அன்சார்டட் (ENGLISH) திரை விமர்சனம் ரேட்டிங் 3 / 5

நடிகர் நடிகைகள்  – டாம் ஹாலண்ட், மார்க் வால்ல்பெர்க், அன்டோனியோ பண்டேராஸ், சோபியா அலி, டாட்டி கேப்ரியல், ஸ்டீவன் வாடிங்டன், பிங்கி மோலி, டைர்னன் ஜோன்ஸ், ரூடி பாங்கோவ், ஜேசஸ் எவிடா, ஜார்ஜியா குட்மேன், டியர்மெய்ட் முர்தாக், ஜோசப் பால்டெர்ராமா, செரீனா போசாடினோ, அலனா போடன், ஜொனாதன் ஃ பைலா, அந்தோணி தாமஸ், பீட்டர் சீடன்-கிளார்க், ராபர்ட் மாசர், கார்மே கேப்டெட், எஸ்கிந்திர் டெஸ்ஃபே, மானுவல் டி பிளாஸ், ஜூலியா ஷூனேவிச், அலோயிஸ் நாப்ஸ், பாட்ரிசியா மீடன், நோலன் நார்த், மாட் பார்க்லி, ஜிம்மி ஹார்ட், பிரட் ப்ரேட், கார்லோ கிட்ஸ்லிங்கர், பிலோ அஸ்பேக், சாரா பெட்ரிக்,
மற்றும் பலர்.

இயக்கம் – ரூபன் பிளீஷர்.

ஒளிப்பதிவு – சுங்-ஹூன் சுங்..

படத்தொகுப்பு – கிறிஸ் லெபென்சன், ரிச்சர்ட் பியர்சன்.

இசை – ரமின் ஜாவாதி.

தயாரிப்பு – கொலம்பியா பிக்சர்ஸ், பிளேஸ்டேஷன் புரொடக்ஷன்ஸ், அட்லஸ் என்டர்டெயின்மென்ட்,
ஆராட் புரொடக்ஷன்ஸ்

ரேட்டிங் – 3 / 5

 

 

மெஜல்லன் கடற்பயணம் (Magellan Expedition) குறித்த மேப் ஒன்றைத் திருட முற்படும்போது டிரேக் சகோதரர்கள் இருவரும்
மாட்டிக் கொள்கிறார்கள் .

காவல்துறையிடம் இருந்து தப்பிக்க, மூத்த சகோதரன் சாம் டிரேக் தன் 10 வயது சகோதரான நாதன் டிரேக்கைப் பிரிந்து செல்ல நேருகிறது.

நிச்சயம் திரும்பி வருவேன்’ என்று கூறிவிட்டு செல்லும் அண்ணன் சாமிடம் இருந்து தம்பி நாதனுக்கு வெறும் போஸ்ட்கார்டுகள் மட்டுமே வருகின்றன.

15 வருடங்கள் கழித்து, பார்டெண்டராக வேலை செய்யும் தம்பி நாதனுக்கு, சாமின் நண்பர் விக்டர் சல்லிவன் அறிமுகமாகிறார்.

மெக்கலன் திரட்டிய 500 ஆண்டுகளுக்கு முன்பான மான்காடா மாளிகையின் தங்கப் புதையல், பல ரத்த காவுகளை வாங்கியும் மீட்டெடுக்கப்படாமல் உள்ளது.

இந்த தங்கத்துக்கு சரியான வாரிசுகள் தான் என நினைக்கும் சாண்டியாகோ மான்காடா, தனது குடும்ப பாரம்பரியத்தை மீட்க நினைக்கிறார்.

அதேநேரம் பல பில்லியன்கள் மதிப்புள்ள அந்த தங்கத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறது சுல்லி – நேட் – க்ளோயி கூட்டணி.

தங்களிடம் இருக்கும் துப்புகளைக் கொண்டு உலகின் மிக பழமையான மர்மங்கள் நிறைந்த அந்தப் புதையலை இரு தரப்பும் எப்படி மீட்கிறது.

சாம் விட்டுச் சென்ற மெஜ்ஜலன் கடற்பயணத்தின் புதையலைத் தேடும் சாகசப் பயணத்தை நாம் இருவரும் தொடரவேண்டும் என்றும், அதன் மூலம் சாமை கண்டுபிடிக்கலாம் என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

இருவரும் தங்களின் சாகசத்தைத் தொடங்க, அவர்களின் வழியில் நண்பர்களும், நண்பர்களின் போர்வையில் துரோகிகளும் வருகிறார்கள்.

பல சவால்களையும், சாகசங்களையும் கடந்து இவர்கள் இருவரும் புதையலை எடுத்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த அன்சார்டட்
திரைப்படத்தின் மீதி கதை.

ஸ்பைடர்மேன்’ஆகப் பார்த்துப் பழகிய டாம் ஹாலண்ட் இதில் கொஞ்சம் சீரியஸ் முகம் காட்டியிருக்கிறார்.

காமெடி டிபார்ட்மென்ட்டைக் கூட சீனியரான மார்க் வால்பெர்க்கிற்குத் தாரை வார்த்துவிட்டு நாதன் டிரேக்காக கதாபாத்திரத்தில் பொருந்திப் போயிருக்கிறார்.

ஆனால், அவருடைய குரலும், உடல்மொழியும் மட்டும் நமக்கு இன்னமும் ஸ்பைடர்மேனைத்தான் படம் பார்க்கும் நமக்கு கண்முன் தெரிகிறார்.

இருந்தும், 25 வயதேயான இளம் நடிகர், கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்றவாறு தன் உடலையும் (ஃபிட்னெஸ்) மாற்றியிருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம்..

திரைப்படத்தின் இன்னொரு கதாநாயகன் மார்க் வால்பெர்க். 50 வயதான சீனியர் நடிகர் இனி தன்னால் பெரியளவில் சாகசமெல்லாம் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, தன்னால் முடிந்த அடாவடிகளை மட்டும் செய்திருக்கிறார்.

முதல் பாதி டிராமா கலகலவென நகர, மார்க்கின் கதாப்பாத்திரம் பெரியளவில் அவருக்கு உதவியிருக்கிறது.

சோபியா அலியின் கதாப்பாத்திரம் பாத்திரம் கதையை நகர்த்த உதவியிருக்கிறது.

தடம்மாறும் அவர் கதாபாத்திரத்துக்கான கிராஃப், அதற்கு அவரின் நடிப்பு போன்றவை சிறப்பாக நடித்துள்ளார்.

திரைப்படத்தின் வில்லனாகப் புகழ்பெற்ற ஸ்பெயின் நடிகர் ஆண்டானியோ பெண்டாரஸ்.

ஸ்பை கிட்ஸ் படத்தொடர், தி ஸ்கின் ஐ லிவ் இன், ஒரிஜினல் சின் போன்ற படங்களின் மூலம் உலக அளவில் கோலோச்சியவரை இதில் ஏக பில்டப் மட்டுமே கொடுத்து கடைசியில் வேஸ்ட் செய்திருக்கிறார்கள்.

டூம்ப் ரெய்டர், அசாசின்ஸ் க்ரீட், பிரின்ஸ் ஆஃப் பெர்சியா, ரெசிடன்ட் ஈவில், ஹிட்மேன் உலக வரிசையில் மற்றுமொரு உலகப் புகழ்பெற்ற ‘அன்சார்டட்’ (Uncharted) வீடியோ கேமை திரைப்படமாக மாற்றியிருக்கிறார்கள்.

நாட்டி டாக்’ என்ற நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கேமை ஒரு சாகசப் படமாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார் ‘ஜோம்பி லேண்ட்’ படப்புகழ் இயக்குநர் ரூபென் ஃப்ளெச்சர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இரண்டு மணிநேரப் படத்தில், இரண்டாம் பாதியை க்ளூக்களை வைத்துப் புதையலைக் கண்டறியும் ஒரு கேம் போலவே வடிவமைத்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார்.

குறிப்பாக க்ளைமேக்ஸில் பழங்கால இரண்டு பிரமாண்ட கப்பல்களை அந்தரத்தில் மிதக்கவிட்டுச் செய்யும் சாகசங்கள் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜ லொக்கேஷன்களில் ஆக்‌ஷன் சீன்கள் படம்பிடிக்கப்பட்டன
என்றார்கள்.

திரைக்கதையில் சுல்லி, நேட் கேரக்டர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரியை கொண்டுவந்திருக்கும் இவர்கள், பூனை போன்ற சில காமெடி காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்று தோன்ற வைக்கிறது.

அதேபோல் புதையல் வேட்டையில் இருந்த ஓர் ஆதாரத்தையும் நேட் – சுல்லி கூட்டணி திருடிய பிறகும், மொன்காடா ஆட்கள் எப்படி சரியான இடத்தை தேடி வந்தார்கள் என்பது போன்ற சில குளறுபடிகள் திரைக்கதையின் குறைபாடுகளை சுட்டி காண்பிக்கிறது.

ஆனால், தமிழ் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ள வசனங்கள் இந்தக் குறைகளை மறக்கடிக்கின்றன.

குறைகளை தாண்டி, ஹாலிவுட்டுக்கே உரித்தான பாணியில் விஎப்எக்ஸ் ரீதியாக பிரம்மாண்டம் காண்பித்து, ஒரு கேம் சீரிஸில் உள்ள ஈடுபாட்டை திரைப்படமாக பூர்த்தி செய்ய சிறப்பான முயற்சி.

மொத்தத்தில் ‘அன்சார்டட்’ திரைப்படம் மிளிர்கிறது.

error: Content is protected !!