கருப்பு பெட்டி, கதாநாயகன் தயாரிப்பாளர் நடிகர் K C பிரபாத்,  மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமைனையில் அனுமதி !

கருப்பு பெட்டி, கதாநாயகன் தயாரிப்பாளர் நடிகர் K C பிரபாத்,  மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமைனையில் அனுமதி !

சென்னை 08 அக்டோபர் 2024 தயாரிப்பாளர், நடிகர் K C பிரபாத், படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

தயாரிப்பாளர், நடிகர் K C பிரபாத் அந்த திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் கருணா ராஜா அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது எனக்கு நெஞ்சு வலிப்பது போல் இருக்கிறது என கூறிய உடன் K C பிரபாத் அவர்களை உடனடியாக நிர்வாக தயாரிப்பாளர் கருணா ராஜா தனது காரில் ஏற்றிக்கொண்டு ANN மருத்துவமைனையில் முதல் உதவிக்காக அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் தயாரிப்பாளர் K C பிரபாத் பில்லா பாண்டி திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட உலகில் தயாரிப்பாளராக கால்பதித்தார்.

அந்த பில்லா பாண்டி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிகராக கலக்கியிருந்தார்.

தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, அங்காரகன் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது கருப்பு பெட்டி எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் நடிகர் K C பிரபாத் தற்போது பல திரைப்படங்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில்  நடித்துக் கொண்டிருக்கும் இரவு நேர படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது, திடீரென இதயத்தில் வலி ஏற்பட, அவரை ANN மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிம்ஸ் மருத்துவமனையில் மாற்றப்பட்டு இதயத்தில் அடைப்பு இருப்பதால் உடனடியாக அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யபட்டு, உடல்நலம் தேறி, சிசிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார்.

தற்போது அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைப்பட உலகில் உள்ள பிரபலங்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் நடிகர் K C பிரபாத் முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ள “கருப்பு பெட்டி” திரைப்படம் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.