’விடாமயற்சி’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- அஜித் குமார், த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன், ரெஜெனா கசாண்ட்ரா, ஆரவ், ரவி ராகவேந்திர், ரம்யா சுப்பிரமணியன், நிகில் சஜித், சஞ்சய் கணேஷ் சரவனன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மகிழ் திருமேனி.

ஒளிப்பதிவாளர் :- ஓம் பிரகாஷ்.

படத்தொகுப்பாளர் :- என் பி ஸ்ரிகாந்த்.

இசையமைப்பாளர் :-  அனிருத்.
.
தயாரிப்பு நிறுவனம் :- லைகா புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர்:- .சப்ஸ்கரன்.

ரேட்டிங் 2.5./5.

கதாநாயகன் அஜித்குமார் தனது காதல் மனைவி கதாநாயகி திரிஷாவுடன் அஜர்பைஜான் நாட்டில் வசித்து வருகிறார்.

திருமணம் நடந்து 12 ஆண்டுகள் தம்பதியாக வாழ்ந்து வந்த கதாநாயகன் அஜித்குமாரும், கதாநாயகி திரிஷாவும் அவர்கள் இருவருக்கும் ஒத்து வராததால் விவாகரத்து பெற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கும் நிலையில், இருவரும் காரில் கதாநாயகி திரிஷாவின் தாய் வீட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்கள்.

கதாநாயகி திரிஷாவின் தாய் வீட்டிற்கு செல்லும் வழியில் அவர்கள் சென்ற கார் பழுதுடைந்து விடும் நிலையில் அந்த வழியாக வரும் லாரியை ஊட்டி வரும் அர்ஜூன் மற்றும் அவருடைய மனைவி ரெஜினா  கசாண்ட்ராவிடம் உதவி கேட்க இருவரும் உதவி செய்வதாக கூறி கதாநாயகி திரிஷாவை மட்டும் தன்னுடன் அழைத்து சென்று விடுகிறார்கள்.

கதாநாயகன் அஜித்குமாரின் கார் சரியானதும் கதாநாயகி திரிஷாவை தேடிச் செல்ல, கதாநாயகி திரிஷா கடத்தப்பட்டிருக்கும் உண்மை கதாநாயகன் அஜித்குமாருக்கு தெரிய வருகிறது.

கதாநாயகன் அஜித்குமாரின் காதல் மனைவி கதாநாயகி திரிஷாவை யார்? கடத்தினார்கள் எதற்காக கடத்தினார்கள் கதாநாயகன் அஜித்குமார், காதல் மனைவி கதாநாயகி திரிஷாவை காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா? என்பதுதான் இந்த ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த விடாமுயற்சி திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித்குமார் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அஜித்குமார் தான் ஒரு உச்ச நட்சத்திரம் என்ற இமேஜை தூக்கி எறிந்து விட்டு, கதைக்கான நாயகனாக மட்டுமே நடித்துள்ளார்.

தனது மனைவி கதாநாயகி திரிஷா கடத்தப்பட்டவுடன் காப்பாற்றுவதற்காக துடிப்பது, என அனைத்து காட்சிகளிலும் உணர்வுப்பூர்வமாக நடித்து அசத்தியிருக்கிறார்.

நடனம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளை, தனது ஸ்டைலான நடிப்பு மூலம் பார்வையாளர்களை ரசிக்க வைத்துவிடுகிறார்.

இந்த விடாமுயற்சி திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருக்கிறார்‌.

கதாநாயகி நடித்திருக்கும் திரிஷா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை மிக அருமையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

வில்லன் கதை புத்தகத்தில் நடித்திருக்கும் அர்ஜூன் எதிர்பார்த்தபடி வில்லனாக வந்தாலும், திரைப்படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் மிகவும் அருமையாக பயனத்துள்ளார்.

அர்ஜுன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ராவும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

ஆரவ், ரம்யா சுப்பிரமணியம், ரவி ராகவேந்திரா, நிகில் சஜித், சஞ்சய் கணேஷ் சரவணன் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அனைவரும் கொடுத்த வேலையை எந்தவிதமான குறையில்லாமல் மிக அருமையாக கையாண்டு இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு மூலம் அஜர்பைஜான் அழகான சாலைகளின், உள்ள ஆபத்தையும் மிக மிக அருமையாக திரைப்படம் ஆக்கி வெறிச்சோடிய சாலைகளின் பயணத்தை பதற்றத்துடன் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை பார்க்க வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், ஒளிப்பதிவு மூலம் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைத்துள்ளார்.

பின்னணி இசை இந்த விதமான இரைச்சலும் இல்லாமல் மிகவும் அருமையாக பயணித்துள்ளார்.

இயக்குநர் மகிழ் திருமேனி அவர்கள் கதையை யோசிக்காமல் ஹாலிவுட் திரைப்படமான1997 ஆம் ஆண்டு வெளியான “பிரேக் டவுன்” என்ற திரைப்படத்தை மொழி மாற்றம் செய்து இயக்கியிருக்கிறார்.

நடிகர் அஜித்குமாரை மாஸாக காட்டவில்லை என்றாலும், ஸ்டைலிஷாக காட்டியிருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மொத்தத்தில், ‘விடாமுயற்சி’ திரைப்படம் தேவையில்லாத முயற்சி.