‘மண்டாடி’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :-  சூரி,  சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய் சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், ஸ்டன்ட் சிவா, ராம்ஸ், பத்மன், ஆடுகளம் முருகதாஸ், கிருத்திகா பாலசுப்பிரமணியன், கிரிஷ் ஹாசன், ரேகா குமணன், அருண் குமார் எம், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மதிமாறன் புகழேந்தி.

ஒளிப்பதிவாளர் :- ஆர். கதிர் ISC.

படத்தொகுப்பாளர் :- பிரதீப் ஈ. ராகவ்.

இசையமைப்பாளர் :- ஜி.வி. பிரகாஷ் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட்

தயாரிப்பாளர்கள் :- எல்ரெட் குமார், வி. மணிகண்டன்.

மக்கள் தொடர்பு :- ரேகா.

வெளியீட்டு தேதி :- 10 செப்டம்பர்  2026.

ரேட்டிங் :-  3.75/5.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அருகில் உள்ள  முகவைப்பட்டினத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மரப் போட்டி ஊரே ஒன்று கூடி  மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பாய்மரப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தனது குரு சத்யராஜ்யிடம்  கதாநாயகன் சூரி, வில்லன் சுஹாஸ், பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையில் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக தனது முகவைப்பட்டினத்தில் சொந்த ஊரை மறந்து விட்டு  சென்னையிலேயே தங்கி கதாநாயகன் சூரி வேலை பார்த்து வருகிறார்.

இதற்கிடையில் தனது முன்னாள் காதலி கதாநாயகி மகிமா நம்பியார் மகனை காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி மீண்டும் கதாநாயகன் சூரியின் சொந்த ஊரான முகவைப்பட்டினத்திற்க்கு வருகிறார்.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக கதாநாயகன் சூரி கைவிட்ட பாய்மர படகு போட்டியில் மீண்டும் கலந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு கதாநாயகன் கதாநாயகன் சூரி பாய்மர படகு போட்டியில்  கலந்து கொள்வதற்கான காரணம் என்ன?,

பாய்மர படகு போட்டியில் கதாநாயகன் சூரி, வில்லன் சுஹாஸ், வென்றது யார்?,

இறுதியில் பாய்மர படகு போட்டியை மீண்டும் கதாநாயகன் சூரி கையில் எடுக்க என்ன காரணம்? என்பதுதான் இந்த ‘மண்டாடி’ மீதிக்கதை.

இந்த ‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த மண்டாடி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சூரி தன்னுடைய வழக்கமான நகைச்சுவை நடிகர் பிம்பத்தை முற்றிலும் ஒதுக்கி விட்டு உடல் மொழி, கோபம், வலி, அமைதி, போராட்டம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

குறிப்பாக கதையின் நாயகனாக நடித்திருக்கும் சூரி கடலில் நடக்கும் பாய்மர படகு போட்டியும் அதற்காக மேற்கொள்ளும் பயிற்சிகளும் முழுக்க சாகசம் கடல் மற்றும் படகு தொடர்பான காட்சிகளில் அவர் கொடுக்கும் உடல் உழைப்பு திரையில் தெரிகிறது.

இந்த ‘மண்டாடி’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக மகிமா நம்பியார், நடித்துள்ளார்.

கதையின் நாயகியா நடித்திருக்கும் மகிமா நம்பியார் கொடுக்கப்பட்ட வேலையை மிக சிறப்பாக செய்திருக்கிறார்.

தெலுங்கு நடிகராக இருந்தாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஹாஸ் தமிழில் மொழியை உணர்ந்து மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

சத்யராஜின் அனுபவ நடிப்பு கை கொடுத்து இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மிதுன் ஜெய் சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், ஸ்டன்ட் சிவா, ராம்ஸ், பத்மன், ஆடுகளம் முருகதாஸ்,  கிருத்திகா பாலசுப்பிரமணியன், கிரிஷ் ஹாசன், ரேகா குமணன், அருண் குமார் எம  அனைத்து நடிகர் நடிகைகள் கச்சிதமான தேர்வு.

ஒளிப்பதிவாளர் :- ஆர். கதிர் ISC. ஒளிப்பதிவு மூலம் கடலை வெறும் பின்னணியாக  காட்டாமல், கதையின் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகவே கையாள முயற்சி செய்திருப்பது மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக தெரிகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் படகு போட்டிக் காட்சிகளில் கடலின் பரப்பு, வேகம் மற்றும் ஆபத்து ஆகியவற்றை உணர வைப்பது ஒளிப்பதிவின் பெரிய சாதனை.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் திரைப்படத்தின் ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிக் காட்சிகளுக்கு துணையாக உள்ளது.

குறிப்பாக போட்டிக் காட்சிகளில் பின்னணி இசை tension-ஐ உயர்த்துகிறது.

தமிழ் திரைப்பட உலகில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு கதைக்களத்தில் அனைத்து அம்சங்களும் உள்ளடக்கிய காட்சிகளை நேர்த்தியான திரைக்கதை புதுமையான காட்சிகள் படத்துக்கு கிளைமாக்ஸ் காட்சி பலம் சேர்க்கும் வகையில் கவனிக்க வைத்துள்ளார் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி.

மொத்தத்தில், இந்த ‘மண்டாடி’ திரைப்படம் மக்கள் மனதில் மகுடம் சூட்டியது.

error: Content is protected !!