நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை 25 நவம்பர் 2021
நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிலம்பரசன் டிஆர் நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் மாநாடு.
இந்த மாநாடு திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
சிலம்பரசன் டிஆர், கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா, உதயா, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
தெலுங்கில் ‘தி லூப்’ என்ற பெயரில் இன்று நவம்பர் 25 தேதி ரிலீசாகிறது.
தமிழகத்தில் ‘மாநாடு’ சிறப்பு காட்சிக்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றும் தீர்ந்துவிட்டன.
இந்த திரைப்படம் இன்று நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் திடீர் என தள்ளி வைப்பதாக அறிவித்தார் சுரேஷ் காமாட்சி. அறிவித்த நேரம் 24/11/2021 மாலை 5.51மணி்.
அவரின் ட்விட்டர் பதிவில்..
நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்.. ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.”
என ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இவையில்லாமல் மாநாடு திரைப்படத்திற்கான கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை பஞ்சாயத்து முற்றியதாகவும் கூறப்படுகிறது.
நேற்று 11.30 மணியளவில் ‘மாநாடு’ திரைப்படத்திற்கான பைனான்சியருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை எழுந்தது.
அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதனால் திட்டமிட்டபடி திரைப்படம் நவம்பர் 25 தேதி வெளியாகும் என தெரிய வந்தது.
இயக்குனர் வெங்கட் பிரபு.. ‘மாநாடு’ வெளியாகும் என அறிவித்தார்.
இதனையடுத்து தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் உறுதி செய்யப்பட்டன.
ரசிகர்களும் கொண்டாட்டங்களுடன் காத்திருந்தனர்.
ஆனாலும் மாநாடு திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் என மீண்டும் பிரச்சினை ஆரம்பமானது.
பேச்சுவார்த்தை தொடங்கியது.
எனவே தமிழகம் முழுவதும் அதிகாலை 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
இதனால் திரையரங்குகளில் ரசிகர்கள் மிகவும் கொந்தளித்தனர்.
காவர்துறையினர் & பவுன்சர்கள் ரசிகர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.
சில திரையரங்குகளில் கலாட்டாக்கள் நடைபெற்றன.
ரிலீஸ் தொடர்பான KDM பிரச்சினை பேசப்பட்டது.
இந்த KDM பிரச்னையால் திரைப்படம் இன்று காலை வெளியாகவில்லை.
இந்த KDM-தான் பாஸ்வேர்டு. இது வந்தால்தான் ஒரு திரைப்படத்தை தியேட்டரில் திரையிடவே முடியும்.
ஆரம்ப காலங்களில் படப்பெட்டி & படச்சுருளுக்காகக் காத்திருக்கும் திரையரங்குகள் இன்று KDM-ஐ எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
பின்னர் ஒரு வழியாக 25/11/2021 காலை 7 மணியளவில் KDM பிரச்சினை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இன்று காலை 7 மணி முதல் ‘மாநாடு’ திரைப்படத்தை திரையிட அனுமதி கிடைத்துள்ளது.
இது குறித்து காலை 7.15 மணிக்கு மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டார்.
Everything ok. Sry for the trouble the fans crossed. Nw its our time. God s great. Thnks to everyone who stood for me. #Maanaadu
— sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2021











