உலகநாயகன் கமலஹாசன் மருத்துவமனையில் எப்படி இருக்கிறார்? மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.!

சென்னை 24 நவம்பர் 2022 உலகநாயகன் கமலஹாசன் மருத்துவமனையில் எப்படி இருக்கிறார்? மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.!

23 நவம்பர் 2022 உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் நேற்று நள்ளிரவு உடல் நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவரது ரசிகர்களும் தமிழ் திரைப்பட உலகினர் மக்கள் நீதி மைய கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

24 நவம்பர் 2022 உலகநாயகன் நடிகர் கமலஹாசன் அவர்களின் உடல்நிலை குறித்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனை நிர்வாகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தற்போது குணமாகி வருகிறார்.

இன்னும் ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.