செம்பியன் மாதேவி திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- லோக பத்மநாபன், அம்ச ரேகா, ஜெய் பீம் மொசக்குட்டி, மணிமாறன், ரெஜினா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- லோக பத்மநாபன்.
ஒளிப்பதிவாளர் :- கே.ராஜசேகர்.
படத்தொகுப்பாளர் :- ராஜேந்திர சோழன்.
இசையமைப்பாளர் :- லோக பத்மநாபன்.
தயாரிப்பு நிறுவனம் :- 8 ஸ்டுடியோஸ் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- லோகா பத்மநாபன்.
ரேட்டிங் :- 1.5./5.
செம்பியன் என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்படுகிறார்.
இதற்கிடையே, படுகொலை செய்யப்பட்ட இறந்தவரின் தங்கையான கதாநாயகி அம்ச ரேகாவை கதாநாயகன் லோக பத்மநாபன் உயிருக்கு உயிராய் காதலித்து வருகிறார்.
ஆரம்பத்தில் ஜாதி பாகுபாட்டுக்கு பயந்து கதாநாயகன் லோக பத்மநாபன் மேல் ஜாதி சேர்ந்தவர் என அவருடைய காதலுக்கு கதாநாயகி அம்ச ரேகா எதிர்ப்பு தெரிவிக்க, ஒரு கட்டத்தில் கதாநாயகன் லோக பத்மநாபன் மீது மிகப்பெரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டு காதலிக்க ஆரம்பிக்கிறார்.
காதலின் காரணமாக இருவருகளுக்குள் நெருக்கம் அதிகரிக்க, இருவரும் உடல் ரீதியாக உறவாடி விடுகிறார்கள்.
கதாநாயகன் லோக பத்மநாபனுடன் உடல்ரீதியாக உறவாடிய காரணத்தால் கதாநாயகி அம்ச ரேகா கர்ப்பமாகி விடுகிறார்.
கர்ப்பமான கதாநாயகி அம்ச ரேகா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கதாநாயகன் லோக பத்மநாபனிடம் தன்னை எப்படியாவது திருமுறை செய்து கொள்ள வேண்டும் என கேட்க, தற்போது என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது ஆகையால் இந்த குழந்தையை கலைத்து விடலாம் என கூறுகிறார்.
கதாநாயகி அம்ச ரேகா என்ன செய்வதென்று தெரியாமல் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் காவல் நிலையத்துக்கு செல்வேன் என கூறுகிறார்.
கதாநாயகன் லோக பத்மநாபன் தடுமாறுவதோடு, தனது மேல் ஜாதி சேர்ந்த தன் நண்பர்களிடம் உதவியை நாடுகிறார்.
கதாநாயகன் லோக பத்மநாபன் பிரச்சனையாக பார்ப்பதை விட்டுவிட்டு ஜாதி வெறி பிடித்த நண்பர்கள் கதாநாயகி அம்ச ரேகாவை கொலை செய்ய திட்டம் போட, இந்த கொலைகார கும்பலிடம் இருந்து கதாநாயகி அம்ச ரேகா உயிர் பிழைத்தாரா? உயிர் பிழைக்கவில்லையா?, கதாநாயகன் லோக பத்மநாபன் கதாநாயகி அம்ச ரேகாவின் காதல் கைகூடியதா? கை கூட வில்லையா? என்பதுதான் இந்த செம்பியன் மாதேவி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த செம்பியன் மாதேவி திரைப்படத்தில் கதாநாயகனாக லோக பத்மநாபன் நடித்திருக்கிறார்.
திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கி, இசையமைத்து தயாரித்தும் இருக்கிறார்,
கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் லோக பத்மநாபன், வீரா என்ற கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.
இந்த செம்பியன் மாதேவி திரைப்படத்தில் கதாநாயகியாக அம்ச ரேகா நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அம்ச ரேகாவுக்கு கதாநாயகிக்கான கதாபாத்திரத்திற்கு பொருந்துவதோடு, கொடுக்கப்பட்ட வேலையை மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஜெய்பீம் மொசக்குட்டியின் கள்ள காதல் தொடர்பான லீலைகள் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.
மணிமாறன், ரெஜினா என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.ராஜ சேகரின் ஒளிப்பதிவு மூலம், காட்சிகளை எளிமையான முறையில் படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் லோக பத்மநாபன் இசையில், பாடல்கள் சுமாராக இருக்கிறது.
பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து இருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ராஜேந்திர சோழனின் படத்தொகுப்பு மிகச்சிறப்பாக உள்ளது.
திரைப்படத்தில் திரைக்கதைக்கு என்றவாறு வசனங்களும் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் லோக பத்மநாபன்,
செம்பியன் மாதேவி திரைப்படத்தில் நடிகர் மற்றும் நடிகைகள் ஒப்பனை சுண்ணாம்பு அடித்தது போல் மகா மட்டமாக இருப்பது மட்டுமல்லாமல் மற்றும் பின்னணி குரல் மொத்த திரைப்படத்தின் மிக்ஸிங் இந்தத் திரைப்படத்தில் மொத்தமாக டெக்னிக்கல் அனைத்து விஷயங்களும் மிகவும் மட்டமாக இருக்கிறது.
மொத்தத்தில், ‘செம்பியன் மாதேவி’ திரைப்படம் அரைவேக்காடு.