சூப்பர் ஸ்டாருடன் மோத தயாராகும் அல்டிமேட் ஸ்டார்?

சென்னை 24 மே 2021

சூப்பர் ஸ்டாருடன் மோத தயாராகும் அல்டிமேட் ஸ்டார்?

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கால் படப்பிடிப்பு தாமதமாவதால், வலிமை திரைப்படத்தை திட்டமிட்டபடி வெளியீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது

நேர்கொண்ட பார்வை திரைப்படத்துக்கு பிறகு நடிகர் அஜித்குமார் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார்.

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அடுத்த கட்டமாக வெளிநாடுகளில் படமாக்க வேண்டிய சண்டை காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது.

இந்த காட்சிகளை எடுத்து விட்டு ‘டப்பிங், எடிட்டிங், ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ்’ உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை தொடங்க இருந்த நிலையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திரைப்படம் முடக்கி உள்ளது.

இதனால் திட்டமிட்டபடி திரைப்படத்தை வெளியீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை மே 1-ந் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த படக்குழு, பின்னர் அதனை கொரோனாவால் ஊரடங்கு உத்தரவால் தள்ளி வைத்து விட்டனர் படக்குழுவினர்.

ஆகஸ்டு மாதம் வலிமை திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்து இருந்தனர்.

தற்போதைய நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

ஆதலால் வலிமை திரைப்படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறார்களாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வலிமை திரைப்படமும் அந்த ரேஸில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது..

CLOSE
CLOSE
error: Content is protected !!