“தருணம்” திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் அய்யப்பா, கீதா கைலாசம், பால சரவணன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அரவிந்த் சீனிவாசன்.
ஒளிப்பதிவாளர் :- ராஜா பட்டாச்சாரியா.
படத்தொகுப்பாளர் :- அருள் இ சித்தார்த்
இசையமைப்பாளர் :- தர்புகா சிவா, அஷ்வின் ஹேமந்த்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸென் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- புகழ், ஈடன்.
ரேட்டிங் 3.25./5.
மத்திய ரிசர்வ் காவல் படையில் அதிகாரியாக வேலையில் இருக்கும் கதாநாயகன் கிஷன் தாஸும், கதாநாயகி ஷ்ம்ருதி வெங்கட்டும் நட்பாக பழக ஆரம்பித்து அந்தப் பழக்கம் காதலிக்க மாற அவர்களுடைய பெற்றோர்கள் கதாநாயகன் கிஷன் தாஸும், கதாநாயகி ஷ்ம்ருதி வெங்கட்டும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.
அதன்படி, ஒரு சில தினங்களில் கதாநாயகன் கிஷன் தாஸும், கதாநாயகி ஷ்ம்ருதி வெங்கட்டுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் நிலையில், கதாநாயகி ஷ்ம்ருதி வெங்கட்டை சந்திக்க வீட்டுக்குள் வரும் ராஜ் ஐயப்பா திடீரென்று இறந்து விடுகிறான்.
ராஜ் ஐயப்பா இறந்த பிரச்சனையில் இருந்து தனது வருங்கால மனைவி கதாநாயகி ஷ்ம்ருதி வெங்கட்டை காப்பாற்றுவதற்காக முயற்சிக்கும் கதாநாயகன் கிஷன் தாஸ், அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் உடலை அப்புறப்படுத்துவதோடு, ராஜ் ஐயப்பாவின் மரணம் தொடர்பாக தங்கள் மீது யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வராத ஒரு சூழலை கதாநாயகன் கிஷன் தாஸ் உருவாக்க முடிவு செய்கிறார்.
அப்பார்ட்மெண்டில் உள்ள கண்காணிப்பு கேமரா, காவலாளிகள், ஆள் நடமாட்டம் என பிஸியாகவே இருக்கும் அப்பார்ட்மெண்டில் இருந்து ராஜ் ஐயப்பாவின் உடலை அப்புறப்படுத்தி, கொலை வழக்கில் இருந்து கதாநாயகன் கதாநாயகன் கிஷன் தாஸ், கதாநாயகி கதாநாயகி ஷ்ம்ருதி வெங்கட் இருவரும் தப்பித்தார்களா, தப்பிக்கவில்லையா?, என்பதுதான் இந்த தருணம் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த தருணம் திரைப்படத்தில் கதாநாயகனாக கிஷன் தாஸ் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் கிஷன் தாஸ் தனது வருங்கால மனைவி கொலை குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக போடும் திட்டமும், அதை செயல்படுத்தும் விதமும் மிக அருமையாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
இந்த தருணம் திரைப்படத்தில் கதாநாயகியாக ஷ்ம்ருதி வெங்கட் நடித்திருக்கிறார்.
கதாநாயகி ஷ்ம்ருதி வெங்கட் நான் செய்த குற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது? என்ற பதற்றத்தையும், பயத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி மிக அருமையாக நடித்திருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ் ஐயப்பா, அவரது அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், கதாநாயகன் கிஷன் தாஸ் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலசரவணன் ஆகியோர் ஒரு சில காட்சிகள் வந்தாலும், திரைப்படம் முழுவதும் வருவது போல் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, ஒளிப்பதிவு மூலம்
வழக்கமான ஒளிப்பதிவை தவிர்த்துவிட்டு, காட்சிகள் அனைத்தும் மிக இயல்பாக திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளது.
இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்தின் பின்னணி இசையில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் காட்சிகளின் தன்மைக்கு ஏற்றவாறு மிக அருமையாக பயணித்து இருக்கிறார்.
எதிர்ப்பாராத விதமாக நடந்த ஒரு கொலையில், இருந்து தப்பிக்க முயற்சிக்கும் கதாநாயகனின் புத்திசாலித்தனத்தை வைத்துக் கொண்டு மிக சுவாரஸ்யமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படத்தை மிக அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன்.
மொத்தத்தில், ‘தருணம்’ திரைப்படம் புதிய கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு நல்ல ஒரு அனுபவமாக இருக்கும்.











