உலகநாயகன் கமல்ஹாசனின் “குணா” திரைப்படம் 21 ஜூன் 2024 உலக முழுவதும் வெளி வருகிறது !!
உலகநாயகன் கமல்ஹாசனின் “குணா” திரைப்படம் 21 ஜூன் 2024 உலக முழுவதும் வெளி வருகிறது !!
சென்னை 13 ஜூன் 2024 இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த திரைப்படம் குணா.
சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகளவில் வெளியிட்டது.
33 ஆண்டுகளுக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தலை முறை கடந்து இன்றைய இளம் தலைமுறையினர் “குணா” திரைப்படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மலையாள திரைப்படமான “மஞ்சும்மல் பாய்ஸ்” திரைப்படம் தமிழக மட்டுமல்லாமல் குக்கிரமத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வசூலை வாரிக்குவித்தது.
மலையாள திரைப்படங்களில் மொத்தம் 200 கோடி மேல் வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்த அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது.
“குணா’ திரைப்படத்தில் இடம் பெற்ற வசனம், பாடல்களை இப்படத்தில் பயன் படுத்தியதே. குணா திரைப்படம் வெளியான போது கூட திரையரங்குகளில் “குணா” திரைப்படத்தில் இடம் பெற்ற வசனங்கள், பாடல்களுக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இன்றைய தலைமுறை “மஞ்சும்மல் பாய்ஸ்” திரைப்படத்தில் அதனை திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கொண்டாடியதை பார்த்து என் உடம்பு புல்லரித்து போனது என்றார் குணா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்தானபாரதி. இசைஞானி இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட “குணா” திரைப்படத்தில் கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ், அஜய்ரத்தினம், எஸ். வரலட்சுமி ,கிரீஷ் கர்னாட் , எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்துள்ளனர்.
கவிஞர் வாலி எழுதிய பாடல்களை, கமல்ஹாசன், எஸ்.ஜானகி, இளையராஜா, யேசுதாஸ், ஆகியோர் பாடியுள்ளனர்.
1991 ஆம் ஆண்டு வெளியான நேரடி தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாடு அரசு வழங்கிய சிறந்த திரைப்படத்திற்கான மூன்றாவது பரிசை “குணா’ திரைப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.
உலகநாயகன் கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையிலும், தமிழ் திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படமாக இருந்து வரும் குணா திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில், மெருகூட்டப்பட்டு உலகநாயகன் கமல்ஹாசனின் ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஜூன் 21 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்படுகிறது.
தமிழ் திரைப்பட ஆடியோ உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக முண்ணணி நிறுவனமாக, திகழ்ந்து வந்த பிரமிட் ஆடியோ குரூப் குணா திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளது.











