‘காளிதாஸ் 2’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- பரத், அபர்ணதி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கிஷோர், சங்கீதா, ஆனந்த் நாக், அஜய் கார்த்திக், ரகு எசக்கி, யோகேஷ் கலாம், அஜய் கார்த்தி, சிங்கம் ஜெயவேல், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஸ்ரீ செந்தில்.
ஒளிப்பதிவாளர் :- சுரேஷ் பாலா.
படத்தொகுப்பாளர் :- புவன் ஸ்ரீனிவாசன்.
இசையமைப்பாளர் :- சாம் சி.எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்கை பிக்சர்ஸ். பைவ் ஸ்டார் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- டாக்டர் என். யோகேஸ்வரன், ஃபைவ் ஸ்டார் செந்தில்.
மக்கள் தொடர்பு :- யுவராஜ்.
ரேட்டிங் :- 3.75./5.
560 குடியிருப்பு உள்ள மிகப்பெரிய அபார்ட்மெண்ட்டில் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருக்க அபர்ணதி, ஆனந்த் நாக், இளம் தம்பதியினரின் பெண் குழந்தை காணாமல் போய் விட காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க காவல்துறை அதிகாரிகளான கதாநாயகன் பரத் மற்றும் கதாநாயகி பவானி ஸ்ரீ உடனடியாக கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகின்றனர்.
காணாமல் போன இந்த குழந்தையை கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் போதே மற்றொரு பெண் குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து இறந்து விடுகிறது.
காணமல் போன அபர்ணதி, ஆனந்த் நாக், தம்பதியினரின் பெண் குழந்தை பிணமாக கண்டெடுக்க அடுத்தடுத்து மற்றொரு பெண் குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து இறந்து விட காவல்துறை அதிகாரியான கதாநாயகன் பரத் மற்றும் கதாநாயகி பவானி ஸ்ரீ இரண்டு குழந்தைகளையும் கொலை செய்தது இவரா இருக்குமா என உடனடியாக மற்றொரு கதாநாயகன் அஜய் கார்த்திக்கை சந்தேகத்தின் பெயரில் கைது செய்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட அஜய் கார்த்திக் பிரபல வழக்கறிஞர் பிரகாஷ் ராஜ் கைது செய்யப்பட்ட மற்றொரு கதாநாயகன் அஜய் கார்த்திகை விடுவிக்க உண்மையிலே கொலைகாரன் யார்? எதற்காக இந்த இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்தது யார்?, கொலைகாரணை காவல்துறையினர் கைது செய்தார்களா?, கைது செய்யவில்லையா?, என்பதுதான் இந்த காளிதாஸ் 2 திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த காளிதாஸ் 2 திரைப்படத்தில் கதாநாயகனாக பரத் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் பரத் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்துள்ளார்.
இந்த காளிதாஸ் 2 திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக அஜய் கார்த்திக் நடித்திருக்கிறார்.
இன்னொரு கதாநாயகனாக நடித்திருக்கும் அஜய் கார்த்திக் சிறப்பாக நடித்துள்ளார்.
இந்த காளிதாஸ் 2 திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பவானி ஸ்ரீ, நடித்திருக்கிறார்.
முதன்மை கதாபாத்தில் நடித்திருக்கும் பவானி ஸ்ரீ காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.
வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர், இருவருமே சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பூவே உனக்காக சங்கீதா இந்த திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
காணாமல் போன பெண் குழந்தையின் தாய் மற்றும் மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் அஜய் கார்த்திக்கின் காதலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபர்னதி மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகன் பரத்துடன் காவல்துறையை சேர்ந்த காவலர் கதாபத்திரத்தில் நடித்திருக்கும் சிங்கம் ஜெயவேல் திரைப்படம் முழுவதும் ஆங்காங்கே அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.
இந்த காளிதாஸ் 2 திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ஆனந்த் நாக், ரகு எசக்கி, யோகேஷ் கலாம், என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு முலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.ஸின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு எந்த ஒரு காட்சிகளிலும் தோய்வில்லாமல் திரைப்படத்திற்கு பலமான படத்தொகுப்பை கொடுத்திருக்கிறார்.
குழந்தை காணாமல் போகிறது என்ற ஒரு சிறிய கதையை வைத்துக் கொண்டு வித்தியாசமான திரைக்கதை அமைப்பு பல்வேறு சம்பவங்களை கோர்த்து திரில்லர் திரைப்படமாக இந்த ‘காளிதாஸ் 2’ அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கக் கூடிய வகையில் வெற்றி திரைப்படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் ஸ்ரீ செந்தில்.
மொத்தத்தில் இந்த காளிதாஸ் 2 திரைப்படம் குழந்தைகள் மீது கவனம் வைக்காத தம்பதிகளுக்கு விழிப்புணர்ச்சி திரைப்படமாக அமைத்திருக்கிறது.











