’ராம் அன்ட் லீலா’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ரியோ ராஜ், வர்த்திகா, சேத்தன், முனிஷ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், மகாபா ஆனந்த், பாலாஜி தியாகராஜன்,  தயாளன், தாஃபியா அபு,  கவின் ஜிடி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராமச்சந்திரன் கண்ணன்.

ஒளிப்பதிவாளர் :- மல்லைகார்ஜுன்.

படத்தொகுப்பாளர் :- ஒய்என்சி சிவா.

இசையமைப்பாளர் :- அங்கித் மேனன்.

தயாரிப்பு நிறுவனம் :- டிரைடென்ட் ஆர்ட்ஸ் & ஈவா என்டர்டைன்மென்ட்.

தயாரிப்பாளர்கள் :- ஆர் ரவீந்திரன், சுதர்சன்.

மக்கள் தொடர்பு :- சதீஷ் குமார், S2 மீடியா.

ரேட்டிங் :-  3.5/5.

திருமண வயதை கடந்து காதலிக்க பெண் கிடைக்காமலும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கும் கதாநாயகன் ரியோ ராஜ், ரயிலில் பயணம் செய்யும்போது கதாநாயகி வர்த்திகா சந்தித்து காதலிக்க தொடங்குகிறார்.

அதே சமயம், கதாநாயகி வர்த்திகா தன்னை காதலிக்க வேண்டும் என்றால் ஒரு நிபந்தனையை விதிக்கும் நிலையில் அந்த நிபந்தனை  என்னவென்றால்  மாலை 6 மணிக்கு மேல் தன்னை வீட்டை விட்டு எனது அம்மா வெளியே விட மாட்டார்கள், அதனால் 6 மணிக்கு மேல் உன்னை சந்திக்க மாட்டேன், என்ற நிபந்தனை விதிக்கிறார்.

கதாநாயகி வர்த்திகாவின் அழகிலும், காதலிலும் மயங்கிய கதாநாயகன் ரியோ ராஜ், அவரது நிபந்தனையை ஏற்று காதலிக்க தொடங்குகிறார்.

சில நாட்களுக்குப் பிறகு கதாநாயகி வர்த்திகாவின் மாலை 6 மணி நிபந்தனை கதாநாயகன் ரியோராஜ்க்கு பல சிக்கல்களை ஏற்படுத்த, 6 மணி ரகசியத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும் என கதாநாயகன் ரியோ ராஜ், முடிவு செய்கிறார்.

ஆறு மணிக்கு போல் தனது  கதாநாயகி வர்த்திகாவிற்க்கு  மாலைக்கண் நோய் பிரச்சனையாக இருக்குமோ…!, என்று கதாநாயகன் ரியோராஜ் நினைக்கிறார்.

கதாநாயகி வர்த்திகாவின் ஆறு மணிக்கு மேல் இருக்கும் பிரச்சனை என்ன?,

கதாநாயகன் ரியோராஜ் கதாநாயகி வர்த்திகாவின் ஆறு மணிக்கு மேல் இருக்கும் பிரச்சனை என்னவென்று தெரிந்து கொண்டாரா? தெரிந்து கொள்ளவில்லையா?

கதாநாயகி வர்த்திகாவை கதாநாயகன் ரியோராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டாரா? செய்து கொள்ளவில்லையா? 
என்பதுதான்  இந்த ‘ராம் அன்ட் லீலா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘ராம் அன்ட் லீலா’ திரைப்படத்தில் கதாநாயகனாக ரியோ ராஜ் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ரியோராஜ் ராம் கதாபாத்திரத்தில் காமெடி கலந்த கதாநாயகன் ரியோ ராஜ் அசைவுகள் மூலமாகவும் ரசிகர்களை சிரிக்க வைத்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த ‘ராம் அன்ட் லீலா’ திரைப்படத்தில் அறிமுக  கதாநாயகியாக வர்த்திகா நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை வர்த்திகா மிகவும் அழகாக இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை வர்த்திகாவிற்க்கு கனமான கதாபாத்திரம் என்றாலும், கதாநாயகன் ரியோ ராஜ் அளவிற்கு நடிப்பதற்கு இந்த ஒரு காட்சிகளிலும் வாய்ப்புகள் இல்லை.

கதாநாயகன் ரியோ ராஜ் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேத்தன், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகா அவினாஷ், தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தாஃபியா அபு, மாமன்  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முனீஷ்காந்த், நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலாஜி தியாகராஜன் தயாளன், கதாநாயகி வர்த்திகா தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா வெங்கட், மாமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாகாபா அனந்த தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு அனைவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்..

ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுன், ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி
கதாநாயகியை அழகாகவும், பளிச்சென்றும் காட்டுவதில் மட்டுமே அதிகளவில்  மெனக்கெட்டு திரைப்படம் முழுவதையும் பளிச்சென்று திரைப்படமாக்கி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் அங்கித்  மேனனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பாடல்களைப் போல் மெலோடி பாணியில் மிகவும் இதமாக இருக்கிறது‌

இதே கதை கருவோடு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஒரு திரைப்படம் வெளியானது சுட்ட கருவாக இருந்தாலும், சரி சுகாமன் யோசித்த கருவாக இருந்தாலும் சரி அந்தக் கதை கருவை தமிழ் திரைப்பட ரசிகர்கள் ஏற்றவாறு திரைப்படத்தை  கொடுத்ததில் வெற்றி பெற்றுவிட்டார் இயக்குநர்  ராமச்சந்திரன் கண்ணன்.

மொத்தத்தில், ’ராம் அன்ட் லீலா’ குடும்பத்துடன் கண்டுக்களிக்க வேண்டிய பொழுதுபோக்கு திரைப்படம்.

error: Content is protected !!