‘மாயன்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- வினோத் மேனன், பிந்து மாதவி, ஜான் விஜய், ஆடுகளம் நரேன், ஸ்ரீரஞ்சனி, சாய் தீனா, ரஞ்சனா நாச்சியார், கஞ்சா கருப்பு, ராஜா சிம்மன், மரியா, பியா பாஜ்பாயி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- J. ராஜேஷ் கண்ணா.

ஒளிப்பதிவாளர் :- K.அருண் பிரசாந்த்.

படத்தொகுப்பாளர் :- M.R.ரெஜிஸ்.

இசையமைப்பாளர் :- M.S.ஜோன்ஸ் ரூபர்ட்.

தயாரிப்பு நிறுவனம் :- ஃபாக்ஸ் & க்ரோ ஸ்டுடியோஸ் .

தயாரிப்பாளர் :- : J.ராஜேஷ் கண்ணா, டத்தோ கணேஷ் மோகன சுந்தரம்.

ரேட்டிங்:- 2.75./5.

ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வரும் கதாநாயகன் வினோத் மோகன் தன் கண்ணெதிரில் எது நடந்தாலும் என்ன நடந்தாலும் எதையுமே கண்டுக்கொள்ளாமல் இருப்பதோடு, தனக்கு எப்படிப்பட்ட அவமானம் நேர்ந்தாலும் அதை சகித்துக் கொண்டு வாழ்வதோடு, தன் தாய்க்காக எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்குவதையும் தனது தங்கை திருமணத்தையும் முடித்து வைக்க வேண்டும் என லட்சியத்தோடு பயணிக்கிறார்.

இந்த நிலையில், கதாநாயகன் வினோத் மோகனுக்கு மின்னஞ்சல் ஒன்று, வருகிறது.

அந்த மின்னஞ்சலில் வரும் செய்தி “13 நாட்களில் உலகம் அழியப்போகிறது, நீ மாயர்களின் பிள்ளை என்பதால் உனக்கு இதை விஷயத்தை தெரியப்படுத்துகிறோம்.

இது விஷயம் மிகவும் முக்கியமான ரகசியம், என்பதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மின்னஞ்சலில் செய்தி வருகிறது.

இந்த மின்னஞ்சலில் வந்த செய்தியை நம்பாத கதாநாயகன் வினோத் மோகனை சுற்றி சில மர்மமான விசயங்கள் நடக்கத் ஆரம்பிக்கிறது.

அதனால், தனக்கு வந்த மின்னஞ்சலில் வந்த தகவலை நம்பாத வினோத் மோகன், உலகம் அழியத்தானே போகிறது என்பதால், இதுவரை தன் வாழ்வில் செய்யாத அனைத்தையுமே தைரியமாக செய்கிறார்.

இந்த மாயன் திரைப்படத்தில் கதாநாயகனாக புதுமுக நடிகர் வினோத் மோகன், நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் புதுமுக நடிகர் வினோத் மோகன், ஆக்‌ஷன் கதாநாயகனுக்கான அனைத்து தகுதிகளும் உள்ளாவராக இருக்கிறார்.

ஆனால், கதாநாயகன் புதுமுக நடிகர் வினோத் மோகன் அடிதடி கதாநாயகனாக காட்டாமல் ஆன்மீக கதாநாயகனாக இந்த திரைப்படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

இந்த மாயன் திரைப்படத்தில் ஆனால், கதாநாயகன் புதுமுக நடிகர் வினோத் மோகன் தன்னுடைய முகத்தை காட்டாமல் முகம் முழுவதும் தாடியை வைத்துக் கொண்டு நடித்திருப்பதால், அவருடைய நடிப்பு எதுவும் தெரியாமல் போய்விட்டது.

இந்த மாயன் திரைப்படத்தில் கதாநாயகியாக பிந்து மாதவி நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பிந்து மாதவி, குறைவான காட்சிகளில் வந்து போகிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் தீனா, ராஜ சிம்மன் ஆகியோர் வழக்கமான தங்களது நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஞ்சனா நாச்சியார் சிறிய வசனங்களோடு வந்து சென்று விடுகிறார்.

கஞ்சா கருப்பு, மரியா, பியா பாஜ்பாயி ஆகியோரும் திரைப்படத்தில் இருக்கிறார்கள் பெரிதாக வேலை ஒன்றும் இல்லை.

ஒளிப்பதிவாளர் கே.அருண் பிரசாத்தின் ஒளிப்பதிவை விட கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அதிகமாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் கே.அருண் பிரசாத்தின் ஒளிப்பதிவு மூலம் முடிந்தவரை திரைப்படத்தை தரமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

இசையமைப்பாளர்  எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை மிக அருமையாக கொடுத்திருக்கிறார்.

இந்த மாயன் திரைப்படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை இயக்குநர் கதை மற்றும் திரைக்கதையில் கொடுத்திருந்தால் மிகவும் வித்தியாசமான ஒரு கமர்ஷியல் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கொடுத்திருக்கலாம்.

மொத்தத்தில், காலத்தை கணிக்கும் ‘மாயன்’ திரைப்படத்தை மக்களால் கணிக்க முடியாது.