இட்லி கடை திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- தனுஷ், ராஜ்கிரண், அருண் விஜய், சத்யராஜ்,  சமுத்திரகனி, நித்யா மேனன், ஷாலினி பாண்டே,   பார்த்திபன்,  இளவரசு, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தனுஷ்.

ஒளிப்பதிவாளர் :- கிரண் கௌஷிக்.

படத்தொகுப்பாளர் :- ஜி.கே. பிரசன்னா.

இசையமைப்பாளர் :- ஜி.வி. பிரகாஷ் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர்கள் :-  ஆகாஷ் பாஸ்கரன் & தனுஷ்.

ரேட்டிங் :- 4./5.

தேனி மாவட்டத்தில் உள்ள  கிராமத்தில் தாய் கிதா கைலாசம் தந்தை ராஜ்கிரண் மகன் கதாநாயகன்  தனுஷ் சமையல் கலையை பற்றி படித்து வருகிறார்.

கதாநாயகன் தனுஷ் தந்தை ராஜ்கிரண் அந்த கிராமத்தில் ஒரு இட்லி கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில்

கதாநாயகன் தனுஷ் தந்தை ராஜ்கிரண் நடத்தி வரும் இட்லி கடையின் இட்லி சாம்பார் சுவை அந்த கிராமம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரபலம் வாய்ந்த ஒரு இட்லி கடையாக உள்ளது.

தனக்கு பிறகு ராஜ் கிரண் நடத்தி வரும் இட்லி கடையை தன்னுடைய மகன் கதாநாயகன் தனுஷ் நடத்த வேண்டும் என ராஜ்கிரண் ஆசைப்படுகிறார்.

ஆனால் கதாநாயகன் தனுஷ் அதை விட்டுவிட்டு தான் படித்த படிப்பு ஏற்றவாறு பாங்காங்கில் சென்று மிகப்பெரிய தொழிலதிபரான சத்யராஜின் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

பாங்காங்கில் மிகப்பெரிய தொழிலதிபரான சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டேவிற்கும் கதாநாயகன் தனுஷிற்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு  நடைபெற இருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு கதாநாயகன் தனுஷ் தந்தை ராஜ்கிரண் இறந்து விட்டதாக தகவல் கிடைக்க தனது தந்தை ராஜ்கிரன் இறுதி சடங்கை நடத்துவதற்காக பாங்காங்கில் இருந்து கதாநாயகன் தனுஷ் ன்னுடைய சொந்த கிராமத்திற்கு வருகிறார்.

தனது சொந்த கிராமத்திற்கு வந்த கதாநாயகன் தனுஷ் தன் தந்தை ராஜ் கிரண் ஆசைப்படி அந்த இட்லி கடையை எடுத்து நடத்தினாரா! நடத்தவில்லையா என்பதுதான் இந்த ‘இட்லிக்கடை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த இட்லி கடை திரைப்படத்தில் கதையின் நாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார்.

நடிகர் தனுஷ் வழக்கம் போல மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து சண்டை காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளிலும் நடிப்பை மூலம் தேசிய விருது வென்ற நடிகர் என்பதை இந்த இட்லி கடை திரைப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.

பா பாண்டி, ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படங்களை தொடர்ந்து இட்லி கடை திரைப்படத்திலும் ஒரு இயக்குனராக வெற்றி பெற்றுள்ளார்.

இந்த இட்லி கடை திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் அசத்தியுள்ளார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண் விஜய் ஒரு பணக்கார வீட்டு பையனுக்கு உள்ள அத்தனை தோரணையிலும் ஒரு திமிரான கதாபாத்திரத்திலும் பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண் விஜயின் கதாபாத்திரம் தான் இந்த இட்லி கடை திரைப்படத்தை தாங்கி பிடிக்க உதவுகிறது.

இந்த இட்லி கடை திரைப்படத்தில் இரண்டு நாயகிகளாக நித்யா மேனன் ஷாலினி பாண்டே இருவரும் நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் நித்யா மேனன் ஷாலினி பாண்டே இருவரும் கொடுக்கப்பட்ட தங்களுடைய கதாபாத்திரத்திற்கு மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

கதாநாயகன் தனுஷ் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரண் தாய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம் பாங்காங்கில் உள்ள தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் மற்றும் காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பார்த்திபன் கதாநாயகன் தனுஷ் உடன் பயணிக்கும் இளவரசு புரோட்டா கடை நடத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி மற்றும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை கொடுத்து திரைக்கதை ஓட்டத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு அனைத்து பாடல்களும் இனிமையாக இருந்தது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கிரண் கௌஷிக் மிகவும் அழகான ஒளிப்பதிவு கொடுத்து திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

சொந்த ஊரை மறந்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் சென்று வேலை பார்க்கும் அனைவருக்கும் தனது சொந்த ஊர் தான் முக்கியம் என வரும் அனைவருக்கும் இந்த இட்லி கடை திரைப்படம் கனெக்ட் ஆகும்.

என்னதான் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலைக்கு  சென்றாலும் தங்களது சொந்த ஊரையும் மறக்கக்கூடாது என்பதை இயக்குநர் தனுஷ் இந்த இட்லி கடை திரைப்படத்தின் மூலம் நினைவுபடுத்துகிறார்.

மொத்தத்தில், – இந்த இட்லி கடை சென்டிமென்ட்  எமோஷனல் நிறைந்த சிறந்த திரைப்படம்.

error: Content is protected !!