‘மரியா’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சாய்ஸ்ரீ பிரபாகரன், பாவெல் நவகீதன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஹரி கே சுதன்.

ஒளிப்பதிவாளர் :- மணிசங்கர் ஜி.

படத்தொகுப்பாளர் :- காமேஷ் கே (&) நிஷார் ஷேர்ஃப் ஏ.

இசையமைப்பாளர் :- அரவிந்த் கோபாலகிருஷ்ணன் (&) பரத் சுதர்ஷன்.

தயாரிப்பு நிறுவனம் :-  டார்க் ஆர்ட்ஸ் என்டர்டைன்மெண்ட்.

தயாரிப்பாளர் :- : ஹரி கே ஹரசுதன்.

ரேட்டிங் 1.75./5.

விடுமுறை நாட்களை கழிப்பதற்காக தன்னுடைய உறவினர் வீட்டுக்கு வரும் கன்னியாஸ்திரியான கதாநாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன் தங்கும் அந்த வீட்டில் இரண்டு பெண்கள இரண்டு ஆண்கள் தங்கி உள்ளனர்கள்.

உறவினர் வீட்டில் சில நாட்கள் தங்கும் கன்னியாஸ்திரியான கதாநாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன் கன்னியாஸ்திரி வாழ்க்கை பிடிக்காமல் அப்படி ஒரு வாழ்க்கையில் இருந்து வெளியேறி மற்ற பெண்களைப் போல் சகஜமாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறார்.

ஆனால், அவருடைய தாய் குடும்பம் இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, கன்னியாஸ்திரி வாழ்க்கைதான் உனக்கு நல்லது என தாயை தாய் எதிர்த்து எனக்கு கன்னியாஸ்திரி வாழ்க்கை வேண்டவே வேண்டாம் என கூறும் கதாநாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன் தாய் வீட்டை விட்டு துரத்தி விடுகிறது.

இதனால் கிறிஸ்தவ மதத்தையும் கன்னியாஸ்திரி வாழ்க்கையும் வெறுக்கும் கதாநாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன், கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான சாத்தானை வழிபடும் குழுவின் தலைவன் பாவெல் நவகீதன், இணைந்து உனக்கு பிடித்த சந்தோஷமான வாழ்க்கையை பயணிக்க முடிவு செய்கிறார்.

கதாநாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன், அவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது, சாத்தான் வழிபாடு என்றால் என்ன?, கதாநாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன், நினைத்த சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தாரா? வாழவில்லையா? என்பதுதான் இந்த மிரியா திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மரியோ திரைப்படத்தில் அறிமுக கதையின் நாயகியாக கதாநாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன், நடித்திருக்கிறார்.

ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்து, திரைப்படம் முழுவதையும் ஒற்றை ஆளாய் தன் தோளில் சுமந்தது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படத்திலேயே நடிகை சாய்ஸ்ரீ பிரபாகரன், சர்ச்சை கூறிய கதாபாத்திரத்தில் மிகவும் தைரியமாக நடித்திருக்கிறார். 

சாத்தான் வழிபாட்டு குழுவின் தலைவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாவல் நவகீதன், மிகவும் அருமையாக நடித்தது மட்டுமல்லாமல் அதிக அளவில் பல பக்கங்கள் உள்ள வசனங்களை எவ்விதமான தடுமாற்றம் இன்றி பேசி தனது கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

கதாநாயகியின் உறவினர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிது குமரேசன், அவரது காதலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை எவ்வித குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மணிஷங்கர்.ஜி, ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக திரைப்படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் அரவிந்த் கோபால கிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்ஷன் இசையில் பாடல்கள் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்கள்.

மதம் வேறுபாடு பார்க்காமல் அத்தனை மதத்தினரும் வழிபடும் அன்னை மரியாவை மிகப்பெரிய அளவில் அசிங்கப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஹரி கே.சுதன்.

மொத்தத்தில், ‘மரியா’ கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான ஒரு திரைப்படம்.

error: Content is protected !!