’ஐடென்டிட்டி’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் – டோவினோ தாமஸ், த்ரிஷா,வினய் ராய், பாலிவுட் நடிகை மந்திரா பேடி, அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷக் நாயர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் – அகில் பால் & அனஸ் கான்.
ஒளிப்பதிவாளர் – அகில் ஜார்ஜ்.
படத்தொகுப்பாளர் – சமன் சக்கோ.
இசையமைப்பாளர் – ஜேக்ஸ் பிஜாய்.
தயாரிப்பு நிறுவனம் – ராகம் மூவீஸ்.
தயாரிப்பாளர்கள் – ராஜு மல்லியத், டாக்டர். ரோய் சி.ஜே.
ரேட்டிங் – 3.5./5.
துணிக்கடையில் பெண்கள் துணி மாற்றும் அறையில் செல்போனை மறைத்து வைத்து அதன் மூலம் துணி மாற்றும் பெண்களை ஆபாசமாக விடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும், அவருடைய இடத்திற்கே சென்று மர்ம நபர் ஒருவர் எரித்து கொலை செய்து விடுக்கிறார்
அந்த பெண்களை ஆபாசமாக விடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும், நபரை கொலை செய்த கொலையாளியை நேரில் பார்த்த சாட்சியான கதாநாயகி திரிஷா, மூலம் கொலையாளியை பிடிக்க களத்தில் இறங்கும் காவல்துறை அதிகாரியான வினய், குற்றவாளிகளின் அனைத்து அடையாளங்களை வைத்து அவர்களை அப்படியே வரையும் அதீத திறன் படைத்த கதாநாயகன் டோவினோ தாமஸின் உதவியை நாடுகிறார்.
கதாநாயகி திரிஷா கூறும் அடையாளங்கள் அனைத்தும் வைத்து பார்க்கும் போது கதாநாயகன் டோவினோ தாமஸ் வரையும் உருவம் அவரைப் போலவே இருக்கிறது.
இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பதை விட கொலையாளியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் காவல்துறை அதிகாரி வினய், கொலையாளி பிடித்தார்களா? பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘ஐடென்டிட்டி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஐடென்டிட்டி திரைப்படத்தில் கதாநாயகனாக டோவினோ தாமஸ் நடித்திருக்கிறார்.
இந்த ஐடென்டிட்டி திரைப்படத்தில் ஹரன் சங்கர் என்ற, கதாபாத்திரத்தில் ஸ்டைலிஷான லுக்கில் மிக அழுத்தமாக நடித்திருக்கிறார்.
தனது கதாபாத்திரத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்தி டோவினோ தாமஸ், நடிப்பை தாண்டி, ஆக்ஷன் என இரண்டிலும் மிகவும் அருமையாக அமர்க்களப்படுத்துகிறார்.
இந்த ஐடென்டிட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் திரிஷா குழப்பமான மனநிலை மற்றும் விபத்தில் ஏற்பட்ட பாதிப்பு திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினய் ராய், திரைக்கதையின் விறுவிறுப்புக்கு மிகப்பெரிய அளவில் துணையாக பயணித்து இருக்கிறார்.
ஆர்ய, அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷாக் நாயர், மேஜர் ரவி, சுஜித் சங்கர், அஜு வர்க்கீஸ், மந்திரா பேடி, அர்ச்சனா கவி, ஷம்மி திலகன், என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் திரைக்கதையின் வேகத்திற்கும், விறுவிறுப்புக்கும் ஈடுகொடுக்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு, மூலம் கார் சேசிங் மற்றும் விமானத்தில் நடக்கும் சண்டைக்காட்சி, உள்ளிட்டவைகளை பிரமாண்டமாகவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை ன பல இடங்களில் காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார்.
ஒரு கொலை, அதை செய்வதர் யார்? என்பதை கதையின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு, அதன் பிறகு திரைக்கதையில் வரும் ஒவ்வொரு காட்சிகளையும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும்படி மிக அருமையாக ஏக்கி இருக்கிறார்கள் இயக்குநர்கள் அகில் பால் – அனஸ் கான்.
மொத்தத்தில், ’ஐடென்டிட்டி’ திரைப்படம் சூப்பரான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர்.