“லேபர்’ திரைப்படம் தமிழர்களை இந்தி கற்று கொள்ள சொல்கிறதா .?!
சென்னை 25 டிசம்பர் 2021
“லேபர்’ திரைப்படம் தமிழர்களை இந்தி கற்று கொள்ள சொல்கிறதா .?!
கட்டிட தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கை முறைகளையும் மிகவும் யதார்த்தமாக பதிவு செய்துள்ள திரைப்படம் ‘லேபர்’.
குடிகாரர்களால் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் சீரழிவதையும்.
கூடவே திருநங்கையரின் வாழ்க்கை முறையையும் இதுவரை யாரும் சொல்லாத விதத்தில் , பேசாத பதத்தில் பெரிய அளவில் பேசி இருக்கும் படம் தான் ‘லேபர்’
இதில் கதை நாயகராக முத்து, கதை நாயகியாக சரண்யா ரவிச்சந்திரன் இருவருடன் ஆறுமுக முருகன், திருநங்கை ஜீவா சுப்ரமணியன், பெரோஸ்கான், கமல்… உள்ளிட்ட இன்னும் சிலர் நடித்துள்ளனர்.
‘ராயல் பார்ச்சுனா கிரியேஷன்ஸ்’ தயாரித்துள்ள , இப்படத்திற்கு கணேஷ்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்
நிஜில் தினகரன் இசையமைத்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவும் செய்து சத்தியபதி இயக்கியுள்ளார்.
‘லேபர்’ திரைப்படத்திற்கு சமீபமாக ட்ரைலர் வெளியீட்டு விழா தயாரிப்பாளர் சங்க பிரதிநிதி கே.ராஜன் தலைமையில் சென்னை சாலி கிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இயக்குநர் சங்க பிரதிநிதிகள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு திருமலை உள்ளிட்டோர்., கலந்து கொண்ட ‘ லேபர்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தில் ., இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் கதாநாயகி , உடன் இருக்கும் ஒரு வட இந்திய தொழிலாளியைப் பார்த்து “எனக்கு நீ இந்தி கற்றுத்தருகிறாயா .?!’
என கேட்பது போன்று வரும் வசனத்தால்.
இந்த படம் தமிழர்களை இந்தி கற்று கொள்ளவும் சொல்கிறதோ .?! “
என சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கும் வேளையில்., பிஜேபி பிரபலமும் நடிகையுமான காயத்ரி ரகுராமும், திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ பட இயக்குனர் மோகன்.ஜியும் இப்பட ட்ரைலரை ரீ-டுவிட் செய்து இருப்பது ., அவர்களும் இந்திக்கு துணை போகிறார்களோ .?!
எனும் சர்ச்சையையும் பரபரப்பையும் கிளப்பி விட்டுள்ளது கோடம்பாக்கத்தில் !
இப்படி , சர்ச்சைகளுடன் கூடிய எதிர்பார்ப்புகளுடன் வரும் டிசம்பர் – 31ம் தேதி இந்த வருடத்தின் கடைசி நாளில் திரைக்கு வர இருக்கிறது ‘லேபர்’.











