யாரோ திரை விமர்சனம் ரேட்டிங் – 2.5/5

நடிகர் நடிகைகள்  – வெங்கட் ரெட்டி, உபாசானா, பாலா, ராஜன் கிருஷ்ணமூர்த்தி, சம்ராகினி,  துரைராஜ், மற்றும் பலர்.

இயக்கம் – சந்தீப் சாய்.

ஒளிப்பதிவு – கே.பி.பிரபு

படத்தொகுப்பு – அனில் கிரிஷ்.

இசை – ஜோஸ் பிராங்க்ளின்.

தயாரிப்பு – டேக் ஓகே புரொடக்ஷன்ஸ்.

ரேட்டிங் – 2.5/5

இந்த ‘யாரோ’ திரைப்படம் யாருக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் என சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும்.

திரைப்படம் பார்க்கும் ரசிகனுக்கும் திரைப்படம் புரிய வேண்டும்.

ரசிகர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள் என நினைத்து ஒட்டு மொத்த திரைப்படத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

‘சைக்கோ’ கதை என்றால் வித்தியாசமான திரைப்படமாக வந்துவிடும் என பல அறிமுக இயக்குனர்கள் மனதில் ஒரு எண்ணம் இருக்கிறது.

அதுதான் இந்த திரைப்படத்தின் இயக்குனர் சந்தீப் சாய்க்கு இருக்கிறது.

குறும்படமாக பார்ப்பதென்றால் கூட பொறுத்துக் கொள்ளலாம், முழு நீளப் திரைப்படம் என்றால் பொறுமை வேண்டுமே ரசிகர்களுக்கு ரசிப்பதற்கு.

நிஜமான நடைமுறை வாழ்க்கைக்கும் இயல்புக்கும் மீறிய கற்பனையான மன ஓட்டத்திற்கு இடையிலான மனித போராட்டம் தான், இந்த யாரோ திரைப்படம்.

சிறு வயதிலேயே தந்தையால் அதிக கண்டிப்புடன் வளர்க்கப்பட்டவர் கதாநாயகன் வெங்கட் ரெட்டி.

சென்னையில் ஒரு பெரிய பங்களாவில் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இண்டஸ்ட்ரியல் டிசைனிங் இளைஞன் ஒருவனுக்கு அவனது வீட்டில் யாரோ அத்து மீறுவது போல தெரிகிறது .

பின் அதுவே பேய் போல தெரிகிறது .
.
அந்த வீட்டிற்குள் அடிக்கடி யாரோ வருகிறார்கள் என பயப்படுகிறார்.

நண்பன் மூலமாக ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியை நாடுகிறார்.

அந்த வீட்டில் அடுத்தடுத்து என்னவெல்லாமோ நடக்கிறது.

அதெல்லாம் ஏன் நடக்கிறது ? எதற்காக நடக்கிறது ? என்பது தான் இந்த யாரோ திரைப்படத்தின் மீதிக் கதை.

யாரோ திரைப்படத்தில் சைக்கோத்தனமான கதாநாயகனாக நடிகர் வெங்கட் ரெட்டி அறிமுகமாகியிருக்கிறார்

அறிமுக நடிகர் வெங்கட் ரெட்டி பயம், தவிப்பு என
முதல் திரைப்படத்திலேயே ஓரளவிற்கு நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

ஆனாலும், அதிக ஆர்வத்துடன் நடித்திருக்கிறார் வெங்கட் ரெட்டி என்பது காட்சிக்குக் காட்சி தெரிகிறது.

இந்த யாரோ திரைப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்த வெங்கட் ரெட்டி ஆங்கிலப் திரைப்பட கதாநாயகன் போல் அற்புதமாக நடித்துள்ளார்.

முதல் திரைப்படத்தில் அத்தனை நவரசங்களையும் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்

சில காட்சிகளிலேயே வந்தாலும் கதாநாயகியாக நடித்த உப்சனா மனதில் பதிகிறார்

யாரோ திரைப்படத்தின் கதாநாயகியாக உபாசானா நடித்திருக்கிறார்.

இடைவேளைக்கு முன் ஒரே ஒரு காட்சியிலும், பின்னர் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து சொல்கிறார்.

விஷுவலாக மட்டுமே திரைப்படத்தைக் கடத்திக் கொண்டு போய்விட வேண்டும் என இயக்குனர் சந்தீப் சாய். நினைத்திருக்கிறார்.

நடிகர் எஸ் ஜே சூர்யா சொல்வது போல்
இருக்கு ஆனா இல்ல, இதுதான் திரைப்படத்தின் மையக்கரு.

அதை எளிதில் புரிய வைத்திருந்தால் யாவரும் ரசிக்கும் ஒரு திரைப்படமாக வந்திருக்கும்.

இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் பின்னணி இசையில் கொஞ்சம் பயமுறுத்துகிறார்.

ஒளிப்பதிவாளர் கே.பி. பிரபு, படத்தொகுப்பாளர் அனில் கிரிஷ் இருவருக்கும்தான் இதை பரபரப்பான திரைப்படமாகக் கொடுக்க வைப்பதில் நிறைய வேலை செய்திருக்கிறார்கள்.

இன்னும் கொஞ்சம் அழுத்தமான கதாபாத்திரங்கள் மற்றும் பரபரப்பான சம்பவங்களை வைத்து எடுத்திருந்தால் யாரோ திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்திருக்கும்.

யாரோ திரைப்படம் ஒரு முறை பார்க்கலாம்.

error: Content is protected !!