தலைக்கூத்தல் திரைப்படத்தில் நான் நடித்த சிறப்பு தோற்றத்திற்க்கு விருது கிடைத்தால்  பத்திரிக்கையாளர்களுக்கு சமர்ப்பணம் செய்வேன் நடிகர் வையாபுரி!

சென்னை 12 மார்ச் 2023 தலைக்கூத்தல் திரைப்படத்தில் நான் நடித்த சிறப்பு தோற்றத்திற்க்கு விருது கிடைத்தால்  பத்திரிக்கையாளர்களுக்கு சமர்ப்பணம் செய்வேன் நடிகர் வையாபுரி!

கடந்த 2023 பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த “தலைக்கூத்தல்” திரைப்படத்தில் வையாபுரி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.!

வையாபுரியின் தோற்றத்தையும், நடிப்பையும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் இனையத்தள நண்பர்கள் வெகுவாக பாராட்டினார்கள்!

மேலும் நடிகர்களும், இயக்குனர்களும் வையாபுரி நடிப்பை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், “இந்த ஆண்டுக்கான சிறப்பு தோற்ற விருதை தாங்கள் பெறுவீர்கள்” என உற்சாகப்படுத்தினர்!

இந்த தலைக்கூத்தல் திரைப்படத்தில் நடித்ததற்காக விருது ஒன்று தனக்கு கிடைத்தால், அந்த விருதை ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக இனையத்தள நண்பர்களுக்கும் சமர்ப்பணம் செய்வேன் என்கிறார் வையாபுரி!