காந்தாரா திரை விமர்சனம் ரேட்டிங் :- 4.25 / 5.

நடிகர் நடிகைகள் :- ரிஷப் ஷெட்டி, சப்தமி கவுடா, கிஷோர், அச்சுயுத் குமார், ப்ரமோத் ஷெட்டி, ஷனில் குரு, பிரகாஷ் துமிநாட், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ரிஷப் ஷெட்டி.

ஒளிப்பதிவு :- அரவிந்த் எஸ் காஷ்யப்.

படத்தொகுப்பு :- கே.எம் பிரகாஷ் | பிரதீக் ஷெட்டி.

இசை :- B. அஜனீஷ் லோக்நாத்.

தயாரிப்பு :- ஹோம்பாலே பிலிம்ஸ்.

ரேட்டிங் :- 4.25 / 5.

 

கே.ஜி.எப்’ முதல் மற்றும் இரண்டாம் பாகம் 777 சார்லி, தரைப்படங்களுக்குப் பிறகு கன்னடத் திரைப்பட உலகின் மீதான பார்வை முற்றிலும் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பதிந்து விட்டது.

கன்னடத் திரைப்பட உலகிலும் மிகவும் தரமான நடிகர்கள் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை கன்னடத் திரைப்பட உலகத்தை சேர்ந்த மிக நல்ல திறமைசாலிகள் நல்ல திரைப்படங்கள் மூலம் நிரூபிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நடிகர் யாஷ் நடிப்பில் வெளிவந்த’கேஜிஎப் பாகம் 1 பாகம் 2′ திரைப்படத்திற்குப் பிறகு வந்த நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளிவந்த ‘777 சார்லி’ நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் தற்போது வெளி வந்துள்ள ‘காந்தாரா’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வரவேற்பையும் வெற்றியையும் கன்னட திரைப்படம் உலகிற்கு பெருமை சேர்த்து வருகிறது.

கன்னட திரைப்பட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி கதையின் நாயகனாக நடித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு கன்னட திரை உலகில் வெளிவந்து கன்னட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வரும் திரைப்படமான ‘காந்தாரா’ வெளிவந்திருக்கிறது.

தமிழ் திரைப்பட ரசிகர்கள் கொண்டாடுவதற்காக தமிழில் மொழிமாற்றம் செய்து அக்டோபர் 15ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகி இருக்கிறது.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடகாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஆண்ட ஒரு மன்னன் நிம்மதி இல்லாமல் நிம்மதி இழந்து தவிர்த்து வருகிறார்.

பலவிதமான கோயில்களில் பூஜைகள் செய்து அந்த நாட்டில் மன்னருக்கு நிம்மதி வரவில்லை.

அப்பொழுது ஒரு ஜோதிடர் உனக்கு நிம்மதி வேண்டும் என்றால் நீ ஒருவனாக தனியாக சென்று உனது நிம்மதியை தேடு என கூறுகிறார்.

அப்படி நிம்மதியைத் தேடிப் புறப்படுகிறார் மன்னர் மலை கிராமப் பகுதி ஒன்றில் மக்கள் வழிபடும் கற்சிலை ஒன்றைப் பார்த்ததும் மன்னருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடைகிறார்.

அந்தக் கற்சிலையை தனக்குத் தரும்படி கிராம மக்களிடம் கேட்கிறார்.

அப்பொழுது சாமியாடியாக இருக்கும் அந்த கிராமத்துவாசி சாமியாடியில் உடலில் சாமி வந்து சத்தமாகக் கத்தி, அந்த கத்தல் ஒலி கேட்டது வரையிலான மன்னரின் நிலங்களை கிராமத்து மக்களுக்குத் தந்தால் கற் சிலையை எடுத்துக் கொண்டு போகலாம் என அந்த சாமியாடி கூறுகிறார்.

மன்னரும் அதற்கு சம்மதித்து அந்த கிராமத்து மக்களுக்கு தனக்குச் சொந்தமான நிலங்களைத் தந்து கற்சிலை கடவுளை தன்து நாட்டிற்கு எடுத்துச் செல்கிறார்.

பல வருடங்களுக்குப் பிறகு 1970ஆம் வருடம் அந்த மன்னரின் வாரிசுகள் தங்களது முன்னோர் கொடுத்த அந்த நிலத்தை மீண்டும் கிராமத்து மக்களிடம் இருந்த பெற நீதிமன்றம் மூலமாக முயற்சிக்கிறார்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார் அந்த மன்னரின் வாரிசு.

ஆனால், அவர் நீதிமன்ற வாசலில் ரத்தம் கக்கி இறந்து விடுகிறார்.

பிறகு 1990ஆம் வருடம் மற்றொரு மன்னரின் வாரிசான அச்யுத் குமார் அந்த கிராமத்து மக்களும் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

மன்னரின் வாரிசான அச்யுத் குமார் மக்களுக்கு நல்லவர் போல நடித்தாலும், அந்த நிலங்களை மீண்டும் எப்படியாவது கைப்பற்றும் திட்டத்தில் இருந்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் அச்யுத் குமார் திட்டம் பற்றி அறிந்து கொண்டு அந்த மண்ணின் மைந்தன் ரிஷப் ஷெட்டி, தனது மலை கிராம மண்ணையும் மக்களையும், காப்பாற்ற முயற்சிக்கிறார்.

மன்னரின் வாரிசான அச்யுத் குமாரிடம் இருந்து தனது மண்ணையும் மக்களையும் கதாநாயகன் ரிஷிப் ஷெட்டி காப்பாற்றினாரா? இல்லையா?
என்பதுதான் இந்த காந்தாரா திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த காந்தாரா திரைப்படத்தில் ரிஷிப் ஷெட்டி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

மலை கிராமத்தில் அடிக்கடி குடிப்பதும் புதைப்பதும் வேலையாக கொண்டு அவருடைய நண்பர்களுடன் சுற்றித் திரியும் சிவா இளைஞன் சிவா கதாபாத்திரத்தில் ரிஷப் ஷெட்டி வாழ்ந்திருக்கிறார்.

மற்றவர்களை மிரட்டும், விரட்டும் முரட்டு இளைஞனாக இருந்தாலும் தனது தாய் கோபத்தைக் கண்டு பயந்து தெறித்து ஓடுவது மிக மிக அருமை.

அனைத்திற்கும் மேலாக கிளைமாக்சில் திருவிழாவின் போது அவர் எடுக்கும் அவதாரம் நம்மை மிரண்டு போக வைக்கிறது.

இந்த காந்தாரா திரைப்படத்தில் கதாநாயகியாக சப்தமி கவுடா நடித்திருக்கிறார்.

இநத திரைப்படத்தில் கதாநாயகனுக்கு ஒரு ஜோடி தேவை என்பதற்காகவே சப்தமி கவுடா கதாநாயகியாக சேர்த்துள்ளனர்.

ஒரு சில காட்சிகளில் அவரைக் கொஞ்சம் கிளாமர் கோணங்களில் காட்டி இருக்கிறார்கள்.

இருவருக்குமான நெருக்கமான காதல் காட்சிகள் திரைப்படத்தில் இல்லையென்றாலும் மிகப்பெரிய தெய்வகுத்தமாக அமைந்திருக்காது.

காட்டிலாகா காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் ஆடுகளம் கிஷோர் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

காட்டிலாகா காவல் அதிகாரி ஆடுகளம் கிஷோர்
மிடுக்காக அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.

நாம் பார்த்து கேட்டு ரசித்த அவருடைய சொந்த குரலில் அவரை டப்பிங் பேச வைத்திருந்தால் இன்னும் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.

இவர்தான் வில்லன் என நினைத்து திரைப்படத்தில் எதிர்பார்த்தால் கிளைமாக்சில் டுவிஸ்ட் வைத்து விடுகிறார்கள்.

ஒரு அசால்ட்டான வில்லனாக அச்யுத் குமார் மக்களின் தலைவர் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக அசத்தியிருக்கிறார்.

வில்லன் அச்யுத் குமார் உட்கார்ந்த இடத்திலிருந்தே துப்பாக்கியில் சுட்டுத் தள்ளுவதெல்லாம் வேறு மாதிரியான வில்லத்தனம் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது.

கதாநாயகன் ரிஷப் ஷெட்டியின் தாய், மற்றும் நண்பர்கள் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் மிகவும் அற்புதமாக அவரவர் வேலையை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப் இந்த திரைப்படத்திற்கு மிகப் பிரமாதமாக காட்சிப்படுத்தி உழைத்திருக்கிறார்

இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசை பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தும் திரைப்படத்திற்கு மிகவும் அருமையாக அமைந்திருக்கிறது

படத் தொகுப்பாளர் பிரகாஷ், பிரதீக் ஷெட்டி படத்தொகுப்பு பக்க பலமாக உள்ளது.

பார்க்காத கதைகள் அதிக ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு, எதிர்பார்க்க முடியாத திருப்பங்கள் என ஒரு திரைப்படம் அமையும் போது அது மொழிகளைக் கடந்து, பழக்க, வழக்கங்களைக் கடந்து ரசிக்க வைக்கும். அதற்கு இந்த ‘காந்தாரா’ ஒரு சிறந்த திரைப்படமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் காந்தாரா திரைப்படம் அருமை அற்புதம் அட்டகாசம்.

error: Content is protected !!