தமிழ் மண்ணில் வாழ்ந்து கொண்டு தமிழில் தலைப்பு வைக்க கூட மனம் வரவில்லையா தளபதி.?
சென்னை 23 ஜூன் 2021தமிழ் மண்ணில் வாழ்ந்து கொண்டு தமிழில் தலைப்பு வைக்க கூட மனம் வரவில்லையா தளபதி.?
தளபதி 65 திரைப்படத்திற்கு BEAST என பெயர் வைத்து டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டனர் படக்குழுவினர்.
நேற்று தளபதி விஜய்யின் பிறந்த நாள் (ஜூன் 22ஆம் தேதி) ரசிகர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் அவருடைய ‘தளபதி 65’வது திரைப்படமாகும்.
இந்த தளபதி 65 திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.
தளபதி 65 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த தளபதி 65 திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி 65 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இந்த இரண்டு டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களிலும் ஆங்கில எழுத்துக்களே மட்டுமே இருக்கிறது.
தலைப்பு உட்பட எங்கேயும் தமிழையே காணவில்லை. இன்று வரையில் தமிழ் வடிவமைப்பில் எதுவும் வெளியாகவில்லை.
10-12 வருடங்களுக்கு முன்பு திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு கொடுத்தது தமிழக அரசு.
அப்போது ரோபோட் என பெயர் வைக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் கூட ‘எந்திரன்’ என பெயர் மாற்றப்பட்டது.
ஆனால் சில வருடங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பிறகு வரி விலக்கு முறை விலக்கிக் கொள்ளப்பட்டது.
எனவே தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்படவில்லை.
சமீபகாலமாக நடிகர் தளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் மெர்சல், பிகில், சர்கார், மாஸ்டர் என வேறு மொழி பெயர்களே வைக்கப்பட்டன.
இப்போதும் நடிகர் தளபதி விஜய் திரைப்படத்திற்கு ‘பீஸ்ட்’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.
இரண்டு போஸ்டர்களிலும் தமிழில் ஒரு வார்த்தை கூட இல்லாமல் இருக்கிறது.
தமிழ் மண்ணில் வாழ்ந்து கொண்டு தமிழ் காற்றை சுவாசித்துக் கொண்டு தளபதி விஜய் திரைப்படங்களுக்கு ஏன் தமிழில் பெயர் வைக்கப்படுவதில்லை.
ஆனால் தமிழ் எழுத்துக்களில் எதுவும் வெளியாகவில்லை என்பதே வேதனைக்குரிய விஷயமாகும்.