்திரத்திலும் மற்றும் ரெட் டிராகன் கதாபாத்திரத்திலும் அதிரடி காட்டியிருக்கும் கதாநாயகன் அஜித் குமார், தனது ரசிகர்கள் கொண்டாடும் வகையில் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.

இந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் கதாநாயகியாக திர்ஷா நடித்திருக்கிறார்.

கதாநாயகன் அஜித்குமார் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகி திரிஷாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் இல்லை என்றாலும், திரைப்படம் முழுவதும் கதாநாயகியாக தனது பணியை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், ஜானி மற்றும் ஜாமி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

தனது மிரட்டலான நடிப்பு மூலம் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இருக்கும் வகையில் அர்ஜுன் தாஸ், நடிப்பையும் தாண்டி பாடல் காட்சிகளில் ஸ்டைலிஷான குத்தாட்டம் போட்டு தனது கதாபாத்திரத்தையும் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.

சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், பிரபு ஆகியோரது சிலக் காட்சிகளில், சிம்ரன், சைன் டாம் ஜாக்கோ ஆகியோரது சிறப்பு தோற்றமும் கமர்ஷியல் அம்சங்கள் திரைப்படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் கதாநாயகன் அஜித்குமாரை அனுஅனுவாக ரசித்து மிக அருமையாக அழகாக அற்புதமாக காட்சிகளை திரைப்படமாக்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு மூலம் முழு திரைப்படத்தை கலர்புல்லாகவும், மிகப் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பழைய பாடல்கள் ரீமேக் செய்யப்பட்ட விதம் ரசங திரையரங்குகளில் ஆட்டம் போட வைக்கிறது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனராக திரைப்படத்தை இயக்காமல் நடிகர் அஜித்குமாரின் ரசிகராக இயக்கி இருக்கிறார்.

நடிகர் அஜித்குமார்  நிற்பது, நடப்பது, சிரிப்பது, முறைப்பது, காதலிப்பது, மகனை நினைத்து கவலைப்படுவது, கார் ஓட்டுவது என அனைத்தையும் ரசித்து ரசித்து காட்சிகளை வடிவமைத்திருப்பது திரைப்படம் முழுவதும் தெரிகிறது.

மொத்தத்தில், ‘குட் பேட் அக்லி’ நடிகர் அஜித்குமாரின் பயோகிராபி போல் உள்ளது.