’லோகா – அத்தியாயம் 1 : சந்திரா’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் கே கஃபூர், சந்து சலீம்குமார், அருண் குரியன், சாண்டி., மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- டொமினிக் அருண்.
ஒளிப்பதிவாளர் :- நிமிஷ் ரவி.
படத்தொகுப்பாளர் :- சாமன் சக்கோ.
இசையமைப்பாளர் :- ஜேக்ஸ் பிஜாய்.
தயாரிப்பு நிறுவனம் :- வேஃபேரர் பிலிம்ஸ்.
தயாரிப்பாளர் :- வேஃபேரர் பிலிம்ஸ்.
ரேட்டிங் 3.75./5.
பெங்களூர் வரும் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் அடிக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகிறார்.
அங்குள்ள பேக்கரி ஒன்றில் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் பணியாற்றி வரும் நிலையில் தங்கியிருக்கும அடிக்குமாடி குடியிருப்புக்கு எதிரே இருக்கும வீட்டில் நஸ்லென் கே கஃபூர், சந்து சலீம்குமார், மற்றும் அருண் குரியன் வசித்து வருகின்றனர்.
எதிர் வீட்டில் இருக்கும் நஸ்லென் கே கஃபூர், சந்து சலீம்குமார், மற்றும் அருண் குரியன் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷனை காதலில் விழ வைப்பதற்கு முயற்சி மேற்கொள்கிறார்கள்.
அதே சமயம், பல மனிதர்களை கடத்தி சென்று அவர்களின் உடல் உறுப்புகளை திருடும் கும்பலால் பெங்களூர் மாநகரமே பரபரப்புக்குள்ளாகிறது.
இந்த நிலையில் உடல் உறுப்புகளை திருடும் கும்பலுடன் தொடர்புடைய காவல்துறை ஆய்வாளரான நடன இயக்குநர் சாண்டியுடன், கதாநாயகி கல்யாணி பிரியர்தர்ஷன் மோதல் ஏற்படக்கூடிய சூழல் ஏற்படுகிறது.
அப்பொழுதுதான் தெரிய வருகிறது கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் ஒரு சாதாரண பெண்ணல்ல அவளுக்கு அதீத சக்திகள் கொண்ட பெண் என்பது தெரிய வருகிறது.
அதற்கு அடுத்து என்ன நடந்தது என்ன?, உண்மையில் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷினி எப்படி அதீத சக்திகள் கொண்ட பெண்ணாக மாறிபது எப்படி என்பதுதான் இந்த ’லோகா- அத்தியாயம் 1 : சந்திரா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘லோகா அத்தியாயம் 1 சந்திரா’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் அதீத சக்திகள் படைத்த பெண்ணாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சண்டைக்காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த கதாபாத்திரத்திற்கு அதிகளவில் வசனங்கள் பேசவில்லை என்றாலும், தனது அளவான நடிப்பு உடல் மொழி மூலம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு மிக அருமையாகவும் கச்சிதமாகவும் பொருந்தியிருக்கிறார்.
தனது கதாபாத்திரத்தை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை அனைவரும் ரசிக்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.
இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நஸ்லென் கே கஃபூர், சந்து சலீம்குமார், அருண் குரியன், ஆகியோர், அவர்களுடைய உரையாடல் மற்றும் உடல் மொழி ஆகியவை பல காட்சிகளில் சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நாச்சியப்பா கவுடா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர் சாண்டியின் வில்லத்தனம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் திரையில் தோன்றிய கதாபாத்திரங்கள் மிகப்பெரிய அளவில் இரண்டாம் பாகத்தை எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் பிரமாண்டமானதாக மட்டும் இன்றி ஒளிப்பதிவை தரமானதாகவும் சிறப்பாகவும் கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
தென்னிந்திய திரைப்பட உலகில் சூப்பர் மேன் கதைகள் உள்ள திரைப்படங்கள் வருவது மிக மிக அரிதானது என்றாலும், அப்படிப்பட்ட திரைப்படங்களை திரைப்பட ரசிகர்கள் மனதில் பதிய வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம் அந்த மிகப்பெரிய சவாலான விஷயத்தை மிகவும் சிறப்பாகவே இயக்கியிருக்கிறார் இயக்குநர் இயக்குநர் டொமினிக் அருண்.
மொத்தத்தில், ’லோகா- அத்தியாயம் 1 : சந்திரா’ சூப்பர் தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக ரசிக்கலாம்.











