வலிமை’ அப்டேட்டுக்கு உதவிய மாநாடு டீம் தளபதி பிறந்தநாளில் தல ரசிகர்களும் குஷியாக இருக்கிறார்கள்.
சென்னை 22 ஜூன் 2021
வலிமை’ அப்டேட்டுக்கு உதவிய மாநாடு டீம் தளபதி பிறந்தநாளில் தல ரசிகர்களும் குஷியாக இருக்கிறார்கள்.
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் ஏச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’.
இந்த வலிமை திரைப்படத்தில் கதாநாயகியாக ‘காலா’ ஹீரோயின் ஹூமா குரேஷி நடித்து வருகிறார்.
இந்த வலிமை திரைப்படத்தில் அஜித்குமாருக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார்
இந்த வலிமை திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாபணிபுரிந்து வருகின்றனர்.
இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார்.
இந்த திரைப்பட படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி விட்டாலும் படத்தின் பர்ஸ்ட் லுக் இதுவரை வெளியாகவில்லை.
யாரெல்லாம் அஜித்குமாருடன் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.
இதனால் அப்செட்டான அஜித்குமார் ரசிகர்கள் அடிக்கடி வலிமை அப்டேட்டை கண்ட இடங்களில் எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில் ஜூன் 21 அன்று சிங்கிள் பாடலை வெளியிட்டு அன்று மாலையில் சிலம்பரசன் டிஆரின் ‘மாநாடு’ படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.
அப்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும்போது வலிமை அப்டேட் கொடுத்தார்.
ஓபனிங் சாங் கும்தா… பாடல் என்றும் அம்மா சென்டிமெண்ட் பாடல் ஒன்றும் இருப்பதாக தெரிவித்தார்.
இதனால் அஜித்குமார் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஜூன் 22 தளபதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள் BEAST Modeல் இருக்க தற்போது அஜித்குமார் ரசிகர்களும் குஷியாக உள்ளனர்.