‘குற்றம் புதிது’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, நிழல்கள் ரவி, ராமச்சந்திரன், மதுசூதன ராவ், பிரியதர்ஷினி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- நோவா ஆர்ம்ஸ்ட்ராங்.

ஒளிப்பதிவாளர் :-  ஜேசன் வில்லியம்ஸ்.

படத்தொகுப்பாளர் :- எஸ். கமலா கண்ணன்.

இசையமைப்பாளர் :- கரண் பி. குருபா.

தயாரிப்பு நிறுவனம் :- ஜி கே ஆர் சினி ஆர்ட்ஸ்.

தயாரிப்பாளர் :- தருண் விஜய்.

ரேட்டிங் :- 3.5./5.

காவல்துறை துணை ஆய்வாளரான தந்தை மதுசூதனராவ்  வெளியில் சென்ற மகள் கதாநாயகி சேஷ்விதா கனிமொழி இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் தந்தை போன் செய்து கேட்கிறார்.

தந்தையிடம் கதாநாயகி சேஷ்விதா கனிமொழி ஆட்டோவில் வந்து விடுகிறேன் என்று தந்தையிடம் தகவலை கூறுகிறார்.

இந்த நிலையில் கதாநாயகி சேஷ்விதா கனிமொழி வீடு வந்து சேரவில்லை.

மறுநாள் காலையில் ஒரு இளம் பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கிறது.

திடீரென தலைமறைவான ஆட்டோ டிரைவர் ராம்ஸ் ஆட்டோவில் ரத்தக்கரை  இருப்பதால் அந்த ஆட்டோ டிரைவர் ராம்ஸ் மீது சந்தேகம் ஏற்படுகிறது.

ஆட்டோ டிரைவர் ராம்ஸ்  தங்கி இருந்த அறைக்கு பக்கத்து அறையில் கதாநாயகன் தருண் விஜய் தங்கி இருக்கிறார்.

கதாநாயகன் தருண் விஜயை காவல்துறையினர் கைது செய்து அவரை விசாரிக்க இவன் கொலை செய்திருக்க மாட்டான் என அவனை வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள்.

திடீரென ஒரு நாள் அந்த கொலையை நான் தான் செய்தேன் என காவல்துறையினரிடம் கதாநாயகன் தருண் விஜய் சரண்டர் ஆகிறார்.

காவல்துறையினரின் விசாரணையில் இந்த ஒரு கொலை மட்டுமல்ல இன்னும் இரண்டு கொலைகள் செய்திருக்கிறேன் என்று கதாநாயகன் தருண் விஜய் கூறுகிறார்.

கதாநாயகன் தருண் விஜய் கொலை செய்ததாக கூறும் இரண்டு நபர்கள் உயிருடன் இருக்க காவல்துறையினருக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது.

இந்த நிலையில் கதாநாயகன் தருண் விஜய் செய்யாத கொலைக்கு நான் தான் கொலை செய்தேன் என கூறுவதற்கான காரணம் என்ன?

கதாநாயகி சேஷ்விதா கனிமொழி கொலை செய்தது யார்? கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தார்களா? செய்யவில்லையா? என்பதுதான் இந்த “குற்றம் புதிது” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த குற்றம் புரிதல் திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக தருண் விஜய் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் நடித்திருக்கும் தருண் விஜய் நடிப்புக்கு புதியவர்  மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்ற போன்ற நடிப்பின் மூலம் தான் செய்த கொலைகளை பற்றி காவல்துறையினரிடம் விளக்கும் காட்சிகளில் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் பேசும் காட்சிகளில் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கிறார்.

இந்த குற்றம் புதிது திரைப்படத்தில் கதாநாயகியாக கதாநாயகி சேஷ்விதா கனிமொழி நடித்துள்ளார்.

தன் மீது நடந்த பாலியல் வன்கொடுமையை அத்துமீறலை  பழிவாங்கும் விதமான தன்னுடைய காதலனுடன் இணைந்து ஒரு கொலையை செய்துவிட்டு அந்தக் கொலையை மறைக்க முயற்சிக்கும் நடிப்பு மிக அருமையாக இருக்கிறது.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராமச்சந்திரன் என்கின்ற ராம்ஸ் பாலியல் வன்முறைக்கு ஏற்றவாறு மிகவும் சிறப்பான வில்லனுக்கான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகன் தருண் விஜய் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிழல்கள் ரவி, கதாநாயகி சேஷ்விதா கனிமொழி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதுசூதன ராவ், சேஷ்விதா கனிமொழி தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியதர்ஷினி, அனைவரும் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு மூலம் இந்த திரைப்படத்தை தரம் உயர்த்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் கரண் பி. குருபா இசையில் பாடல்கள் பின்னணி இசையில் திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படங்களில் வழக்கமான கலைகளாக அல்லாமல் மிகவும் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் நோவா ஆர்ம்ஸ்ட்ராங்.

மொத்தத்தில் குற்றம் புதிது திரைப்படம் ரசிகர்கள் ரசிக்க வைக்கும்.

error: Content is protected !!